'நேர்மையான போலீஸ், அன்பான குடும்பம், அப்புறம்?' - சினம் எப்படி இருக்கு?

அருண் விஜய் போலீஸா நடிக்கிற 83ஆவது படம். இந்த வருச கோட்டாவுல வர 26ஆவது படம். இந்த மாச கோட்டாவுல வர மொத படம். பல சாதனைக்கற்களை சுமந்து, வந்துருக்கு 'சினம்'.
சினம்
சினம்டைம்பாஸ்
Published on

'சினம்'. அருண் விஜய் போலீஸா நடிக்கிற 83ஆவது படம். இந்த வருச கோட்டாவுல வர 26ஆவது படம். இந்த மாச கோட்டாவுல வர மொத படம். இப்படி பல சாதனைக்கற்களை தலையில் சுமந்து, வெந்து தணிந்த மக்காநாள் வந்துருக்கு 'சினம்' திரைப்படம்.

ஸ்ரிட்டான சப்-இன்ஸ்பெக்டர், க்ளாஸிக் புல்லட், அப்புராணி காதல் மனைவி, போலீஸ் மீதான காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு, தொந்தரவு தரும் இன்ஸ்பெக்டர், கூடவே சுற்றும் ஏட்டைய்யா, 'உன் நேர்மை எனக்குத் தெரியும்'னு சொல்ற சீனியர் போலீஸ் என, கோடம்பாக்க மார்கெட்டிற்கு போய், போலீஸ் ஸ்டோரிக்கு தேவையானதை கோணி பையில் அள்ளி வந்திருக்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேல்.

போலீஸ் படத்துக்கு ஸ்கிரிப் எழுத பேனா எடுத்து பிள்ளையார் சுழி போடுறதுக்கு முன்னாடி மொத வேலையா, 'தேவையான பொருட்கள்'னு தலைப்பு போட்டு, 'ஷேவிங் பண்ண அருண் விஜய்'னு எழுதுற தற்கால தமிழ் சினிமா வழமைக்கு வலிமை சேக்குது இந்தப் படம்.

சரி கதைக்குள்ள போவோம். 20 வருசத்துக்கு முன்னாடி வந்த எதாவது ஒரு போலீஸ் படத்தோட ஃபர்ஸ்ட் ஆஃப்ப நெனச்சுக்கோங்க. அதுலருந்து அடுத்து நான் சொல்றத அப்டியே புடிச்சு வாங்க.

நல்லா போய்ட்டிருக்க ஹீரோவோட வாழ்க்கைல திடீர் திருப்பமா, அவர் மனைவியோட மரணம் நிகழுது. தாயை இழந்த தன்னோட குழந்தை, மனைவி மரணத்திற்குப் பின்னாடி இருக்க மர்மம் என வேதனையும் குழப்பமும் நிறைந்த தருணத்தில் நிற்கும் ஹீரோ எப்படி கொலைக்குப் பின்னாடி உள்ள முடிச்சை அவிழ்க்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சினம்
தமிழ் சினிமா ஹீரோக்களின் சாகச சம்பவங்கள்

ஷேர் ஆட்டோ வேகமாப் போகுமா, இல்ல சாதா ஆட்டோ வேகமா போகுமா?-ன்ற கேள்விக்கு விடை தேட, 15 நிமிஷம் ஓடுற ஒரு சீன எழுதி, அத ஷூட்டும் பண்ணி ரிலீஸ் பண்ணது, தமிழ் சினிமா திரைக்கதையில் புகுத்தப்பட்டிருக்கும் ஒரு புதுமையான யுத்தி.

இப்படி யுத்திகளா அடுக்கி, அதுக்கு மேல அன்ன நடை போட்டு வர ஹீரோவ பாத்து, "எப்பா அருணு.. அந்த சிசிடிவி புட்டேஜ பாரு. போன் சிக்னல் கடைசியா எந்த டவர்ல வந்துருக்குனு பாரு"னு நம்மள எந்திருச்சு கத்த வச்சது மூலமா, சாதா ஆடியன்ஸ ஒரு இன்வெஸ்டிகேட்டீவ் ஆடியன்ஸா மாத்துனது தெற்காசிய போலீஸ் சினிமா வரலாற்றுல ஒரு மைல் கல்.

இரண்டாம் பாதில அருண் விஜய்-க்கும் எக்ஸ்பிரஷனுக்கு ஏழாம் பொருத்தமா அமைந்திருக்கு. 'பாரி வெங்கட்'னு பேரு வச்சுருக்க அருண் விஜய், எக்ஸ்பிரஷ்ன்ல பாரி வள்ளலா இல்லனாலும் பரவாயில்ல, கூட இருக்க 'காளி வெங்கட்'-க்கு ஈக்வலாவாச்சும் நடிச்சுருக்கலாம்.

பல சரக்கு கடையில் பெருங்காய டப்பா வாங்க போனாக் கூட, உறிஞ்சுன மூக்க மூனு அடி தூக்கி வச்சுக்கிட்டு, ஆம்ஸ் கைய மடக்கிக்கிட்டு, பின்னங்கழுத்த தடவிக்கிட்டேதான் பேசுறார். ஒருவேள, அருண் விஜய் நடிச்ச போலீஸ் பட போஸ்டர்கள எல்லாம், வரிசையா ஓட விட்டு ரீல்ஸ் எடுத்து, ஒளிப்பதிவுல ஒரு புது யுத்திய கையாண்டிருக்காங்களோனு சில சீன்கள்ல எண்ண வைக்குது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் களையப்பட வேண்டும் என்ற கருத்த மையமா வச்சதுக்கு பாராட்டுகள். ஆனால், இதற்கு திரைக்கதை அமைக்க கையாண்ட யுத்திகள் எல்லாம் அபத்தத்தின் உச்சம்.

குற்றம் செய்றவுங்க எல்லாரும் குடிசைல இருப்பாங்க, ஆட்டோக்காரர் போன்ற அடிமட்ட தொழிலாளியா இருப்பாங்க, அவர்களின் பிள்ளைகள் இரக்கமே அற்றவர்களாக வக்கிர மனமுள்ளவர்களாக இருப்பாங்க, தாடியும் கீடியுமா இருக்கவுங்க கைல எந்நேரமும் பொருள் வச்சுருப்பாங்கனு முன்னோக்கி போக ஆரம்பிச்சுருக்கும் தமிழ் சினிமாவின் முற்போக்கைப் பத்தடிக்கு பின்னாடி இழுக்க முயன்றிருக்கார் இயக்குனர்.

சினம்
'ராஜ்கிரண் என்றாலே நினைவுக்கு வருவது எது?' - தமிழ் சினிமா குவிஸ்

க்ளைமேக்ஸ்ல, 'பாலியல் குற்றவாளிகளைத் தவிர்ப்போம்'ன்ற தலைப்புல பத்து பக்க அறிவுரைய மைண்ட் வாய்ஸ்லயே பேசி முடிக்கிறார் ஹீரோ. இங்க தவிர்க்கப்பட வேண்டியதும், களையப்பட வேண்டியதும் பாலியல் வன்முறைகளுக்கான காரணங்களா இல்ல வெறும் வன்முறையாளர்கள் மட்டும்தானானு இயக்குனர் தன்னைத்தானே ஒரு முறை கேட்டுக்கணும்.

சினம்
'ரஜினி நடை, எம்ஜிஆர் விக், கலர்கலரா கோட்சூட்' - எப்படியிருக்கிறது லெஜண்ட்?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com