Nagaland
Nagaland  டைம்பாஸ்
அரசியல்

Nagaland : கலாய் மன்னன் Temjen Imna Along இன் ரகளையான tweetகள் - ஒரு லிஸ்ட் !

சு.கலையரசி

நாகாலாந்து மந்திரி என்று சொன்ன உடனே அனைவருக்கும் நியாபகம் வருவது‌ மந்திரி டெம்ஜென் இம்னா அலோங் தான். நகைச்சுவையான சமூக ஊடக பதிவுகளுக்கு பெயர் பெற்றவர் தான் மந்திரி டெம்ஜென் இம்னா அலோங்.

டெம்ஜென் உயர்கல்வி மற்றும் பழங்குடியின விவகார  அமைச்சர், யாரையும் சிரிக்க வைக்கும் இவரது நக்கலான ட்விட்டர் பதிவுகளை எப்போது படித்தாலும் சுவாரசியமாக தான் இருக்கும். இப்படியாக இவர் பதிவிட்ட பல பதிவுகளில் சிலதை மட்டும் இங்கு பார்ப்போம்.

1.  தீயிடம் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்வது குறித்த முக்கியமான செய்தியை வழங்க வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது கணவருடன் சமையலறையில் உணவு தயாரித்து பாத்திரங்களை கழுவுவார். அப்போது திடீரென்று, வாணலியில் நெருப்பு பற்றி எரியும், அதன் பிறகு அந்த நபர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தன் மகளை அழைத்துக்கொண்டு சமையலறையை விட்டு வெளியே செல்லும் போது மனைவியை உள்ளே வைத்து கதவையும் சாத்திவிடுவார்.

இதனால்  கோபமான அந்த பெண், கையில் செருப்புடன் கணவரை துரத்துவார். அந்த வீடியோ பதிவில்  நகைச்சுவை பாணியில், கணவர்கள் எப்படி "நெருப்புடன் விளையாடுகிறார்கள்" என்பதையும் அவர் குறிப்பிட்டிருப்பார்.

அந்த பதிவில் "ஹம் கரே தோ கரே க்யா (நாம் என்ன செய்ய முடியும்?)... கருணையுள்ள தந்தைக்கும் பணிவான கணவருக்கும் இடையே உள்ள இழுபறியானது நெருப்புடன் விளையாடுவது போன்றது. தீவிரமான ஒரு குறிப்பில், தீயை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்கள் வீட்டில் தீ பாதுகாப்பு உபகரணங்களை நிறுவுங்கள்" என்று அமைச்சர் மேலும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

2. உலக உறக்க தினத்தன்று, அவர் மற்றும் பலர் ஆடிட்டோரியத்தில் நாற்காலிகளில் தூங்குவதைக் காட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 24/7 விழித்திருப்பது எப்போதும் ஒரு சாய்ஸாக இருக்காது என்பதை நினைவூட்டும் சிறிய கண்களைக் கொண்டவர்களை ஒப்புக்கொள்ள சிறிது நேரம் ஒதுக்குவோம்! அனைவருக்கும் இனிய உலக உறக்க நாள் என்று வாழ்த்தினார்.

3. "உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள்தொகைப் பெருக்கம் தொடர்பான பிரச்சனைகளில் விழிப்புணர்வோடு இருப்போம், குழந்தை வளர்ப்பு குறித்த தகவலறிவோம்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, "சிங்கிளாக இருங்கள் அப்போதுதான் என்னைப் போல் #StaySingle ஒன்றாக இணைந்து நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க முடியும். இன்றே சிங்கிள்ஸ் இயக்கத்தில் சேருங்கள்,” என்று ட்வீட் செய்துள்ளார்.

4. ஒரு பெண் குழுவுடன் நிற்பதைக் காட்டும் மற்றொரு சுவாரஸ்யமான ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார். டெம்ஜென் இந்த படத்தில் புன்னகையுடன் அருகில் சில பெண்களுடன் நின்றுக் கொண்டிருப்பார்.

"வாழ்க்கையில் எப்போதும் சிரிப்பது அவசியம். நான் ஒரு சக்த் லாண்டா (கடினமான பையன்), ஆனால் இங்கே நான் உருகிவிட்டேன்," என்று அலோங் தனது ட்வீட்டில் கூறினார். இந்த பதிவு அவரை திருமணம் செய்து கொள்ள ட்விட்டர் கமெண்டில் வற்புறுத்திய சிலருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

5. டெம்ஜென் இம்னா பூமி தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், “மழை பெய்யும் போது மண் வாசனை பிடிக்காதா? பின்னர், இந்த பூமி தினத்தில் உங்கள் எதிர்காலத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இயற்கையைப் பாதுகாக்கவும்.

உங்கள் கண்களை நட்சத்திரங்கள் மீதும், உங்கள் கால்களை தரையிலும் வைத்திருங்கள்." என்று எழுதி அந்த கடிதத்தில் “ஆப்கா க்யூட் சா டெம்ஜென் (யுவர்ஸ் க்யூட் டெம்ஜென்)” என்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்டார்.

6.  டெம்ஜென் ஒரு உணவு கடையில்  தனது உணவை சாப்பிடும் புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தில், டெம்ஜென் இமான் அலோங் தனது சாப்பாட்டு தட்டில் மட்டுமே கவனம் செலுத்துகையில், ஒரு பெண்கள் குழு ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பதைக் காணலாம்.

இந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு "பெண்களே, நான் உங்களைப் புறக்கணிக்கவில்லை. நான் என் உணவை ருசித்துக் கொண்டிருக்கிறேன்." என்று பதிவிட்டார்.

இதுப்போன்ற அமைச்சரின் நகைச்சுவை பதிவுகளில் இவையெல்லாம் சிலதே. இவரின் மற்ற ட்விட்டர் பதிவுகளையும் படிக்க படிக்க நகைச்சுவை ஆர்வம் மிகுதியாகவே இருக்கும்.