Jailer
Jailertimepass

Jailer, Bhola Shankar, Maaveeran - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்| What to Watch

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்

1. ஜெயிலர் (Jailer)

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் தமிழில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது.

2. போலா ஷங்கர் (Bhola Shankar)

மெஹர் ரமேஷ் இயக்கத்தில்   சிரஞ்சீவி , கீர்த்தி சுரேஷ் மற்றும் தமன்னா நடிப்பில் தெலுங்கில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியான ஆக்‌ஷன் டிராமா திரைப்படமாகும்.

3. கடர் 2 (Gadar 2)

அனில் ஷர்மா இயக்கத்தில் சன்னி தியோல், அமீஷா படேல் நடிப்பில் ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்தியில் வெளியானது.

4. ஓ மை காட் 2 (OMG2)

அமித் ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், யாமி கௌதம் நடிப்பில் ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்தியில் வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

1.வான் மூன்று (Vaan Moondru)

அம்மு அபிராமி மற்றும் ஆதித்யா பாஸ்கர் நடிப்பில் அமர் முருகேஷ் இயக்கத்தில் தமிழில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அஹாவில்  (Aha) வெளியானது.

2. ரெட், ஒயிட் & ராயல் ப்ளூ (Red, White & Royal Blue)

ஆங்கிலத்தில் அமேசான் பிரைமில் ( Amazon Prime) ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியானது.

3. ஹார்ட் ஆப் ஸ்டோன் (Heart Of Stone)

டாம் ஹார்பர் இயக்கத்தில் கேல் கடோட் , ஜேமி டோர்னன் நடிப்பில் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியானது.

Jailer
'எனக்கு சினிமா சரிப்பட்டு வராது' - ரஜினி சொன்னதன் பின்னணி - பழைய பேப்பர் கடை | Epi 10

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்:

1. ஒன்லி மர்டர்ஸ் இன் த  பில்டிங் சீசன்3 (Only Murders in the Building S3)

ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியானது.

2. பெயின் கில்லெர் (Painkiller)

பீட்டர் வின்டர் இயக்கத்தில் நடிகர் தஹ்மோ பெனிகெட், லெஸ்லி-ஆன் பிராண்ட் நடிப்பில் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.

3. வேற மாரி ஆபீஸ் (Vera Maari Office)

ஆர்ஜே விஜய், ஜனனி அசோக்குமார், விஷ்ணு விஜய் நடிப்பில் சிதம்பரம் மணிவண்ணன் இயக்கத்தில் தமிழில் ஆஹாவில் (Aha ) ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது.

4.  கமாண்டோ (Commando)

விபுல் அம்ருத்லால் ஷா படைப்பில் இந்தியில் ஹாட்ஸ்டாரில் ( Hotstar) ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியானது.

திரையரங்குகளில் வெளியான பின் இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்:

1. நெய்மர் (Neymar)

சுதி மேடிசன் இயக்கத்தில் மேத்யூ தாமஸ், நாஸ்லன், ஜானி ஆண்டனி நடிப்பில் மலையாளத்தில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியானது.

2. ஹிடும்பா (Hidimbha)

அனீல் கன்னேகண்டி இயக்கத்தில் அஷ்வின் பாபு, நந்திதா ஸ்வேதா, சீனிவாச ரெட்டி நடிப்பில் தெலுங்கில் ஆஹாவில் (Aha) ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.

3. மாவீரன் (Maaveeran)

மடோனா அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில்
தமிழில் அமேசான் பிரைமில் (Amazon Prime) ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியானது.

4. போர் தொழில் (Por Thozhil)

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் இந்த வாரம் தமிழில் சோனி லைவில் (SonyLIV) ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியானது.

5. பத்மினி (Padmini)

சென்னா ஹெக்டே இயக்கத்தில் குஞ்சாகோ போபன், அபர்ணா பாலமுரளி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் மலையாளத்தில்  நெட்ஃப்லிக்சில் (Netflix) ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியானது.

Jailer
போலீஸ் சினிமா செய்வது எப்படி?

Related Stories

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com