Tamil Cinema : 'கொட்டாவி, ஜாம்பி, செருப்பு சபதம்' - இதெல்லாம் சினிமாவுக்கான கதையாப்பா லிஸ்ட் !

ஏம்பா இதையெல்லாமா சினிமாவுல எடுப்பீங்க..? ன்னு சிலர் முகம் சுழிச்சாலும் இந்த மாதிரியான பதிவுகளும் வரணும்னு இயக்குனர் வெற்றிமாறன் உறுதியா இருந்து வெளிக்கொண்டு வந்த படம்தான் இது.
Tamil Cinema
Tamil Cinematimepass

தமிழ் சினிமாவுல இதுவரைக்கும் காதல், கடமை, நேர்மை, தாய், தங்கை பாசம், சாதி, சமதர்மம்னு ஆயிரத்தெட்டு படங்கள் வந்திருக்கு. இதைத்தாண்டி டிபரெண்டா எதாச்சும் ஸ்டோரி பண்ணி வேர்ல்ட்டு சினிமா பக்கம் தமிழ் சினிமாவை நகர்த்த்திக்கிட்டு போய் நிறுத்தணும்னு ஏகப்பட்ட டைரக்டர்ஸ் விட்டத்தை வெறிச்சு பார்த்து, காத்துலேர்ந்து கதை தேடிட்டு இருக்காங்க..

செண்டர் பாயிண்ட் மட்டும் கெடைச்சிட்டாப்போதும்னு பேனாவும் பேடுமா உட்கார்ந்து ‘ஆல் லாங்வேஜ்’ படங்களையும் பார்த்து சில டிபரெண்ட் ஸ்டேரிஸை ரெடி பண்ணி வெள்ளித் திரையில ஓடவிட்டுட்டு இருக்கங்க. அப்படி சமீபத்துல வந்த சில படங்களைப் பார்த்துடலாம்.

1 . நண்பர்கள்கிட்ட மொக்கையா ஜோக் சொல்லி, ’ஸாரி மச்சான் காண்டாகாத சும்மா கடி ஜோக்’னு சிரிப்போம்ல. அப்டி கடி ஜோக் சொல்லி கடிக்கிறதைவிட, நிஜமாவே கடிச்சு வெச்சா என்ன ஆகும்னு மூளையில முணுக்குன்னு தோணினதுதான் ’மிருதன்’ னு ஒரு படம். ’ஜெயம்’ ரவிதான் ஹீரோ. லட்சுமி மேனன் ஹீரோயின். ஊட்டியில் இருக்கிற கெமிக்கல் பேக்டரிலேர்ந்து வர்ற கெமிக்கல் தண்ணிய, ஒரு தெரு நாய்க்கு என்ன தாகமோ தெரியலை அந்த கெமிக்கல் தண்ணிய மடக்கு மடக்குன்னு குடிக்குது.

அதனால.. அந்த தெரு நாய்க்கு கெமிக்கல் ரியாக்‌ஷன் நடந்து, அது யாரையெல்லாம் கடிக்குதோ அவங்க ஜாம்பி மிருகமா மாறிடுவாங்க. அப்படி இவன் அவனை கடிக்க, அவன் இன்னொருத்தனை கடிக்க.. இப்டி படம் முழுக்க கடி..கடின்னு கடிச்சிக்கிட்டு அலைவாங்க. அந்த ஜாம்பிகிட்டேர்ந்து மக்களையும், மருத்துவ குழுவையும் காப்பாத்துறதுதான் ஹீரோவோட வேலை.

ரோட்டுல வர்ற வண்டிகளை மடக்கி காசு வாங்காத கண்ணியமான டிராபிக் போலீஸான ’ஜெயம்’ ரவி, அந்த மருத்துக் குழுவை காப்பாத்துறேங்கிற பேர்ல ஜாம்பிகளை சுட்டுத்தள்ளுவாரு பாருங்க. அவங்களையெல்லாம் ஒண்ணுக்கு மேல ஒண்ணா அடுக்குனா இமயமலைய தாண்டும். அவ்ளோவ்..வ்..வ்.வ் பேரை சுட்டுப் பொசுக்குவாரு. ’கடி’ய வெச்சி படம் எடுத்ததால புரொடீயூசர் கையவும் கடிச்சிருக்கும்.

