'பேர பசங்களா.. தாத்தா சொல்றத கேளுங்கடா' - ராத்திரி நேர சானல் அட்ராசிட்டீஸ்

இந்த ராத்திரி நேர ரவுசுகள்ல ஒண்ணு சேனல்கள் காட்டுற அட்ராசிட்டீஸ். தெய்வீக லெவல் டார்ச்சர்களை இங்கே பந்திவைக்கிறேன் பாருங்க!
ராத்திரி நேர சானல்
ராத்திரி நேர சானல்டைம்பாஸ்

இந்த ராத்திரி நேர ரவுசுகள்ல ஒண்ணு சேனல்கள் காட்டுற அட்ராசிட்டீஸ். தெய்வீக லெவல் டார்ச்சர்களை இங்கே பந்திவைக்கிறேன் பாருங்க! பத்து மணியைத் தாண்டிட்டா, மூலிகை வைத்தியர்களோட நான் ஸ்டாப் கொண்டாட்டம், நமக்கெல்லாம் திண்டாட்டம். கழுத்துக்கு நெருக்கமா இறுக்கிவெச்சிருக்கிற ஃப்ரேம்ல ஒரு டாக்டர், தம்பதி சமேதரா உட்கார்ந்திருக்கிற இரண்டு அப்பாவிகளோட கேமராவைப் பார்த்து ஒப்பிச்சுட்டு இருப்பார்.

‘ஆமாங்க டாக்டரோட ட்ரீட்மென்ட்னால இன்னிக்கு கர்ப்பப்பை பிரச்னை சால்வ் ஆச்சு. இன்னிக்கு ரெண்டு குழந்தைக்கு அம்மாவா இருக்கேன்’னு சொல்லும் அந்த அம்மா. பக்கத்துல எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லைங்கிற மாதிரியே மிக்சர் தின்னும் மனநிலையில் கேமராவை பேந்தப்பேந்த பார்த்தபடி உட்கார்ந்திருப்பார் அந்தக் கணவன். பாவம்யா அந்த ஆளு!

ராத்திரி நேர சானல்
Facebook ப்ளூ லைக் பட்டன் அட்ராசிட்டீஸ்

இதுக்கெல்லாம் உச்சம் இன்னொரு சேனல். ‘அந்த’ நிகழ்ச்சியைத் தங்களு டைய பிரச்னைக்காக பார்க்கிறவங் களைவிட, காம்பியரிங் பண்ணுற அந்தப் புள்ள பேசுற கிக்கான பேச்சுக்காகப் பார்க்கிறவங்கதான் அதிகம். ‘சரிடாப்பா.

இதெல்லாம் பார்க்கிறதுக்கு வேற ஏதாச்சும் பார்க்கலாம்’னு சேனல் மாத்தினா, அங்கே ஒரே லேகிய விளம்பரங்கள் மயம். வயசான தம்பதிகள் நெளிந்துகொண்டு க்ளோஸ் அப்பில் ரொமான்ஸ் பண்ணி லேகியத்தோடு போஸ் கொடுப்பதை ரிப்பீட் மோடில் காட்டி, படுத்தி எடுப்பார்கள். யு-டர்ன் போட்டு வேற சேனல் போனால் ஆன்மிக மனம் கமழும் ஒரு சாமியார் அனுமான் மந்திரம் பற்றி பேசிக்கொண்டிருப்பார்.

இன்னொரு தம்பதி மகாலட்சுமி எந்திரம் விற்றுக்கொண்டிருக்கும். தங்கக்காசு வாங்கிவெச்சா, வீட்டுல ஐஸ்வர்யம் பெருகுமாம். அதை வாங்க வக்கு இருந்தா, நான் ஏன் இதை எழுதிக்கிட்டு இருக்கப்போறேன்?

ராத்திரி நேர சானல்
'விடாமல் துரத்தும் விஜயகாந்த்' - வெளியூர் பஸ் அட்ராசிட்டீஸ்

‘இதெல்லாம் சரிப்பட்டு வராது, பாட்டு பார்க்கலாம்’னு மியூஸிக் சேனல் பக்கம் தாவினால், சில சேனல்களில் ஜெய்சங்கரும் முத்துராமனும் வயதான காலத்தில் நடித்த, அதற்கு முன் கேள்விப்படாத பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டிருக்கும்.

இன்னொரு சேனல் பண்டைய காலத்துப் பாடல்களை தேடிப்பிடித்து ஒளிபரப்பிக்கொண்டிருக்கும். போதும்டா சாமி என டிஸ்கவரி சேனல் பக்கம் தாவினால், ‘இந்தக் காட்டுல இதுதான் எனக்கு உணவா கிடைச்சிருக்கு. கொஞ்சம் அழுகி இருந்தாலும் அழுகின முட்டைக்கோஸ் போல நல்லாவே இருக்கு’ என செத்துப்போன மலைப்பாம்பின் குடலை உருவி லவட்டிக்கொண்டிருப்பார் பியர்ல் கிரில்ஸ்.

ராத்திரி நேர சானல்
'சொல்லுங்க ரமேஷ்... அங்க புயல் எப்டி இருக்கு?' - நியூஸ் ரீடர் பரிதாபங்கள்

திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்தால், ‘மிஸ்டர் கதிரேசன்... நீங்க இருக்கிற ஏரியா அம்பத்தூர்தானே? புரோட்டா நிறைய சாப்பிடுவீங்கதானே? இன்டஸ்ட்ரியும் சூடு. புரோட்டாவும் சூடு. அதான் உங்களுக்கு துரித ஸ்கலிதம் ஆகிடுது’னு ஷாக்கிங் காரணம் சொல்லி கிடுகிடுக்கவைப்பார் ஒரு லேகிய டாக்டர்.

கண் அயர்ந்து தூங்கும் நேரத்தில் சேலம் சித்தவைத்திய தாத்தா, ‘டேய் நாசமா போயிடுவீங்கடா. உங்க தலைமுறையே இல்லாமப் போயிடும்டா’ என கதறல் குரலில் வைத்தியம் சொல்லிக்கொண்டிருப்பார். டி.வி-யை ஆஃப் பண்ணிவிட்டு ஃப்ரிட்ஜில் இருந்து கூலிங் வாட்டரை எடுத்துக் குடித்துவிட்டு தூங்கவேண்டியதுதான். தூக்கம் வரும்கிறீங்க!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com