'Automatic கார், பறக்கும் கேமரா 'ஈ', 10 டன் லாஜிக் ஓட்டை' - ஆற்றல் எப்படி இருக்கு?

காதல், குடும்ப பாசம், நட்பு, அநியாயத்தைக் கண்டால் பொங்குதல், சயின்ஸ் பிக்ஷன், த்ரில்லர், பேண்டசினு திருவிழா 'மிக்சர் ஜூஸ்' மாதிரி எல்லா பழத்தையும் போட்டு அடிச்சுக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஆற்றல்
ஆற்றல்டைம்பாஸ்
Published on

ஆற்றல். கே.எல்.கண்ணன் இயக்கத்தில் விதார்த் கதாநாயகனாகவும், ஷிரிதா ராவ் கதாநாயகியாகவும், வம்சி வில்லனாகவும் நடித்திருக்கும் படம். காதல், குடும்ப பாசம், நட்பு, அநியாயத்தைக் கண்டால் பொங்குதல், சயின்ஸ் பிக்ஷன், த்ரில்லர், பேண்டசினு திருவிழால விக்கிற 'மிக்சர் ஜூஸ்' மாதிரி எல்லா வகையான பழத்தையும் மிக்ஸில போட்டு அடிச்சுக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

முதல் பாதில பேண்டசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில, போலீஸ், நம்பர் ப்ளேட், சிசிடிவி, ஆம்புலன்ஸ் இதெல்லாம் இல்லாத ஒரு உலகம் எப்படி இருக்கும்னு நம்ம கண்ணு முன்னாடி கடை விரிச்சுக் காட்டியிருக்காங்க. கதைக்குள்ள போவோம். பைக் மெக்கானிக்கான சார்லியோட மகன் விதார்த், ஆளில்லாத கார கண்டுப்பிடிச்சே தீருவேன்னு ஒரு குறிக்கோலோட சுத்துறார். அத கண்டுபிடிச்சுடுறார்.

இன்னொரு பக்கம், 'ஈ'  வடிவத்துல ஒரு பறக்குற கேமராவ செஞ்சு பறக்க விட்டுக் கொள்ளை, கொலை செய்கிறார் வில்லன். ஒருவேளை, ஷங்கர் ஆபீஸ்ல இருந்து எந்திரன் 3.ஓ ஸ்கிரிப்ட் பேப்பர எதும் எடுத்துட்டு வந்துட்டாங்களானு அடி வைத்தப் பிடிக்கும்போதுதான், கதை பழிவாங்குற ட்ராக்குக்கு மாறுது.

ஆற்றல்
'ரஜினி நடை, எம்ஜிஆர் விக், கலர்கலரா கோட்சூட்' - எப்படியிருக்கிறது லெஜண்ட்?

இதற்கிடையில காதல். வேண்டா வெறுப்பா பிள்ளைப் பெத்து அதுக்கு வேர்க்கடலைனு பேரு வச்ச மாதிரி, காதல் காட்சிகளை ஷாஜகான் மும்தாஜ் காலத்துக்கே போய் தோண்டி எடுத்து கடலைப் போட வைத்திருக்கிறார் இயக்குனர். சடங்கு வீட்டுக்கு போலாம்னு பலபலனு கெளம்புன வயசு பையன புடிச்சு, காரிய வீட்டுல உக்கார வச்ச மாதிரி, எல்லா சீன்லயும் மூஞ்சியத் தொடங்கப் போட்டே திரியிறார் விதார்த்.

மொத்த படத்தையும் தோளில் தாங்க வேண்டிய இடத்துல இருக்க விதார்த், ஏதோ ஒரு குழப்பத்துலயே சுத்துறார். ஒருவேளை, ஸ்டூடியோ மாறி, வேற படத்தோட ஷூட்டுக்கு வந்து நடிச்சுட்டிருக்காரோனு நம்மளையும் அந்த குழப்பம் தொத்திக்குது.  

ஆளில்லாத கார், பறக்குற ஈ கேமரானு அடிச்சு விளையாட ஒரு ஆஸ்திரேலியா டீமே படத்துல இருந்தாலும், ஆர்சிபி டீமோட அண்ணன் பையன் மாதிரி அம்புட்டையும் தூக்கிப் போட்டுட்டு, அதரப் பழசான திரைக்கதை திரும்பங்கள நம்புனது, பார்வையாளர்களோட ஆற்றலை ஆட்டம் காண வைக்குது.

ஆற்றல்
'நேர்மையான போலீஸ், அன்பான குடும்பம், அப்புறம்?' - சினம் எப்படி இருக்கு?

ப்ரீ க்ளைமேக்ஸ்ல க்ளப் டான்ஸ், மார்டன் ட்ரெஸ் போட்டு வில்லன் கூடயே சுத்துற வில்லனோட கேர்ள் ப்ரெண்ட், வில்லன்கிட்ட நண்பன காவுக் கொடுக்குற ஹீரோனு தன்னோட எந்த ஒரு ஆற்றலையும் செலவழிக்காம ஒரு திரைக்கதையை, லாஜிக் ஓட்டைகளால கட்டி எழுப்பியிருக்கார் இயக்குனர்.

பாடல், பின்னணி இசை, காமெடி, டான்ஸ், வில்லனிஸம் எல்லாத்தையும் பாக்கும்போது, 'பதிமூனுமே ஜோக்கரா இருந்ததா என்னப்பா பண்றது?'னு நமக்கே கேள்விகள் எழுது.

'ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனா இந்த ஆற்றல வச்சு ஆடியன்ஸ் அலறவிட முடியும்'னு சொல்லாம சொல்லியிருக்கு ஆற்றல் படக்குழு.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com