
நம் தமிழ் சினிமா இயக்குனர்கள் பள்ளி ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?
மிஷ்கின் மிடில் ஸ்கூல்:
கூலிங் கிளாஸ் இல்லைனா நோ அட்மிஷன். சிலபஸ் படிக்கிறீங்களோ இல்லையோ, இத்தாலிய இலக்கியம், ரஷ்ய இலக்கணம், தென் அமெரிக்கக் கவிதைகள், ஆப்ரிக்க படைப்புகள் இப்படி உலக வாயனா கண்டிப்பா ஆகிடுவீங்க.
இது ஒரு நைட் ஸ்கூல். பகல்ல நல்லாத் தூங்கிட்டு பாதி ராத்திரியில் பாடம் படிக்கணும். பேய் பிசாசெல்லாம் ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்கும்.
டீச்சர்ஸ் எல்லோருக்கும் மஞ்சள் கலர் யூனிஃபார்ம். நீங்களே இங்கே ஒட்டடை அடிக்கணும். பெஞ்ச் தூக்கணும்.
பல சமயங்கள்ல உங்களுக்கு நீங்களே பாடம் எடுத்துக்கணும். ‘சீர்திருத்தப் பள்ளி’ மாதிரியே ஒரு ஃபீல் வந்தா, அது அப்படிதான்!