Ind vs Aus timepass
Lifestyle

Ind vs Aus: T20 World Cup, அஸ்திரேலிய தொடர், இங்கிலாந்து டெஸ்ட் - இந்திய அணியின் அடுத்த தொடர்கள்!

கோலி, ரோகித் போன்ற இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

டைம்பாஸ் அட்மின்

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையைத் தொடர் முடிந்தநிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் இந்திய அணி பலப்பரீட்சை செய்கிறது. இதில் இந்திய அணி மொத்தம் 11 டி20, 3 ஒருநாள் மற்றும் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

எனவே உலகக் கோப்பைக்குப் பிறகு  இந்திய அணி விளையாட உள்ள போட்டிகளின் மொத்த விவரம்:-

இந்தியாவில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்:

    நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதி முடிவடைகிறது. இதில் இந்தியா அணி ஆஸ்திரேலியாவுடன் மொத்தம் 5 டி20 போட்டிகள் விளையாடுகிறது. அண்மையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியுற்ற நிலையில் இத்தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையில் வீரர்களில் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

1வது டி20 போட்டி, நவம்பர் 23, வியாழன், விசாகப்பட்டினம்.

2வது டி20 போட்டி, நவம்பர் 26, ஞாயிறு, திருவனந்தபுரம்.

3வது டி20 போட்டி, நவம்பர் 28, செவ்வாய், கவுகாத்தி.

4வது டி20 போட்டி, டிசம்பர் 1, வெள்ளி, நாக்பூர்.

5வது மற்றும் இறுதி டி20 போட்டி, டிசம்பர் 3, ஞாயிறு, ஹைதராபாத்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்கள் :

   இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று டிசம்பர் 10 முதல் ஜனவரி 7 வரை சுற்றுப்பயணம் செய்கிறது. இதில் இந்தியா அணி தென்னாப்பிரிக்காவுடன் மொத்தம் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறது.

டி20:-
1வது டி20 போட்டி, டிசம்பர் 10, ஞாயிறு, கிங்ஸ்மீட்.

2வது டி20 போட்டி, டிசம்பர் 12, செவ்வாய், செயின்ட் ஜார்ஜ் பார்க்.

3வது டி20 போட்டி, டிசம்பர் 14, வியாழன், வாண்டரர்ஸ் ஸ்டேடியம்.

ஒடிஐ:-
1வது ஒருநாள் போட்டி, டிசம்பர் 17, ஞாயிறு, வாண்டரர்ஸ் ஸ்டேடியம்.

2வது ஒருநாள் போட்டி, டிசம்பர் 19, செவ்வாய், செயின்ட் ஜார்ஜ் பார்க்.

3வது ஒருநாள் போட்டி, டிசம்பர் 21, வியாழன், போலண்ட் பார்க்.

டெஸ்ட்:-
1வது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 26 - 30 வரை,  சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியம்.

2வது டெஸ்ட் போட்டி, ஜனவரி 3 - 7 வரை, நியூலேண்ட்ஸ்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்:

    இந்தியா vs ஆப்கானிஸ்தான் T20I தொடர் இந்தியாவில் ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17 ஆம் தேதி முடிவடைகிறது. இதில் இந்தியா அணி ஆப்கானிஸ்தானுடன் மொத்தம் 3 டி20 போட்டிகள் விளையாடுகிறது.

அண்மையில் நடந்த உலகக் கோப்பை லீக் போட்டிகளில் இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற முன்னாள் சாம்பியன்களை வென்றது. ஒட்டுமொத்தமாக கணக்கில் கொண்டால், ஆப்கானிஸ்தான் அணி நல்ல எழுச்சியைக் கண்டுள்ளது. அதனால், இத்தொடருக்கு முழுக்க ஜூனியர்கள் அடங்கிய இந்திய அணி அனுப்பப்படுமா அல்லது சீனியர்களையும் உள்ளடக்கிய அணி அனுப்பப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.

டி20:-
1வது டி20 போட்டி, ஜனவரி 11, வியாழன், பஞ்சாப்.

2வது டி20 போட்டி, ஜனவரி 14, ஞாயிறு, இந்தூர்.

3வது டி20 போட்டி, ஜனவரி 17, புதன், பெங்களூர்.

இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்:(இந்தியா) 

   இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்தியாவில் ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கி மார்ச் 11 ஆம் தேதி முடிவடைகிறது. இதில் இந்தியா அணி இங்கிலாந்துடன் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறது.

கடந்த ஜூன் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷிஷ் டெஸ்ட் தொடருக்கு பின் இங்கிலாந்து அணி விளையாடும் டெஸ்ட் தொடர் இது என்பதாலும், டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் இங்கிலாந்து கையில் எடுத்துள்ள 'பாஷ்பால்' என்கிற அதிரடி முறையாலும் இந்த டெஸ்ட் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட்:-
1வது டெஸ்ட் போட்டி, ஜனவரி 25 - 29 வரை,  ஹைதராபாத்.

2வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 2 - 6 வரை, விசாகப்பட்டினம்.

3வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 15 - 19 வரை,  ராஜ்கோட்.

4வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 23 - 27 வரை, ராஞ்சி.

5வது டெஸ்ட் போட்டி, மார்ச் 7 - 11 வரை,  தர்மஷாலா.

டி20 உலகக் கோப்பை (2024)
   டி20 உலகக் கோப்பையை ஜூன் 4 முதல் ஜூன் 30 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இதுவரை நடந்த உலகக் கோப்பைகளில் 20 ஆணிகள் பங்கேற்கும் முதல் தொடர் இதுதான்.

இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுடன், தொடரை நடத்துகிற நாடுகள் என்கிற முறையில் மேற்கிந்திய நாடுகள் அணியும் அமெரிக்க அணியும் தகுதி பெற்றுள்ளன.

ஐரோப்பிய தகுதிச்சுற்றில் அயர்லாந்தும், ஸ்காட்லாந்தும், கிழக்காசிய-பசிபிக் தகுதிச்சிற்றில் பப்புவா நியூ கினியும், அமெரிக்க தகுதிச்சுற்றில் கனடாவும, ஆசிய தகுதிச்சுற்றில் நேபாளமும் ஓமனும் தகுதி பெற்றுள்ளன. ஆப்ரிக்க கண்டத்திற்கான தகுதிச்சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதில் இருந்து இரண்டு அணிகள் தேர்வு செய்யப்படும்.

- மு.குபேரன்.