Shruti Haasan
Shruti HaasanShruti Haasan

நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? - ரசிகரின் கேள்விக்கு Shruti Haasan-ன் கலகல பதில்!

பல சாதாரணமான கேள்விகள் மத்தியில, இப்படி ஸ்பெஷலான கேள்விகள் இடம்பெற்று ஸ்ருதிஹாசன்னுடைய இந்த கேள்வி பதில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி கலர்ஃபுல்லா தான் இருந்துச்சு.
Published on

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ?? அப்படின்னு ஃபாலோயர் கேட்க, 'பிரதர் எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு'ன்னு ரிப்ளை பண்ணி இருக்காங்க ஸ்ருதிஹாசன்! ஸ்ருதிஹாசன்னுடைய ரிப்ளை பலரையும் சிரிக்க வெச்சிருக்கு.

செலிப்ரட்டீஸ் எல்லாருமே தங்களுடைய ஃபேன்ஸ் கிட்ட பேசுறதுக்கு இன்ஸ்டாகிராமில் இருக்க ஒரு ஃபேமஸான ஃபீச்சர்ர பயன்படுத்துவாங்க. அந்த ஃபீச்சர் தான் 'கொஸ்டின் அண்ட் ஆன்சர் ஃபீச்சர்'. ஃபாலவர்ஸ் பல கேள்விகளை கேட்க, ஸ்ருதிஹாசன் சிரிப்பு வர்ற மாதிரியான பதில்களை வீடியோ மூலமா கொடுத்திருக்காங்க. இதுதான் இன்ஸ்டாகிராமயே இன்னைக்கு கலக்கிட்டு இருக்கு.

ஸ்ருதி ஹாசன்னும் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவும் சிங்கள்ஸ்ஸ கடுப்பேத்துற மாதிரி பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணிட்டு இருப்பாங்க. அப்படிதான் இன்னிக்கு ரசிகர்களுடைய கேள்விகளுக்கு ஜோடியா வீடியோ மூலமா பதில் சொல்லிட்டு இருந்தாங்க.

ஸ்ருதிஹாசன்னுடைய காதலர், அவங்களுடைய வளர்ப்பு பிராணி பூனை குட்டி, புடிச்ச எமோஜி, வாழ்க்கையில ரொம்ப விசித்திரமா பண்ண செயல் அப்படின்னு நார்மலான கேள்விகள் அடிக்கிட்டு இருந்த ரசிகர்கள் மத்தியில, ஒருத்தன் வந்தான்டா சிங்கம் மாதிரி ! அப்படின்னு சொல்ற மாதிரி தான் ஒரு ரசிகர் கேள்வி கேட்டாரு.

Shruti Haasan
தொடர்: பழைய பேப்பர் கடை - 'பாகிஸ்தான் பிரிவினையும் அப்பளத்தின் வரலாறும்'

'ஷாக்க கொற ஷாக்க கொற!!' அப்படின்னு சூரி சொல்ற மாதிரி தான் இருந்துச்சு அந்த கேள்வி. உங்களுக்கு விருப்பம் இருந்துச்சுன்னா நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமா அப்படின்னு ஒரு ரசிகர் கேட்டிருந்தார். இன்ஸ்டாகிராமில் தன்னோட லவ்வர் கூட சேர்ந்து பல போஸ்ட் போட்டுட்டு இருக்க இந்த நடிகை கிட்ட இப்படி ஒரு கேள்வியை கேட்டு மிகப்பெரிய பல்ப வாங்கி இருக்காரு இந்த ரசிகர். இந்தக் கேள்விக்கு சுருதிஹாசன் ஒரு வீடியோ மூலமா பதில் சொல்லி இருக்காங்க.''முடியாது ஏன்னா! அப்படின்னு அவங்களுடைய லவ்வர காட்டி ஒரு சிரிப்பு சிரிச்சிட்டாங்க'' இந்த பதில் சமூக வலைத்தளத்தில் எல்லாரையுமே சிரிக்க வைச்சிருக்கு.

அடுத்த ரசிகர் இன்னொரு கேள்வி கேட்டு இருந்தாரு. ஸ்ருதிஹாசனும் சாந்தனுவும் எடுத்து, யாருமே பார்க்காத அபூர்வமான ஒரு புகைப்படத்தை போஸ்ட் பண்ண சொல்லி கேட்டு இருக்காரு. 'ஏண்டா அத்தனை ஃபோட்டோ இருக்கும்போது யாருமே பார்க்காத போட்டோ உனக்கு வேணுமாடா?' அப்படின்ற மாதிரி தான் இருந்துச்சு..

அடுத்ததா ஒரு ரசிகர் கேட்டிருந்தார் பாருங்க ஒரு கேள்வி !! சாந்தனுவ தமிழ்ல பேச வைங்க !! அப்படின்னு கேட்டிருந்தாரு. சாந்தனுவும் சில தமிழ் வார்த்தைகளை பேசிட்டு, ஸ்ருதிஹாசன்ன பார்த்து 'அழகி'னு சொன்னாரு. அழகினு சொன்னதும் நம்ம மைண்ட்ல ''அழகியே !!! மேரி மீ !!! மேரி மீ!!!"ன்ற சாங் தான் ஓடுச்சு.

பல சாதாரணமான கேள்விகள் மத்தியில, இப்படி ஸ்பெஷலான கேள்விகள் இடம்பெற்று ஸ்ருதிஹாசன்னுடைய இந்த கேள்வி பதில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி கலர்ஃபுல்லா தான் இருந்துச்சு. ஆனாலும் இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ற சிங்கிள்ஸ் பாவம்தான் !!!

- நெ.ராதிகா.

Shruti Haasan
Billa பட நயன்தாரா பாத்திரத்தில் அசீன் நடிக்கவிருந்தாரா? - வைரலாகும் புகைப்படங்கள்!
Timepass Online
timepassonline.vikatan.com