Tamil Cinema : ’வேடிக்கையான வியாதிகள்’ - சுவாரஸ்யமான ஒரு லிஸ்ட்!

நல்ல ஸ்டோரிஸ் கிடைக்கிறதைவிட, அரியவகை டிசிஸ் கிடைச்சாலே போதும். அதைவெச்சி நம்மாளுங்க கெடாவெட்டி, பொங்கப் பொங்கப் பொங்கல் வெச்சிருவாங்க. அப்படி பொங்கின சில கதைகள்தான் இது.
Tamil Cinema
Tamil Cinematimepass

அந்த காலத்துல வந்த தமிழ் சினிமாவுல நோய் சம்பந்தப்பட்ட கதைகள் நிறைய வந்திருக்கு. குறிப்பா, ஹார்ட் பிராப்ளம், காச நோய், பிளட் கேன்சர், பாலியல் நோய்னு திரும்பத் திரும்ப வரும். ஆனா, இப்போ வர்ற நோய் கதைகளோட லிஸ்ட்டு எடுத்தா ’எத்தே தண்டி..!’யா இருக்கிறதோட, வித்தியானமான நோய்களாவும் இருக்கு. விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏத்த மாதிரி நோய்களும் புதுப்புது கான்ஸப்டுல மாறிக்கிட்டே இருக்கு.

அதனால, நம்ம டைரக்டர்களுக்கு நோய் கதைகள்னா ரோட்டோரக் கடைகள்ல போண்டா, பஜ்ஜி சாப்பிடுற மாதிரி ரொம்ப ஈஸியா ஆயிடுச்சி. சமீபத்துல நல்ல ஸ்டோரிஸ் கிடைக்கிறதைவிட, அரியவகை டிசிஸ் கிடைச்சாலே போதும். அதைவெச்சி நம்மாளுங்க கெடாவெட்டி, பொங்கப் பொங்கப் பொங்கல் வெச்சிருவாங்க. அப்படி பொங்கின சில கதைகள்தான் இது.

1 . ஒருத்தருக்கு 15 நிமிஷம் மட்டுமே நடந்த நிகழ்கால சம்பவங்கள் மைண்டுல நிற்கும். அந்த பதினஞ்சு நிமிஷம் போச்சுன்னா ஓட்ட பலூன்ல காத்து போற மாதிரி போயிட்டே இருக்கும். அதுக்கப்புறம் அடுத்த 15 நிமிஷம் எப்போ, எங்கே, எப்டி..? வரும்னு சொல்ல முடியாத அளவுக்கு ’ஷார்ட் டைம் மெமரி லாஸ்’ ங்கிற நோய்ல பாதிக்கப்பட்டிருப்பாரு ’கஜினி’ங்கிற படத்துல நம்ம சூர்யா. தலையில வெயிட்டா ஒரு அடிபோட்டா அப்படி ஆயிடும்போல. நல்ல அழகா, டிப்டாப்பா கோடீவரனா வலம் வந்திட்டு இருந்த சூர்யா, அசினைப் பார்த்ததுலேர்ந்து லவ்வுல லாக்காகி, பொழப்பை விட்டுட்டு அசினே அகிலம், அசினே ஆத்மா, அசினே ஹார்ட்டுன்னு கூடவே சுத்துனதோட கிஃப்டுதான் இந்த ’மெமரி லாஸ்.’

சுயநினைவு வர்ற அந்த பிஃப்டீன் மினிட்சை வெச்சி வில்லன்களை போலர்ராய்ட் கேமராவுல போட்டோ எடுக்கணும், அதுல மொபைல் நம்பர் எழுதணும், கிளைமாக்ஸ்ல பழி வாங்கியாகணும் ஏகப்பட்ட வேலை பார்ப்பாரு சூர்யா. அந்த படம் சக்ஸஸ்ங்கிறது சூர்யா கெட்டப்புல பலர் காமெடி பண்ணினதுலேர்ந்து தெரிஞ்சது. ஆக, ’ஷார்ட் டைம் மெமரி லாஸ்’ சை வெச்சு லாபம் பார்த்த ஒரு படம்.

Tamil Cinema
Tamil Cinema : கண்களே கதாபாத்திரங்களாக மாறிய தமிழ் படங்கள் - ஒரு சுவாரஸ்ய லிஸ்ட்!