Tamil Cinema : மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்

2 . ஒரு மனுஷனை இதுக்கு எல்லாமாங்க வேலைய விட்டு விரட்ட, காதலிச்ச பொண்ணு கழட்டிக்கிட்டு ஓட, நண்பர்களும் கலாச்சித் தள்றத அளவுக்கு கொட்டாவி மோசமான விஷயமா என்ன..? வரும்போது ஆவ்..வ்..வ்னு வாயைத் திறந்து விடுறதை விட்டுட்டு ஒரு மணி நேரம் அடக்கி வெச்சா விடமுடியும்..? இல்ல.. இது கொட்டாவி விடும் அறைன்னு எதாச்சும் ரூம் இருக்கா..? இந்த கொடுமையெல்லாம் ’போக்கிரி ராஜா’ ங்கிற படத்துல ஹீரோவா நடிச்ச நம்ம ஜீவாவுக்குத்தான் நடந்திருக்கும்.

ஒருத்தனுக்கு திடீர் திடீர்னு கொட்டாவி வந்தா என்ன நடக்கும்..? அந்தக் கொட்டாவியோட ஃபவர்புல் வேவ்ஸ்ல அங்க இருக்கிற மத்தவங்களுக்கும் பரவி, அவங்களும் கொட்டாவியோட குட்டித் தூக்கத்தையும் போடுறாங்க இப்டி ஒரு ஸ்டோரிக்கு ஸ்கிரீன் பிளே பண்ணா எப்டி இருக்கும்னு அந்த டைரக்டர் யோசிச்சாரு பாருங்க அங்கதான் நிக்கிறாரு.

நாமகூட பஸ்ல, ஆபீஸ்ல, கார்ன்பிரன்ஸ் ஹால்லு சகட்டுமேனிக்கு கொட்டாவி விடுறதைப் பார்த்திருப்போம். அப்படி விடுற கொட்டாவி கேங் ஸ்டார்களுக்கு சப்போர்ட் பண்ணின படம்தான் கொட்டாவி ராஜா.. என்கிற ’போக்கிரி ராஜா’.

Tamil Cinema
Tamil Cinema : ஊர்ல மழையா?; யுவார் அண்ட் அரெஸ்ட் - டெம்ப்ளட்டான காட்சிகள், வசனங்கள் லிஸ்ட் !

3 . நம்ம தமிழ் சினிமாவுல ஏற்கனவே ’சரஸ்வதி சபதம்’, ’மங்கம்மா சபதம்’, சமீபத்துல ’சிவக்குமார் சபதம்’ வரைக்கும் பார்த்திருக்கோம். அதெல்லாம் நாட்டை மீட்கறதுக்கோ, கொலைக்கு கொலை பழி வாங்கவோ, காதலுக்கோ சபதம் விடுறது சகஜமான விஷயம்.

ஆனா, ஒருத்தர் ஊர் ஜனங்க முன்னாடி அடிச்சிட்டாருங்கிறதுக்காக ’அந்த ஆளை இதே ஜனங்க முன்னாடி திருப்பி அடிக்கிற வரைக்கும் கால்ல செருப்பு போடமாட்டேன்’ னு ஒரு உக்கிரமான சபதத்தை மனசுல ஏத்திக்கிட்டு.. கையில செப்பலோடவும், நெஞ்சுல வெப்பத்தோடவும் அடிச்சவரை அடிக்க அலையிற படம்தான் ’நிமிர்’.

இந்த கேட்டகிரி சபதத்தை ஒரு காமெடியன் போட்டிருந்தாக்கூட காமெடியா இருந்திருக்கும். ஹீரோ உதயநிதியே போட்டதால சர்க்கரை இல்லாத காபி குடிச்ச மாதிரி இருந்துச்சு. ஒரு தபா.. அடிச்ச சமுத்திரகனியை அடிக்க ஹீரோ வெறியோட அவர் வீட்டுக்குப் போக, அவர் துபாய்ல வேலை கிடைச்சி போயிடுறாரு.

அப்றம்.. மறுபடியும் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைங்கிற மாதிரி நடக்க, இதுக்கு இடையில சமுத்திரகனி சிஸ்டர்மேல ஹீரோவுக்கு லவ் வருது. வரணுமே.. ஆனா.. ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஹீரோ அடிப்பாரா..? கால்ல எட்டு இன்ச் செருப்பை எடுத்து மாட்டுவாரான்னு எதிர்பார்ப்பை உண்டாக்கினது என்னவோ நெசந்தாதான்.

