நாசி கண்டார் மலேசியாவில் பிரபலமான இந்த உணவு தமிழ்நாட்டுக்குச் சொந்தமானதுன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? ஆனா அதான் நெசம். நாசி என்றால் சோறு, கண்டார் என்றால் தூக்கு கூடை. துலாபாரம் போன்ற அந்த தூக்கு கூடையின் ஒரு பகுதியில் சோறும் மற்றொரு பகுதியில் ஆடு, கோழி, மீன் என அசைவ ஐட்டங்களையும் அடுக்கி தோளில் தூங்கிவந்து வீதிகளில் விற்பனை செய்திருக்கிறார்கள்.
சாப்பாடு தட்டு மேல எல்லா வகையான குழம்பையும் ஊத்தி மிக்ஸ் பண்ணி கொடுக்குறதுதான் இந்த நாசிகண்டாரோட ஸ்பெஷலாம்.
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை பகுதியில் இருந்து மலேசியாவிற்கு வேலைக்கு சென்றவர்கள்தான் இந்த நாசிகண்டார் விற்பனையை முதன் முதலில் அங்கே தொடங்கியிருக்கிறார்கள். ஹோட்டல்கள் இல்லாத அந்த காலகட்டத்தில் இப்படி கூடைகளில் உணவு விற்பனை செய்திருக்கிறார்கள்.
காலப்போக்கில் ஹோட்டல்கள் துவங்கி விற்பனையை அங்கே மாற்றியிருக்கிறார்கள். கடை மாறினாலும் பெயர் மாறாமல் நாசி கண்டாராகவே இப்போதுவரை நிலைத்துவிட்டது.
நாசிகண்டார் என்றாலே பினாங் மாநிலத்தைதான் சொல்கிறார்கள். அங்குதான் முதன் முறையாக இந்த உணவு விற்பனையாகியிருக்கிறது. பின்னர் பிரபலமடைந்து மலேசியா முழுவதும் பரவியிருக்கிறது.
தமிழர்கள் மட்டுமல்லாமல் மலேசிய மக்கள், சீனர்கள் மலேசியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் என அனைவருக்கும் பிடித்த உணவாக மாறியிருக்கிறது. சென்னை பாண்டி பஜாரில் நாசிகண்டார் பெயரிலேயே ஒரு கடை இருக்கு பாஸ்!