2 . ’கஜினி’ படத்துல சூர்யாவுக்கு 15 நிமிஷம் சுயநினைவு வரும். ஆனா, இந்த ’கஜினிகாந்த்’ படத்துல நடிச்ச ஆர்யாவுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் மறதிநோய் வரும். அதாவது டீ கடையில டீ சொல்லி, அதை போட்டு நீட்டறதுகுள்ள மறந்துபோய்.. ’நான் எங்க மாஸ்டர் டீ சொன்னேன்..?’னு மாஸ்டரை மண்டை காய விடுற அளவுக்கு மறதி மன்னன். எதனால இப்படி ஒரு மறதி வியாதி வந்திருக்குன்னு மெடிக்கல் மிராக்களா..! பார்க்கும்போது தெரியவர்ற ரிசல்ட் என்னென்னா..? ஆர்யா, அம்மா வயித்துல இருந்தப்போ அவரோட அப்பா, அம்மாவை ’தர்மத்தின் தலைவன்’ ங்கிற தலைவர் படத்துக்கு கூட்டிப்போறாரு.

ரெண்டு பேரும் படம் பார்த்துட்டு இருந்தப்போ, வயித்துல இருந்த ஆர்யா சூப்பர் ஸ்டாருக்கு ரசிகனாகி, குஷியில எட்டி..எட்டி உதைச்சிருக்காரு குறிப்பா, ரஜினி மறதியில அண்டர்வேரோட பஸ் ஸ்டாண்டுல நிக்கிறது, பேகை மறந்துட்டு ஆபீஸ் போறது, வாகனத்தை விட்டுட்டு நடந்து வர்றதையெல்லாம் கருவுல இருந்தே ’கேட்ஜ்’ பண்ணினதாலதான் ஆர்யாவுக்கு பிறவியிலேர்ந்தே மறதி தொத்திச்சிகிச்சுன்னு படத்தோட டைரக்டர் ரீல்..ரீலா சுத்தியிருப்பாரு. ஆர்யாவோட அப்பா, அம்மாவ அதே வருஷம் வந்த ’குரு சிஷ்யன் படத்துக்கு கூட்டுப்போயிருக்கலாம்.

Tamil Cinema
Tamil Cinema : வாடகைக்கு காதலிக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் - ஒரு நக்கலான லிஸ்ட் !

3 . ’கஜினி’ சூர்யாவுக்கு ’ஷார்ட் டைம் மெமரி லாஸ்’, ’கஜினிகாந்த்’ ஆர்யாவுக்கு மறதி நோய், ’போக்கிரி ராஜா’ ஜீவாவுக்கு ’கொட்டவி’ விடுற கொடுமை. ஆபீஸ், வீடு, ரோடு, சினிமா தியேட்டர், கல்யாண பந்தியிலன்னு லொகேஷன் பிக்ஸ் பண்ணியெல்லாம் விடுறதில்ல… கண்டமேணிக்கு வாயத்திறந்து ’ஆ..ஆ..ஆ..க்கும்’ ஒரே கொட்டாவி மயம்தான். சரி, அடுத்தவங்க கொட்டாவியவா திருடி விடுறாரு..? அவர் வாயி, அவர் கொட்டாவி விடுறார்னு பார்த்தாதான் தெரியுது, இவர் கொட்டாவிடும்போது அதோட அலைகற்றை பக்கத்துல இருக்கிறவங்களுக்கும் பரவி, அசதியில உட்கார்ந்த இடத்துலயே தூக்கத்துல சொக்கி மல்லாந்துருவாங்க.

ஒரு ஆபீஸ்ல ஜீவா வேலைக்கு சேர்ந்ததுமே ஒரே ஒரு கொட்டாவியில ஒட்டுமொத்த ஊழியர்களையும் உறங்க வெச்சார்னா அவர் கொட்டாவியோட ’வேவ் லென்த்’ எந்த அளவுக்கு இருக்கும்னு புரியும். அதனாலயே பயந்துபோய் ’கொட்டாவியஸ்தர்கள் உள்ளே வர அனுமதி இல்லை’னு ஆபீஸ் வாசல்ல போர்டு மாட்டுற அளவுக்கு கொட்டாவிக்கு பவர்ஃபுல் பிராண்ட் அம்பாசிடரா இருந்திருக்கார் ஜீவா.

