இந்தியாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்:
1. ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்.
ஏப்ரல் 14, 2022 அன்று, ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் சிறிது காலமாக காதலித்து வந்தனர் பல மாதங்களாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு நவம்பர் 6 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததுள்ளது.
2. மௌனி ராய் மற்றும் சூரஜ் நம்பியார்.
2019 இல் காதலிக்க தொடங்கிய நாகினி சீரியல் புகழ் நடிகர் மௌனி ராய் மற்றும் துபாய் தொழிலதிபர் சூரஜ் நம்பியார், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் கோவாவில் உள்ள ஹில்டன் கோவா ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
3. விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் ஷீத்தல் தாக்கூர்.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று, நடிகர் விக்ராந்த் மாசி மற்றும் ஷீத்தல் தாக்கூர் பதிவு திருமணம் செய்தனர். ஏழு ஆண்டுகளாக காதலித்த இவர்கள் பிப்ரவரி 18, 2022 அன்று இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஷாஹ்தலையில் அவர்கள் குடும்ப முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
4. மோஹித் ரெய்னா மற்றும் அதிதி.
டெவோன் கே தேவ், மகாதேவ் படத்தில் நடித்த நடிகர் மோஹித் ரெய்னா, அதிதியைக் காதலித்து புத்தாண்டின் முதல் நாளில் திருமணம் செய்துக்கொண்டார்.
5. ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா.
டிசம்பர் 4 ஆம் தேதி, ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை காதலித்து ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.
6. நேஹா கக்கர் மற்றும் ரோஹன்ப்ரீத் சிங்.
பாடகி நேஹா கக்கர் 2020 இல் தன்னை விட ஆறு வயது இளையவரான பாடகர் மற்றும் இசைக்கலைஞரான ரோஹன்ப்ரீத் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.