This is Cinema : Trending ஆகும் தாத்தாவின் Meme Template - யார் இந்த Martin Scorsese ?

இவருடைய திரைப்படங்களின் தொடக்கம் என்பது அப்படத்தின் மையப்பகுதி அல்லது இறுதியில் நிகழக்கூடிய காட்சிகளாகவே அமைந்திருக்கும்.
Martin
Martin timepass

சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆக theஇருக்கிறார் சினிமா தாத்தா மார்ட்டின் ஸ்கோர்செஸி. 'this is the cinema' என்று எழுதப்பட்ட மீம் டெம்ப்ளட்டில் உலா வந்துக்கொண்டிருக்கிறார். சென்ற மாதம் தாத்தாவின் இயக்கத்தில் வெளியான ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்லவர் மூன்’ உலக முழுவதும் சக்கைப் போடுப் போட்டுக்கொண்டிருக்கிறது.

மார்ட்டின் சி. ஸ்கோர்செஸி என்பது இவருடைய முழு பெயர். இவர் அமெரிக்க திரைப்படத் துறையின் மிக முக்கிய நபர் ஆவார். திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என் பல முகங்களைக் கொண்டவர். ஒரு திரைப்பட இயக்குனராக தனது வாழ்நாளில் இதுவரை 26 படங்களை இயக்கியுள்ளார். ஸ்கோர்செஸியின் படங்கள், கதைக்களத்தைக் காட்டிலும் மக்களை மையமாக கொண்டிருக்கும்.

தனது படத்தில் வரக்கூடிய கதாபாத்திரங்களை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வைத்து, அக்கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகள் மற்றும் ஆசைகளை அடிப்படையாகக் கொண்டு, தன்னை எப்படி அக்கதாபாத்திரம் விடுவித்துக் கொள்கிறது என்ற நோக்கத்தில் படத்தை இயக்குவது இவரது சிறப்பம்சமாகும். 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுள் ஒருவரான இவர், நவீன கலாச்சாரத்தின் மீதான ஒரு வெறுப்பு மற்றும், சினிமா மீதான காதல் ஆகிய இரண்டையும் தனது படைப்புகளில் பிரதிபலிக்கிறார்.

Chris Pizzello

திரைப்பட இயக்குனராக இவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட முதல் திரைப்படம் ‘Who’s that Knocking at my door?’ (1967). இப்படத்திற்கு முதலில் ‘I Call First’ என பெயரிடப்பட்டிருந்தது. ஸ்கோர்சஸின் தனித்தன்மை எதுவென்று பார்த்தால், ஸ்லோ மோஷன் மற்றும் ஃப்ரீஸ் ஃப்ரேம்களின் பயன்பாடு மற்றும் அதிக வன்முறைகளை கொண்டுள்ள காட்சிகளை க்ராபிக்ஸ் மூலம் காட்டுவதே ஆகும்.

Martin
போலீஸ் சினிமா செய்வது எப்படி?

இவருடைய திரைப்படங்களின் தொடக்கம் என்பது அப்படத்தின் மையப்பகுதி அல்லது இறுதியில் நிகழக்கூடிய காட்சிகளாகவே அமைந்திருக்கும். மேலும் இவரது திரைப்படங்களில், பழைய மேற்கத்திய திரைப்படங்களின் குறிப்புகளையும் காணலாம். 

தமிழ் திரைப்படங்கைளில் இயக்குனர்களின் கேமியோ தோற்றங்கள் என்று சொன்னாலே நமக்கு நினைவில் வருவது கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கௌதம் மேனன் தான். ஹாலிவுட் துறையில், தனது படங்களில் கேமியோ தோற்றங்கள் மற்றும் பின்னணி குரல் கொடுப்பதிலும் ஸ்கோர்செஸி ஒரு முன்னோடி. இவர் அதிகமாக அரசியலில் இருக்கும் ஊழல்கள் குறித்து படங்களை இயக்கியுள்ளார்.

ஸ்கோர்செஸி தனது படங்களில் அதிகபட்சமாக ஒரே நடிகர்களையே நடிக்க வைப்பார். குறிப்பாக ராபர்ட் டி நிரோ இவருடைய 10 படங்கள் மற்றும் 1 குறும்படத்தில் நடித்துள்ளார். அவற்றில் 3 படங்கள் (டாக்ஸி டிரைவர், குட்ஃபெல்லாஸ், ரேஜிங் புல்) AFI- ன் ‘100 வருடங்கள்… 100 படங்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவருக்கு அடுத்தபடியாக லியோனார்டோ டிகாப்ரியோ 6 படங்களில்  நடித்துள்ளார்.  

இவருக்கு விருதுகள் மட்டும் என்ன குறையா? AFI (American Film Institute)- ன் வாழ்நாள் விருது, ஆஸ்கார், கோல்டன் குளோப், க்ராமி, மற்றும் BAFTA ஆகியவற்றை வென்றுள்ளார். 2007-ல் டைம்ஸ் பத்திரிக்கையில் 100 செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இவர் இயக்கியுள்ள படங்களுள் சில- டாக்ஸி ட்ரைவர் (1976), ரேஜிங் புல் (1980), தி கிங் ஆஃப் காமெடி (1983), குட்பெல்லாஸ் (1990), கேப் ஃபியர் (1991),  கசினோ(1995), தி ஏவியேட்டர் (2004), தி டெபார்ட்டட் (2006), ஷட்டர் ஐலாண்ட் (2010), ஹூகோ (2011), தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் (2013), தி ஐரிஷ்மேன் (2019), முதலியவை குறிப்பிடத்தக்கது.

-ர. பவித்ரா.

Martin
Maniratnam Academy : நம் இயக்குநர்கள் சினிமா பள்ளி அரம்பித்தால் இப்படிதான்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com