ஒரே ஒரு Biscuit க்கு ஒரு லட்சம் அபராதமா? - பிஸ்கட் கம்பெனியை அலறவிட்ட சென்னை இளைஞர் !

ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசா. இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு ஐம்பது லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்கின்றது. அவ்வகையில் தினமும் 29 லட்சத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து கொள்ளை அடிக்கின்றது.
Biscuit
Biscuit timepass

பிஸ்கெட் பிரியரா நீங்கள்..? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்!

16 பிஸ்கெட் இருக்க வேண்டிய பிஸ்கெட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததற்காக கடந்த மாதம் நுகர்வோர் நீதிமன்றம்  படியேறினார் டில்லி பாபு என்பவர். ஆதாரத்துடன் அவர் நுகர்வோர் கோர்ட்டை நாடியிருந்ததால் பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான ITC லிமிடெட் நிறுவனம், டில்லிபாபுக்கு ஒரு லட்ச ருபாய் நஷ்ட ஈடாகக் கொடுக்க ஆணையிட்டுள்ளது.   இந்த டில்லி பாபு நம் சென்னையைச் சேர்ந்தவர் என்பது ருசிகரத் தகவல். 

கடந்த மாதம் சென்னையைச் சேர்ந்த டில்லிபாபு ஒரு மளிகைக் கடையில் 'சன்-ஃபீஸ்ட் மேரி லைட்' என்னும் பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கியிருக்கிறார். தெருநாய்களுக்குப் போடுவதற்காக அவர் இந்த கம்பெனி பிஸ்கெட்டுகளை வாங்குவது வழக்கமாம். உள்ளே 16 பிஸ்கெட்டுகள் இருப்பதாக வெளியே விளம்பரப்படுத்தியிருந்ததால் அந்த பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிய டில்லி பாபு, 'சும்மா எண்ணித்தான் பார்ப்போமே!' என முடிவெடுத்து பாக்கெட்டைப் பிரித்து எண்ணிப் பார்த்திருக்கிறார்.

அப்போது ஒரு பிஸ்கெட் குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். உடனடியாக தான் பிஸ்கெட் வாங்கிய கடையில் புகார் செய்திருக்கிறார். தயாரிப்பு நிறுவனமான ITC லிமிடெட் நிறுவனத்திடமும் தன் குறையைப் புகாராகக் கொடுத்திருக்கிறார். சரியான பதில் கிடைக்காததால் டில்லிபாபு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.

Biscuit
தொடர்: பழைய பேப்பர் கடை - 'பாகிஸ்தான் பிரிவினையும் அப்பளத்தின் வரலாறும்'

அவர் கொடுத்த புகாரில் அப்படி என்ன இருக்கிறது தெரியுமா..? 'ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசா. இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு ஐம்பது லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்கின்றது. இந்த எண்ணிக்கையின்படி பார்த்ததால் இந்த நிறுவனம் தினமும் 29 லட்சத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து கொள்ளை அடிக்கின்றது!' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு ITC நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல், 'பிஸ்கெட்டுகள் எடையை வைத்தே விற்கப்படுகின்றன... பிஸ்கெட் பாக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் எடை 76 கிராம்!'' என்றும் கூறினார். ஆனால், 'ஒரு பிஸ்கெட் பாக்கெட்டின் உண்மையான எடை 74 ஆக இருக்கிறது' என்று கோர்ட் கண்டுபிடித்தது.

Biscuit
'முன்னாள் கனவுக்கன்னியின் கோபம்' - நான் நிருபன் தொடர் | Epi 4

இதற்கு ITC எதிர்வாதமாக, '2011 சட்ட அளவியல் விதிகளின் படி முன் தொகுக்கப்பட்ட (pre-packaged) பொருட்களுக்கு 4.5 கிராம் வரை அதிகபட்ச முரண்பாடு இருக்கலாம்' என்று கூறியது. ஆனால் கோர்ட் அந்த விதி எளிதாக ஆவியாகின்ற (volatile) தயாரிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று நிராகரித்து விட்டது. மேலும் எடையை வைத்தே பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன என்ற வாதத்திற்கு கவரில் 16 பிஸ்கட்டுகள் என்று எழுதியுள்ளதால் நிராகரித்துவிட்டது நீதிமன்றம்.

ஆகஸ்ட் 29 அன்று நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை கையாண்டதற்காக அந்த நிறுவனமானது டில்லிபாபு அவர்களுக்கு ஒரு லட்ச ருபாய் அபராதமாக கொடுப்பதுடன் அந்த பேட்ச் பிஸ்கெட்டுகளின் தயாரிப்பையும் நிறுத்த ஆணை பிறப்பித்தது நீதிமன்றம்.

ஒரு பிஸ்கெட் என்றாலும் உழைத்து சம்பாதித்த காசு மிகப்பெரியது என்பதை உணர்த்திவிட்டார் டில்லிபாபு!

- ச.கமலி

Biscuit
Europe : 'மிக மிக சோம்பேறி குடிமகன்' போட்டி - முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.88,000 பரிசு !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com