'பள்ளிக்கு போன பார்த்திபன்' - அது ஒரு டவுசர் காலம் | Epi 12

சாக்பீஸ் இல்லாமல் எழுதப்படும் தமிழின் முதல் ஹோம் ஒர்க், ஸ்லேட்டு இல்லாமல் எழுதப்படும் ஆசியாவின் முதல் பரிட்ச்சை என பல புதுமைகளைச் செய்து காட்டி, அதற்கு கூடுதல் மார்க் போட சொல்லி அடம்பிடித்திருப்பார்.
பார்த்திபன்
பார்த்திபன்டைம்பாஸ்
Published on

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம்' தொடர்.

இந்த வாரம், புதுமையான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற (விருதும் பெற்ற) இயக்குநரும் நடிகருமான (ஆனால், இயக்குநனாக நடிக்காமல், உண்மையான இயக்குநர்) இரா.பார்த்திபனின் பள்ளிக்காலத்தைதான் பார்க்கப் போகிறோம்.

பார்த்திபன்
'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி' - அது ஒரு டவுசர் காலம் | Epi 9

டீச்சர் கொடுத்த வீட்டுப் பாடத்தை எல்லாம் ஒன்னு கீழே ஒன்னாவோ, கீழிருந்து மேலாகவோ மட்டும்தான் எழுதிருப்பார். ஆனால், ஸ்கூல் ஐடி கார்ட் நேராகதான் இருக்கும். என்ன, அதில் இருக்கும் அவருடைய படம் தலைகீழாக இருந்திருக்கும்.

சாக்பீஸ் இல்லாமல் எழுதப்படும் தமிழின் முதல் ஹோம் ஒர்க், ஸ்லேட்டு இல்லாமல் எழுதப்படும் ஆசியாவின் முதல் அரைப் பரிட்ச்சை தேர்வு என பல புதுமையான விஷயங்கள் செய்து காட்டி, அதற்கு கூடுதல் மார்க் போட சொல்லி அடம்பிடித்திருப்பார்.

அதற்கு அடுத்தக் கட்டமாக, "மாணவர்களே இல்லாத முதல் கணக்கு வகுப்பு, தமிழின் முதல் non teaching டீச்சர் என நீங்களும் பல புதுமைகளைச் செய்ய வேண்டும்" என பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து, பிரம்படி வாங்கியிருப்பார்.

பார்த்திபன்
'LCU: Lokesh Childhood Universe' - அது ஒரு டவுசர் காலம் | Epi 4

தப்பித்தவறிக் கூட சக மாணவர்கள் யாரும், பிறந்தநாள், தீபாவளி காலங்களில் ப்ளூ சட்டைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது. கோவத்தின் உச்சத்துக்கே போய், அம்மாணவர்களைக் கிள்ளி வைத்திருப்பார்.

ஆனால், ஒத்த செருப்போ அல்லது ஒத்த ஷூவோ போட்டு வந்தால், வாசலில் உள்ள இலந்தைப் பழம் விற்கும் பாட்டியிடம் பழம் வாங்கி தந்திருப்பார்.

'முழு ஆண்டு பரிட்ச்சை லீவுக்கு எல்லாரும் எங்க போறீங்க?' என டீச்சர் கேட்டால், 'எங்க பாட்டி வீடு, விவேகானந்தர் தெரு, துபாய் பஸ் ஸ்டேண்ட் அருகில், துபாய் மெயின் ரோடு, துபாய்க்கு போறேன் மிஸ்' என பதில் சொல்லியிருப்பார்.

மழைப் பெய்தால் பள்ளிக்கு குடைக் கொண்டு வருவார். ஆனால், அந்த குடைக்குள்ளேயும் மழை பெய்யிற மாதிரியான குடையாக இருக்கும்.

பார்த்திபன்
'சமூககனி எனும் சமுத்திரகனி' - அது ஒரு டவுசர் காலம் | Epi 10

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com