Tamil Cinema
Tamil Cinema : இதெல்லாம் ஒரு கதையாம்மா? - தினுசான கதைகளைக் கொண்ட படங்களின் லிஸ்ட் !

4 . ஏம்பா இதையெல்லாமா சினிமாவுல கதையா எடுத்து வெளியிடுவிங்க..? ன்னு சில ஆண்களும்.. லேடீஸுங்க சிலரும்கூட முகம் சுழிச்சாலும் இந்த மாதிரியான பதிவுகளும் வரணும்னு இயக்குனர் வெற்றிமாறன் உறுதியா இருந்து வெளிக்கொண்டு வந்த படம்தான் ’மிக..மிக அவசரம்’.

ஒரு பெண் போலீஸ் யூரின் பாஸ் பண்ணமுடியாம தவிக்கிறதை அழகா சொன்ன படம். இலங்கை மினிஸ்டர் ஒருத்தருக்கு தமிழ்நாட்டு சாமியோட ஹெல்ப் வேண்டி இங்க வர்றார். அவர் வந்துட்டுப்போற வரைக்கும் பாதுகாப்பு கொடுக்கணும்னு நெனைக்கிற போலீஸ் ரோட்டுல பொதுமக்கள் ஒவ்வொருத்தரையும் நிறுத்தி கேள்வி கேட்டு, செக் பண்ணி அனுப்புறாங்க.

அந்த ஸ்ரீலங்கா மினிஸ்டர் வந்து போற வரைக்குமான செக்யூரிட்டிக்காக எல்லா இடத்துலயும் போலீஸை நிறுத்துது. பெண் போலீஸான படத்தோட ஹீரோயின் ஸ்ரீபிரியங்காவை தன் கட்டுப்பாட்டுல வெச்சிக்கணும்கிற ஆசை நிராசையானதால ஒரு பெரிய மேம்பாலம் நடுவுல நிக்க வெக்கிறாரு சபல, சேடிஸ்டான ஒரு போலீஸ் உயரதிகாரி. அப்டி காலைலேர்ந்து வெயில்ல கால்கடுக்க நிக்கிற அந்த பெண் போலீஸ் சிறுநீர் உபாதைக்குகூட போக முடியாம படுற சிரமத்தை வேற எப்படியும் சொல்ல முடியாது. அழகு..அழகு..

Tamil Cinema
Tamil Cinema : பாச மலரை மிஞ்சும் அண்ணன் - தங்கை படங்கள் - ஒரு லிஸ்ட் !

5 . இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஒரு இளைஞன் தான் விடுற குறட்டையால எப்டியெல்லாம் சிக்கி சீரழிஞ்சு செதில் செதிலா சிதையிறார்ங்கிறதை ஓட்டிக்காட்டுன படம்தான் ’குட்நைட்’. மணிகண்டன்தான் படத்தோட குறட்டை நாயகன். சாதாரண குறட்டை இல்ல. பத்துபேரோட ஒட்டுமொத்த குறட்டையையும் குத்தகைக்கு எடுத்து தன் ஒத்த வாயால வெளிப்படுத்துற கொடூரமான குறட்டை.. உட்கார்ந்த இடத்துல சட்டுன்னு தூங்கிறது கொடுப்பினை அதுவும் குறட்டையோடு தூக்கம் செம. ஆனால், அந்த ஏரியாவுல ஒரு பய இருக்கக் கூடாது.

தூங்கவும் முடியாது. அந்த அளவுக்கு சவுண்டு பிச்சுக்கும். சரி அதனாலயெல்லாம் குடும்பம் சிதையுமாங்க.. என்ங்க இது கதையா இருக்கு..? கேள்வி கேட்கிறவங்களுக்கு கதையே பண்ணி காட்டுறோம்னு காட்டியிருக்காங்க. ஹீரோ குடும்பமே காதைப்பொத்திக்கிட்டு அவஸ்த்தை படுறது, காதல் மனைவி காண்டாகி வீட்டை விட்டுப்போறதுன்னு குறட்டைய வெச்சி, விசிலடிக்கவெச்ச படம்தான் குட்நைட்.

- உத்தமபுத்திரன்.

Tamil Cinema
Tamil Cinema : 'சொர்ணாக்கா, நீலாம்பரி' - வில்லங்கமான வில்லிகளின் லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com