Viv Richards டைம்பாஸ்
Lifestyle

Thug Life Cricketers : கிரிக்கெட்டின் ராக்கி பாய் Vivian Richards !

பேய்ப்படம் பார்க்கறப்போ அதுல வர்ற எதிரிய எவ்வளவு தடவ சுட்டாலும் அவன் அழியாம திரும்ப எழுந்து வர்றப்போ கிளம்புற அதே திகிலை ரிச்சர்ட்ஸோட பார்வை தன்ன உணரவச்சதா சொன்னாரு.

Ayyappan

சூர்யக்குமார் யாதவோட ஹெட்மாஸ்டரா டெஸ்ட் கிரிக்கெட்டையே டி20 மாதிரி ஆடிப் பழக்கப்பட்டவரு அவரு. Thug லைஃப் ஒருபக்கம் அசர வைக்கும்னா அவரோட கில்லர் Swag Attitude கத்திய சத்தமே இல்லாம எதிரணியோட காயத்துல இறக்கும்.

பலவீனமான பௌலர்களப் பார்த்து அவங்கள குறிவச்சு ரன்கள குவிக்குற பேட்ஸ்மேன் இல்ல அவரு. மாறாக அவரோட டார்கெட்டே எதிரணியோட டான்களா அடையாளம் காணப்பட்ட பௌலர்களுக்குத்தான். Black Bradmanனு கொண்டாடப்பட்டு தலைசிறந்த பேட்ஸ்மேனா வலம்வந்த விவியன் ரிச்சர்ட்ஸோட தக்லைஃப் தருணங்கள்ல சில இங்கே.....

இன்றைய தேதில இருக்க பேட்ஸ்மேன்கள் போற ஃபிளைட்ட ஹைஜாக் பண்ணி அத 1970-கள்ல போய் ஆஸ்திரேலிய பௌலர்கள் பந்துவீசுன இடத்துல லேண்ட் பண்ணி அவங்கள பேட்டிங் பண்ண சொன்னா செவ்வாய் கிரகத்துக்கு கிளம்பிப்போற விண்வெளி வீரர் மாதிரி சகலவிதமான கேடயங்களோடதான் களமிறங்குவாங்க.

ஏன்னா அந்த பௌலிங் அவ்வளவு அச்சுறுத்தக்கூடியது. கண்ணு போகுமா, மூக்கு உடையுமா, தலையே சிதறிடுமானு உயிர் பயத்தோடயேதான் ஆட வைப்பாங்க. ஆனால், அப்படிப்பட்ட பௌலர்களக்கூட ஹெல்மெட் இல்லாம சந்திச்சதுதான் ரிச்சர்ஸோட தைரியத்துக்கான சான்று. சூயிங்கம்ம மென்னுக்கிட்டே அவரு உள்ள வர்ற தோரணையப் பார்த்தாலே எதிரணிக்கு தொடை நடுங்கும்.

ஒருதடவ இங்கிலாந்து கேப்டனான கிறிஸ் கௌட்ரே தன்னோட பிளேயிங் லெவன போட்டிக்கு முன்னாடி வாசிச்சுக் காட்டணும்ன்ற ரூல்படி ரிச்சர்ட்ஸுக்கு வாசிக்க அதுக்கு அவரு நான்கு பேர்கள வாசிச்சதும் குறுக்கிட்டு, "போதும்! வாசிக்க வேண்டாம். யாரை வேணும்னாலும் வச்சு ஆடுங்க, அது போட்டியோட முடிவ மாத்திடாது"னு கெத்தா பதில் சொன்னாரு.

இங்கிலாந்து பௌலர் க்ரேக் தாமஸ் சில பந்துகள ரிச்சர்ட்ஸ் மிஸ் பண்ணதும், "பந்து எப்படியிருக்கும்னு தெரிலயா, வட்டமா சிகப்பா இருக்கும்"னு கிண்டல் பண்ண அந்தப் பந்த ஸ்டேடியத்துக்கு வெளிய அடிச்சுட்டு, "உனக்கு அது எப்படி இருக்கும்னு தெரியும்ல, நீயே தேடிக் கண்டுபிடி"னு பதில் சொன்னாரு.

ஒருதடவ ஆஸ்திரேலிய பௌலரான ஹாக் பயத்த தூண்டனும்னே பவுன்சர வீசினார். அது பந்துனால ரிச்சர்ட்ஸுக்கு சரியான அடி விழுந்தது. வலி உயிர்போச்சு. ஆனால், ஒரு வினாடிக்குள்ள சுதாரிச்சு வலியை வெளிக்காட்டாம ஹாக்கை பார்த்து ஒரு லுக் விடுவாரு பாருங்க, அப்படியே ஹாக் ஸ்தம்பிச்சுடுவாரு. வீரம்ன்றது பயம் இல்லாத மாதிரி நடிக்கறதுன்றது இவருக்கு ஒத்து வராது. ஏன்னா அச்சம்ன்ற வார்த்தையே அவரோட அகராதி தானாகவே அழிச்சுக்கிட்ட வார்த்தை.

உன்னோட எதிரிகிட்ட உன் வலியைக் காட்டுனா நீ இன்னமும் பலவீனமாகிடுவனு வலியை அப்படியே உட்கவருற அந்த 'தக் லைஃப்'தான் ரிச்சர்ட்ஸோடது. இதுல ப்யூட்டி என்னனா அடுத்த பந்தையும் பவுன்சரா ஹாக் வீச அது ஹுக் ஷாட்டாகி ஹாக்க கிண்டல் பண்ணிட்டே பவுண்டரிக்கு போச்சு.

இந்தியாவோட முதல் டெஸ்ட் கேப்டன் சிகே நாயுடு ஒரு பவுன்சரால தனது தாடை தாக்கப்பட்டு பல் உடைஞ்சு கீழே விழுந்தப்போ அதை எடுத்து பேண்ட் பாக்கெட்ல போட்டுட்டு அடுத்த பந்த சந்திக்க தயாரா நின்னாராம். ரிச்சர்ட்கிட்டயும் இருந்த அதே மனவலிமைதான் இன்னைக்கும் அவர நிறையப் பேருக்கு ஃபேவரைட்டா வச்சுருக்கு.

ரிச்சர்ஸோட பார்வையால தடுமாறுன ஹாக் பின்னாடி ஒருதடவ இதைப்பத்தி பேசுனப்போ பேய்ப்படம் பார்க்கறப்போ அதுல வர்ற எதிரிய எவ்வளவு தடவ சுட்டாலும் அவன் அழியாம திரும்ப எழுந்து வர்றப்போ கிளம்புற அதே திகிலை ரிச்சர்ட்ஸோட பார்வை உணரவச்சதா சொன்னாரு.

எவ்வளவு தக் லைஃப் ராஜாக்கள் இங்கே வலம்வந்தாலும் இந்த மகாசக்ரவர்த்தி முன்னாடி அவங்ககூட குறுநில மன்னர்கள்தான்.