Chahal  டைம்பாஸ்
Lifestyle

நவீன யுக நாகேஷ் Yuzvendra Chahal - கலாய் கிரிக்கெட்டர்கள் | Epi 10

டிரெய்னிங் முடிஞ்சு ஃபீல்டுல ரோஹித்கூட படுத்திருக்க ஃபோட்டோ போட்டு, பொறாமைப்படாதீங்க அண்ணினு ரோஹித்தோட வொய்ஃபை டேக் பண்ணி வம்பிழுப்பார்.

Ayyappan

நவீன யுக நாகேஷா, பிளேயிங் லெவன்ல இருந்தாலும் இல்லாட்டியும் ஆன் தி ஃபீல்டுலயும், இண்டர்வ்யூக்கள், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள், ஃபேஸ்புக் லைவ்கள், ட்வீட்டுகள், டிக்டாக் வீடியோக்கள்னு ஆஃப் தி ஃபீல்டுலயும் கேப்பே இல்லாம தன்னோட இருக்க சகவீரர்களையும் ரசிகர்களையும் சிரிக்க வைக்கிறதுதான் சாஹலோட ஃபுல்டைம் வேலை. அவரோட முகபாவனைகள், உடல் அசைவுகள், பேசுற விதம்னு எல்லாமே நம்மள ரசிக்க வைக்கும்.

சமீபத்துல மாறியிருக்க கிரிக்கெட் ரூல்களக் கிண்டல் பண்ணி ஆகாஷ் சோப்ரா, 100+மீ சிக்ஸர்களுக்கு எட்டு ரன்கள்னு அறிவிக்கலாம்னு சொல்ல அதுக்கு சாஹல் கமெண்ட்ல, அப்படியே, மூன்று டாட் பால்கள் போடற பௌலருக்கு ஒரு விக்கெட் இனாமாத் தந்தா நல்லாருக்கும்னு போட்டாரு.

சாஹலுக்கும் அவரோட முன்னாள் ஆர்சிபி ஃப்ரெண்டான கெய்லுக்கும் இடையேயான செல்ல ட்வீட் சண்டைகள் கூட ரசிக்கவைக்கும். நியூசிலாந்துடனான ஒரு போட்டியில, பேட்ஸ்மேன சாஹல் ஆட்டமிழக்க வச்சிருந்தாரு. அதோட வீடியோவ அவரு ஷேர் பண்ண, அதுக்கு கெய்ல், "அம்பயர் கவனிக்கலபோல, நீ லைனை லைட்டா கிராஸ் பண்ணிட்ட, அது நோபால்"னு வம்பிழுக்க பதிலுக்கு சாஹல், "அங்கிள்! லாஸ்ட் நைட்டோட எஃபெக்ட் இன்னமும் சரியாகலயா?"னு கலாய்ச்சு விட்டுருப்பாரு. பாடி பில்டர்ஸ் மாதிரி அவரும் கெய்லும் சேர்ந்து மேல்சட்டை இல்லாம போஸ் கொடுத்த ஃபோட்டோ பார்த்தா இப்பவும் சிரிப்பு வரும்.

ரொம்ப ஒல்லியா இருக்கேன்றதக்கூட தன்னோட ப்ளஸ் ஆக்கிக்குவாரு. டேட்டூஸ் போட்ருக்க தன்னோட வெற்றுடலோட ஃபோட்டோவ அவருபோட, ரோஹித் கமெண்ட்ல பயங்கரமா ஓட்டியிருந்தாரு.

சாஜித் மெஹ்மூத், "சல்மான் கான் மாதிரி ஆகப்போறீங்க"ன்னு கலாய்க்க, சஹால், "ஏன் அர்னால்ட் மாதிரிகூட ஆவேனே"ன்னு பதிலுக்குக் கிண்டல் பண்ணிருந்தாரு. வாட்டர் பாயா, பவுண்டரி லைனுக்கு அப்பால அவரோட அந்த பள்ளிகொண்ட பெருமாள் டெம்ப்ளேட்ட யூஸ் பண்ணாத மீம் கிரியேட்டர்களே கிடையாது.

கொரோனா சமயத்துல அவரோட அப்பாகூட டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு டிக்டாக் பண்ணிருந்தாரு. அதுல அவரோட அப்பா, பரிட்சைல நீ பாஸ் பண்ணிட்டியானு கேட்க, "அதுல ஒன்னு நல்ல விஷயம், இன்னொன்னு கெட்ட விஷயம், நான் பாஸ் பண்ணிட்டேன், அது நல்ல விஷயம், நல்ல விஷயம்ன்றது பொய்ன்றது கெட்ட விஷயம்"னு அப்பாவியா முகத்த வச்சுட்டு சொன்னாரு. வார்னரோட டிக்டாக் வீடியோக்களுக்கு அடுத்து அதிக இந்திய ரசிகர்களால பகிரப்பட்ட வீடியோ இதுதான்.

ரோஹித், ரவி பிஷ்னாய் பெண்ணா மாதிரினா எப்படி இருப்பாங்கனு ஃபோட்டோக்களப் போடுவாரு, தண்ணீர் கொடுக்க உள்ள போறப்போ அம்பயரோட அடிச்சு விளையாடி சிரிக்க வப்பாரு.

அணியோட பிஸியோதெரபிஸ்ட் பேட்ரிக்கோட மடில உட்கார்ந்து அவர சிரிக்க வைக்க முயற்சி பண்ணுவாரு. டிரெய்னிங் முடிஞ்சு ஃபீல்டுல ரோஹித்கூட படுத்திருக்க ஃபோட்டோ போட்டு, பொறாமைப்படாதீங்க அண்ணினு ரோஹித்தோட வொய்ஃபை டேக் பண்ணி வம்பிழுப்பாரு. இது எல்லாத்துக்கும் உச்சமா அவரோட சாஹல் டிவிய சொல்லலாம்.

இப்படி ஈகோன்றதே கடுகளவும் இல்லாம சகலகலா காமெடியனா சகலகாலமும் எல்லாரையும் சிரிக்க வைக்கிற சாஹல்தான் 'சமகால கலாய் கிரிக்கெட் கிங்'னு அடிச்சு சொல்லலாம்.