Subramaniyapuram, The Meg, The Hunt for Veerappan - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்| What to Watch

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.
OTT
OTT OTT

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்.

1. சுப்ரமணியபுரம் (Subramaniyapuram)

சசிகுமார் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியானது. ஜெய் , சுவாதி ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது  தமிழில் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

2. சான்றிதழ் (Saandrithazh)

ஜே.வி.ஆர் இயக்கத்தில் ஹரிகுமார், ரோஷன் பசீர் மற்றும் ஆஷிகா நடிப்பில் தமிழில் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியானது.

3. வெப் (WEB)

ஹாரூன் இயக்கத்தில் நடராஜ சுப்பிரமணியன், ஷில்பா மஞ்சுநாத், மொட்ட ராஜேந்திரன், சுபப்ரியா மலர், ஷாஷ்வி பாலா நடிப்பில் தமிழில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியானது. 

4. பிரியமுடன் பிரியா (Priyamudan Priya)

ஏ.ஜே. சுஜித் இயக்கத்தில் அசோக் குமார் பாலகிருஷ்ணன், லீஷா எக்லேயர்ஸ், தலைவாசல் விஜய் நடிப்பில் தமிழில் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியானது.

5. தீ மெக் 2: தி திரெஞ்ச் (The Meg 2: The Trench)

பென் வீட்லி இயக்கத்தில் ஜேசன் ஸ்டாதம், வூ ஜிங், ஷுயா சோபியா காய் நடிப்பில் ஆங்கிலத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்.

1. சோல்கேட்செர் (Soulcatcher)

டேனியல் மார்கோவிச் இயக்கத்தில் கிறிஸ்டோபர் செயிண்ட் பூத்,பிலிப் அட்ரியன் பூத் நடிப்பில்  இந்த வாரம் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix )ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியானது. 

2. த ஹண்ட் ஃபார் வீரப்பன்(The Hunt for Veerappan)

அறிமுக இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் இந்த வாரம் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix)ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியானது.

OTT
'எனக்கு சினிமா சரிப்பட்டு வராது' - ரஜினி சொன்னதன் பின்னணி - பழைய பேப்பர் கடை | Epi 10

திரையரங்குகளில் வெளியான பின் இந்த வாரம் ஓடிடியில் வெளியான  திரைப்படங்கள்.

1. எறும்பு (Erumbu)

சுரேஷ் ஜி இயக்கத்தில்  சார்லி, எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் தமிழில் அமேசான் பிரைமில் (Amazon prime)ஜூலை 31ம் தேதி வெளியானது.

2. ருத்ரங்கி (Rudrangi)

அஜய் சாம்ராட் இயக்கத்தில் ஜெகபதி பாபு, மம்தா மோகன் தாஸ், விமலா ராமன், ஆஷிஷ் காந்தி  நடிப்பில் தெலுங்கில் அமேசான் பிரைமில் (Amazon prime)ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியானது.

3. கார்டியன்ஸ் ஆப் த காலக்சி வால்யும்3 (Guardians of the Galaxy Vol. 3)

ஜேம்ஸ் கன் இயக்கத்தில் கிறிஸ் பிராட், ஜோ சல்டானா, டேவ் பாட்டிஸ்டா நடிப்பில் ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (hotstar) ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியானது. 

4. ரங்கபலி (Rangabali)

பவன் பாசமாசெட்டி இயக்கத்தில்  நாக சௌர்யா, யுக்தி தரேஜா நடிப்பில் தெலுங்கில் நெட்ஃப்லிக்சில் (netflix)ஆகஸ்ட் 4ம் தேதி வெளியானது.

5. பரேஷான் (  Pareshan)

ரூபக் ரொனால்ட்சன் இயக்கத்தில் திருவீர், பவனி கரணம், பன்னி அபிரான், சாய் பிரசன்னா, அர்ஜுன் கிருஷ்ணா, ஸ்ருதி ரியான் நடிப்பில் தெலுங்கில் சோனி லைவில் (Sony LIV) ஆகஸ்ட் 4ம்தேதி வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்.

1. சூனா (Choona)

ஜிம்மி ஷெர்கில், மோனிகா பன்வார், நமித் தாஸ் ,ஆஷிம் குலாட்டி நடிப்பில் புஷ்பேந்திர நாத் மிஸ்ராவின் இயக்கத்தில் இந்தியில் நெட்ஃப்லிக்சில் ஆகஸ்ட் 3ஆம்  தேதி வெளியானது.

2. தயா (Dayaa)

பவன் சதினேனி இயக்கத்தில்  ஜே.டி. சக்ரவர்த்தி நடிப்பில் தெலுங்கில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) ஆகஸ்ட் 4ம் தேதி வெளியானது.

OTT
தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா - வித்தியாசங்கள பார்ப்போமா?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com