Tamil Cinema : மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்

4 . குறட்டையால ஒரு குடும்பம் சீரழியதுன்னா அது ’குட் நைட்’ பட ஹீரோ மணிகண்டன் விடுற ஹெவி டெசிபல்ல குறட்டைதான் காரணம். அந்தப் படத்தோட மெயின் ரீஸனே குறட்டைதான். குறட்டை ஒரு மனுஷனை எப்டியெல்லாம் பாடாய்ப் படுத்தி, திக்குமுக்காட வெச்சி, திணறடிக்குதுன்னு அந்தப் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம். குறட்டையெல்லாம் ஒரு மேட்டரா..? இதைபோயி கதையா உருட்டி படமா எடுத்திருக்காங்களா..?னு எல்லாருக்கும் எகத்தாளம் எட்டிப்பார்த்துட்டுப் போகும்.

வெளிநாடுகள்ல குறட்டை விடுற ஹஸ்பெண்டை ’நீயுமாச்சு உன் குறட்டையுமாச்சு’ னு நைட்டோட நைட்டா முடிவு பண்ணி, விரட்டி.. விரட்டி.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து, கூடவே ஜீவனாம்ஸத்தோடு ஒழிச்சுக்கட்டுற இல்லத்தரசிகளும் இருக்காங்க. இன்னும் சில மனைவிமார்கள் ’இனிமே குறட்டை விட்டேன்னா கொன்னுருவேன்’னு புருஷன் கழுத்தை நெறிச்ச புனிதவதிகளும் இருக்காங்க. நம்ம நாட்டுலதான் குறட்டை சத்தம் கூரைய பிச்சுக்கிட்டு போனாலும், போய்த் தொலையுது சனியன்னு சகிச்சுகிட்டு தலையணைய தன் மூஞ்சுல பொத்திக்கிட்டு தூங்குற மனைவிகுல மாணிக்கங்கள் இருக்காங்க. தலையணை நம்ம மூஞ்சுக்கு தாவாம பார்த்துக்கிறது நம்ம வாய்லதான் இருக்கு.

Tamil Cinema
கடவுள் வேஷம்போட்டு கடுப்பேத்தின நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

5 .’நார்கோலெப்ஸி’ னதும் ஏதோ வடநாட்டுலேர்ந்து சேட்ஜி மூலமா இறக்குமதியான ஸ்வீட் அயிட்டம்னு நெனைச்சிட்டு இருந்திருப்போம். ஆனா, விஷால் நடிச்ச ’நான் சிவப்பு மனிதன்’ படம் வந்த பின்னாடிதான் அது ஸ்வீட் இல்லை. சத்தம், சந்தோஷம், துக்கம், தூறல்னு எது வந்தாலும் மயங்கி விழுந்து தூங்குற வியாதின்னு தெரிஞ்சது. அதோட, உலகத்துல இப்டி ஒரு வியாதி இருக்குன்னு வியக்க வெச்சதும் அந்த ’நார்கோலெப்ஸி’ தான்.

விஷால் ஹீரோங்கிறதால வில்லன்களோட வசமா சிக்கிக்கிற நேரத்துல எதிரிகளை தூக்கிப்போட்டு துவம்சம் பண்ணுவாருன்னு எதிர்பார்க்கிற காட்சிகள்ல கரெக்டா எதாச்சும் ஒரு ’டிஸ்டர்ப்’ வந்து ஹீரோ விஷாலை தூக்கித் தூங்கவெச்சிரும். அதோட நம்மையும் ஸ்கிரீன்பிளேவுல அருமையான ’டுஸ்ட்’ னு பேசவெச்சிரும். இப்டி தூக்க முடியாத அளவுக்கு தூக்க வியாதியை வெச்சிக்கிட்டு இருந்தாலும் லவ் பண்றது, டூயட் பாடுறதுன்னு ஹீரோ குஜாலாவே இருப்பார். சரி, கண்ட கண்ட நேரத்துல தூங்குற ஹீரோ, ஊரே தூங்குற நைட்டுல தூங்குவாரா மாட்டாரா..? ன்னுதான் தெரியலை.

- எம்.ஜி.கன்னியப்பன்.

Tamil Cinema
Tamil Cinema : கட்சி தொடங்கி ’கண்டமான’ ஹீரோக்கள் - ஒரு லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com