சேவாக் அதிரடி அர்னால்டுன்றதும் ஓப்பனிங்ல அவர் ஒன்மேன் ஆர்மியா நின்னு பண்ண ஓரங்க நாடகங்களும் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனா அதையும் தாண்டி தக் லைஃப் தமிழரசனா எதிரணிய வச்சுசெஞ்ச கெத்துதான் சேவாக்கோட ஸ்பெஷாலிட்டி. இன்னைக்கும் நாம ஞாபகம் வச்சு வியக்குற அந்த மொமெண்டுகளோட சின்ன ரீகேப்தான் இது.....
ஒருதடவ சேவாக் கவுண்டில ஆடிட்ருக்கப்போ எதிர்முனையில விக்கெட் விழுந்துட்டே இருந்துச்சு. 8-வது பேட்ஸ்மேனாக ஆடவந்த ஜேம்ஸ் ஸ்னாப் சேவாக்கிட்ட "பாகிஸ்தான் பௌலர் அப்துல் ரசாக் பழைய பந்துல Reverse Swing போட்டு இப்படி மிரட்டுகிறாரே, நீங்கதான் ஏதாவது செய்யனும்"னு சொல்ல, உடனே சேவாக் சரி "நான் பார்த்துக்கறேன், வெய்ட் அண்ட் வாட்ச்"னு சொல்லிட்டு பேட்டிங் ஆடப்போனாரு.
ரசாக் பௌலிங் போட, சேவாக் இறங்கி வந்து சிக்ஸ் அடிச்சு பாலை அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் போக வச்சுட்டாரு. அதோட நிக்காம ஜேம்ஸ்கிட்ட போய், "பார்த்தீங்களா, பந்து வெளிய போயிடுச்சு, இனி வேற பந்ததான் எடுத்தாகணும், அது பல ஓவர்களுக்கு Reverse Swing ஆகாது, கவலைபடாம விளையாடுங்க"னு அசால்ட்டா சிரிச்சுக்கிட்டே சொன்னாரு.
பாகிஸ்தான்னு வந்தாலே சச்சின் மாதிரி சேவாக்குக்கும் பரம குஷிதான். 14 டெஸ்ட் இன்னிங்ஸ்ல 91 சராசரியோட பாகிஸ்தானுக்கு எதிரா ரன் குவிச்சுருக்காரு. ஒருதடவ அக்தர் நான் ஸ்டாப்பா சேவாக்குக்கு Bouncer போட்டுட்டே இருந்தாரு. முடிஞ்ச Hook Shot ஆடு இல்லாட்டி விக்கெட்ட கொடுத்துட்டு ஓடுன்ற மாதிரியான அட்டாக் அது. ஒருகட்டத்தில Hook Shot ஆடச்சொல்லி ஒவ்வொரு பாலுக்கு ஒருதடவ நச்சரிச்சாரு.
சேவாக் ரொம்ப கூலா அங்க நின்ன ஃபீல்டர்கள்ட்ட, "அக்தர் பௌலிங் போடறாரா இல்லேன்னா பிச்சை கேட்கறாரானு" நக்கலடிக்க பாகிஸ்தான் வீரர்களே சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனாலும் அக்தர் தொடர்ந்து வம்பிழுக்கறத விடல.
சேவாக் அக்தர்ட்ட போய் "நீ முடிஞ்சா மறுமுனையில பேட்டிங் ஆடிக்கிட்டு இருக்க உங்க அப்பாவுக்கு Bouncer போடு பார்ப்போம்"னு உசுப்பேத்திவிட அக்தரும் "இந்தா போய் போடுரேன்"னு Bouncer வீச, பந்து சிக்ஸருக்குப் பறந்துச்சு, அடிச்சது யார்னா - சச்சின்.
உடனே சேவாக் அக்தர்ட்ட, "அப்ப என்னைக்குமே பெரிய மனுஷன்தான், சின்னப்பையன் என்னைக்குமே சின்னப்பையன் தான்"னு கிண்டல் பண்ணி அக்தரோட கொட்டத்தை அடக்க அக்தரோட முகத்துல ஈயாடல.
48-க்கு வந்தாலே சிங்கிள் தட்ட ஆரம்பிக்கற சேஃப் ஜோன் பிளேயர்களுக்கு நடுவுல 200, 300-ஐயே பவுண்டரி, சிக்ஸரோட எட்டுறதுதான் சேவாக்கோட ஸ்டைல். சென்னைல மேட்ச் ஆடிட்டு இருக்கும்போது சேவாக் 291 ரன்கள அடிச்சு களத்துல நின்னாரு. எல்லா ஃபீல்டர்களும் பவுண்டரி லைன்ல நிக்க சேவாக்குக்கு சிங்களா தட்டித்தட்டி 300 அடிக்கலாம் பொறுமையே இல்ல. அதுக்காக ஸ்பின்னரான ஹாரிஸ்கிட்ட ஒரு சேலஞ்ச் பண்ணாரு.
"நீ Around the wicketல வந்து பௌலிங் போடு, உன்னோட முதல் பால் சிக்ஸ் அடிக்கிறேன் பாரு"னு சொல்ல அதுல இருக்க சூழ்ச்சி புரியாம பால் ஹாரிஸும் ஒத்துக்கிட்டாரு. சொன்ன மாதிரியே பௌலிங் போட சேவாக் இறங்கி வந்து முதல் பாலையே ஸ்ட்ரெயிட்ல சிக்ஸராக்கிட்டாரு.
பாகிஸ்தான்கூட நடந்த டெஸ்ட்ல காலுக்குக் குறிவச்சே கனேரியா Yorker பந்துகளா வீச சேவாக் இன்சமாம்ட்ட பேசி Long On ஃபீல்டர முன்னால வரவச்சு அந்த திசைலயே ஒரு சிக்ஸரயும் தூக்குனாரு. சொல்லிவச்சு அடிக்கறதுல அவருக்கு இணை அவருதான்.
இப்பவும் சில ட்வீட்கள்லயும் ஏதோ ஒரு விஷயத்தப் பத்தி கருத்து சொல்றப்பவும் அவருக்குள்ள இருக்க அந்த தக் லைஃப் தமிழரசன் தடால்னு எழுந்து வந்துடுவாரு. அவர ரசிச்சுக் கொண்டாடாத ரசிகனே இருக்க முடியாதுன்றதுதான் உண்மை.