இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்
1. இன்சிடியஸ்: தி ரெட் டோர் (Insidious: The Red Door)
ஆங்கிலத்தில் டை சிம்ப்கின்ஸ், பேட்ரிக் வில்சன், ரோஸ் பைரன் நடிப்பில் பேட்ரிக் வில்சன் இயக்கத்தில் ஜூலை 6ஆம் தேதி வெளியான ஹாரர் திரில்லர் திரைப்படம்.
2. காடப்புறா கலைக்குழு ( Kadapuraa Kalaikuzhu )
தமிழில் அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஷ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் ஜூலை 7ஆம் தேதி வெளியானது.
3. ராயர் பரம்பரை (Rayar Parambarai)
தமிழில் ராம்நாத் இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா நாயர் நடிப்பில் ஜூலை 7ஆம் தேதி வெளியான நகைச்சுவை திரைப்படம்.
4. பம்பர் (Bumper)
தமிழில் எம்.செல்வகுமார் இயக்கதில் வெற்றி, ஷிவானி நாராயணன் நடிப்பில் ஜூலை 7ஆம் தேதி வெளியானது.
5. இன்பினிட்டி (Infinity)
தமிழில் வித்யா பிரதீப் நடிப்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் ஜூலை 7ஆம் தேதி வெளியானது.
6. வில் வித்தை (Vil Vithai)
தமிழில் எஸ் ஹரி உத்தரா இயக்கத்தில் அருண் மைக்கெல் டேனியல், ஆரத்யா நடிப்பில் ஜூலை 7ஆம் தேதி வெளியானது.
7. ரங்கபலி (Rangabali)
பவன் பாசம்செட்டி இயக்கத்தில் நாக சௌர்யா, யுக்தி தாரேஜா நடிப்பில் இந்த வாரம் தெலுங்கில் ஜூலை 7ஆம் தேதி வெளியான காமெடி திரைப்படம்.
இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்:
1. கோல்ட் ப்ரி்க் (Gold Brick)
ரஃபேல் குனார்ட், இகோர் கோட்ஸ்மேன் நடிப்பில் ஜெர்மி ரோசன் இயக்கத்தில் ஃப்ரெஞ்ச் மொழியில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூலை 6ஆம் தேதி வெளியானது.
2. ருத்ரமம்பபுரம் (Rudramambapuram)
தெலுங்கில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) ஜூலை 7ஆம் தேதி அஜய் கோஷ், அல்லு ரமேஷ் நடிப்பில் மகேஷ் பாண்டு இயக்கத்தில் வெளியானது.
3. டர்ல (Tarla)
இந்தியில் ஜீ 5யில் ஜூலை 7ஆம் தேதி ஹுமா குரேஷி, ஷரிப் ஹஷ்மி நடிப்பில் பியூஷ் குப்தா இயக்கத்தில் வெளியானது.
4. பிளைண்ட் (Blind)
இந்தியில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) ஜூலை 7ஆம் தேதி சோனம் கபூர், லூசி ஆர்டன் நடிப்பில் ஷோம் மகிஜா இயக்கத்தில் வெளியானது.
திரையரங்குகளில் வெளியான பின் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்
1. குட் நைட் (Good Night)
தமிழில் ஹாட்ஸ்டாரில் ஜூலை 3 ஆம் தேதி மணிகண்டன் கே, ரமேஷ் திலக் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியானது.
2. பாபிலோன் (Babylon)
ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) ஜூலை 5ஆம் தேதி பிராட் பிட், மார்கோட் ராபி நடிப்பில் டேமியன் சாசெல்லே இயக்கத்தில் வெளியானது.
3. ஃபர்கானா (Farhana)
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன் நடிப்பில் இந்த வாரம் தமிழில் சோனிலைவில் (SonyLIV ) ஜூலை 7 ஆம் தேதி வெளியானது.
4. டக்கர் (Takkar)
கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் யோகி பாபு,திவ்யான்ஷா கௌசிக், சித்தார்த் நடிப்பில் இந்த வாரம் தமிழில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூலை 7ஆம் தேதி வெளியானது.
5. காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் (Kathar Basha Endra Muthuramalingam)
முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் இந்த வாரம் தமிழில் ஜீ 5யில் (Zee5) ஜூலை 7ஆம் தேதி வெளியானது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரீஸ்கள்
1. ஸ்வீட் காரம் காபி (Sweet Kaaram Coffee)
இந்த வாரம் தமிழில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) லட்சுமி,
மது ஷா, சாந்தி, பாலச்சந்திரன் நடிப்பில் ஜூலை 6ஆம் தேதி வெளியானது.
2. அதுரா (Adhura)
இஷ்வாக் சிங், ரசிகா துகல் நடிப்பில் அனன்யா பானர்ஜி, கவுரவ் கே. சாவ்லா இயமக்தில் இந்த வாரம் ஹிந்தியில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) ஜூலை 6ஆம் தேதி வெளியானது.
3. த ஹாரர் தோலோரஸ் ரோச் (The Horror of Dolores Roach)
ஜஸ்டினா மச்சாடோ, அலெஜான்ட்ரோ ஹெர்னாண்டஸ் நடிப்பில் இந்த வாரம் ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) ஜூலை 7ஆம் தேதி வெளியானது.
4. ஃபடல் செடக்ஷன் (Fatal Seduction)
இந்த வாரம் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூலை 7ஆம் தேதி வெளியானது.