மீண்டும் சர்ச்சையில் சிக்கிய Rakhi Sawant இன் கணவர் Adil Durrani !

இந்தி பிக்பாஸில் முதல் சீசனில் Rakhi Sawant கலந்துக்கொண்டார். இவர் 2019 இல் ரித்தேஷ் சிங் என்பவரை மணந்து​ 2022 இல் விவாகரத்து பெற்று அதே ஆண்டில் தனது காதலன் அடில் கான் துரானியை ​திருமணம் செய்தார்.
Rakhi Sawant
Rakhi Sawantடைம்பாஸ்

திரும்ப திரும்ப ஊடகங்களில் ட்ரெண்டாகி வரும் பாலிவுட் பிரபலமான ராக்கி சாவந்த் மற்றும் அவரது கணவர் மீண்டும் ட்ரெண்டாகும்படியான வழக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த ராக்கி சாவந்த் மற்றும் அடில் கான் துரானி ? அவர்கள் ஏன் அடிக்கடி ட்ரெண்ட் ஆகிறார்கள்?

ராக்கி சாவந்த்:

ராக்கி சாவந்த் என்பவர் இந்திய திரைப்பட நடிகை, நாட்டியக் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் இந்திய குடியரசுக் கட்சியில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் இந்தி திரைப்படங்களிலும், சில கன்னட, மராத்தி, தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தி பிக்பாஸில் முதல் சீசனில்  கலந்துக்கொண்டார். இவர் 2019 இல் ரித்தேஷ் சிங் என்பவரை மணந்து​ 2022 இல் விவாகரத்து பெற்று அதே ஆண்டில் தனது காதலன் அடில் கான் துரானியை  ​திருமணம் செய்தார்.

Rakhi Sawant
Lovers Day : காதலால் இணைந்த இந்திய பிரபலங்கள் !

அடில் கான் துரானி:

கர்நாடகாவைச் சேர்ந்தவரான அடில் கான் மைசூரில் உள்ள 'யூஸ்டு கார்ஸ்' நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் ராக்கி சாவந்தின் இரண்டாவது கணவர் ஆவார்.

ராக்கி சாவந்தின் குற்றச்சாட்டுகள் :

ராக்கி சாவந்தின் புகார் படி அடில் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்ததாகவும் மராத்தி பிக் பாஸ் சீசன் 4க்கு செல்வதற்கு முன்பு தனது தாயின் அறுவை சிகிச்சைக்கு 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை கொடுத்த பிறகும் கணவர் பணம் கொடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், தன்னுடனான உறவை முறித்துக் கொண்டு, தனது காதலியான தனுவுடன் தங்கியிருப்பதாக அடில் தன்னிடம் தெரிவித்ததாகவும் ராக்கி குற்றம் சாட்டுகிறார். ராக்கி சாவந் அளித்த புகாரினால் ஓஷிவாரா காவல்துறையினரால் அடில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அடில் ட்ரெண்டிங்காக காரணமாக உள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு

13 பிப்ரவரி 2023 அன்று அடில் கான் துரானி மீது  பலாத்காரம், ஏமாற்றுதல், மிரட்டல்  போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. மைசூரில் காவல் துறையினரால் FIR பதிவு செய்யப்பட்டது. ஈரானில் இருந்து மைசூருக்கு படிப்பதற்காக வந்த ஈரானிய மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் FIR பதிவு செய்யப்பட்டது.  அதன்படி திருமணம் செய்வதாக கூறி அடில் ஈரானியப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அடில் கான் துரானி மீது TPC பிரிவுகள் 406 420 498 (4), மற்றும் 377 ஆகியவற்றின் கீழ் காவல்துறை FIR பதிவு செய்துள்ளது.

Rakhi Sawant
90s Kids Cricket: ஃபேமஸான சர்ச்சைகள் ஒரு லிஸ்ட் | Epi 9

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com