Ilaiyaraaja : பாட்டு கேசட்ல பாட்டு கேட்ருக்கீங்களா? - அது ஒரு அழகிய Cassette காலம் !

சில மொக்கைப் படங்களில் கூட அற்புதமான பாடல்களைத் தந்து இருப்பார் ராஜா. அதை தனி நோட்டு வைத்து எழுதிக் கொள்வோம். அந்த நோட்டு தான் அப்போது கீதை, குரான், பைபிள் எல்லாமே.
ilaiyaraja
ilaiyarajatimepass

80களின் முற்பகுதியில் பிறந்தவர்களா நீங்கள்..? அப்படியென்றால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். ஒருவேளை 2கே கிட்ஸ் என்றாலும் படியுங்கள்.

டேப் ரெக்கார்டர் & கேசட் இவை இரண்டும் அறிமுகமானபோது உலகில் இதைவிட ஒரு விஞ்ஞான வளர்ச்சி ஏதும் இருக்காது என்று நம்பினோம். அந்தளவு டீனேஜில் வாழ்க்கையின் அங்கமாய் இருந்தன அவை. அதிலும் கேசட்டில் பாடல்கள் ரெக்கார்டிங் செய்யப் போவதே ஒரு தனி சுகம்.

பரீட்சைக்குக்கூட அப்படி தயாராகி இருக்க மாட்டோம் நமக்கு பிடித்தப் பாடல்களை பட்டியலிட்டு அதனை மியூசிக்கல்ஸ் என்ற பெயரில் அமைந்துள்ள ரெக்கார்டிங் கடைக்குச் சென்று கொடுத்துவிட்டால் 6 நாட்களுக்குப் பிறகு வரச் சொல்வார்கள். அதிலும் 60 நிமிட கேசட்டில் 12 பாடல்களும், 90 நிமிட கேசட்டில் 18 பாடல்களும் பதியலாம். கடைக்காரர்கள் நமக்கு 60 நிமிட கேசட்டை பரிந்துரை செய்வார்கள்.

ilaiyaraja
'காதல் பிசாசே.. காதல் பிசாசே..' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 14

90 நிமிட கேசட் டைட் ஆகி அடிக்கடி சிக்கிக் கொள்ளும் எனவும் கூறுவார்கள். உண்மையில் 60 நிமிடம் என்றால் இன்னொரு கேசட் அதிகமாக விற்கும் என்பது இதன் பின் ஒளிந்திருக்கும் வணிகம். முதலில் நம்மை சினிமா பற்றிய அறிவுத் தேடலில் விட்டவர்களும் மியூசிக்கல்ஸ் கடைக்காரர்கள் தான்.

என்ன பாட்டு என்ன படம் என்பதே அவர்களுக்குத் தெரியாது. என்ன படம் சொல்லுங்க தம்பி என்று நம்மிடம் கேட்பார்கள். இவர்கள் மிதவாதிகள். இசை ஞானம் இல்லாது சம்பாதிக்க இத்தொழிலில் இறங்கியவர்கள் தீவிரவாதிகள்.

சங்கர்கணேஷ் இசையமைத்த பாடல்களை இளையராஜா ஹிட்ஸில் பதிந்துத் தந்து விட்டுக் கேட்டால், 'தம்பி இது ராஜா மியூசிக்' தான் என்று தீக்குண்டமே இறங்குவார்கள். நாமும் பயந்து, 'ஆமாங்க... அண்ணன் சொன்னா சரியா தான் இருக்கும்!' என ஜகா வாங்க வேண்டி இருக்கும். இதற்காகவே தேடித் தேடி பாடல்கள் பற்றிய விவரங்களை எடுக்க கற்றுக் கொண்டோம். இதனால் வாசிக்கும் பழக்கம் அதிகரித்தது.

பிறகு சில வருடங்களில் ரசனையானவர்கள் இத்தொழிலில் வந்தார்கள். (ராமநாதபுரத்தில் அபிநயா, மதுரையில் கீஷ்டு கானம் கேசட் ரெக்கார்டிங் கடைகள் நினைவுக்கு வருகிறது.)

ilaiyaraja
நித்தம் நித்தம் நெல்லு சோறு - நினைவே ஒரு சங்கீதம் | Epi 17

இவர்கள் கடையில் அழகாக பைண்டிங் செய்யப்பட்ட பெரிய நோட் ஒன்று இருக்கும். அதில் அழகான கையெழுத்தில் படத்தின் பெயரும் பாடலின் முதல் வரியும் எழுதப்பட்டிருக்கும். அதற்கு நேராக ஒரு எண்ணும் குறிப்பிட்டு இருக்கும். அதன்படி எழுதிக் கொடுத்தால் போதும். அதிலும் சிலர் ரஜினி ஹிட்ஸ், கமல் ஹிட்ஸ், ராஜா ஹிட்ஸ் எனப் பிரித்து எழுதி இருப்பார்கள்.

சிலர் கலர் ஸ்கெட்ச்பேனாவில் தென்றல், நிலா, பூ, நெஞ்சம் எனத் தொடங்கும் பாடல்களாக தனித்தனி நோட்டுகளில் ரசனையாக எழுதி வைத்திருப்பார்கள். நாம் கேட்ட பாடல்களைப் பதிந்து அவர்கள் தந்து விட்ட அடுத்த நொடி வீட்டிற்கு வந்து டேப் ரெக்கார்டரில் பாடலைக் கேட்கும் சுகம் அடடா..!

இளையராஜாவின் பொற்காலமான 80-களில் 'கல்லுக்குள் ஈரம்', 'பன்னீர் புஷ்பங்கள்', 'ஆராதனை', 'மஞ்சள் நிலா', 'ஆனந்தக்கும்மி', 'காதல் ஓவியம்', 'சிட்டுக்குருவி', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'முதல் மரியாதை', 'புன்னகை மன்னன்', 'காதல் பரிசு', 'விக்ரம்' என பல வருடங்களாக ராஜா பட்டையை கிளப்பிய திகட்டாதப் பாடல்கள்.

சில மொக்கைப் படங்களில் கூட அற்புதமான பாடல்களைத் தந்து இருப்பார் ராஜா. அதைத் தேடி எடுத்து பதிவதில் தனிச்சிறப்பு. அந்தப் படங்களின் பேரெல்லாம் தேடுவதற்கு கூகுள் வசதி அன்று இல்லை. தனி நோட்டு வைத்து எழுதிக் கொள்வோம். அந்த நோட்டு தான் அப்போது கீதை, குரான், பைபிள் எல்லாமே.

ilaiyaraja
காதல் பட பாடலும் நா.முத்துக்குமாரும் - நினைவே ஒரு சங்கீதம் | Epi 18

இதற்குப் பிறகு அசெம்பிள் செட் வந்து சக்கைப் போடு போட்டது. இதற்காக தனி ஸ்பீக்கர் பாக்ஸ் செய்து வைத்திருப்போம். அப்போது மோகன், விஜயகாந்த், ராமராஜன் பாடல்களின் காலம். அந்தப் பாடல்கள் ஸ்டீரியோ இசையில் கிடைத்தன. ஏற்கனவே கேட்ட பாழைய கேசட்டில் அழித்துவிட்டு புதிய பாடல்கள் பதிவு செய்வதை ஹாபியாக வைத்திருந்தோம். கூடவே ரேடியோவோடு கூடிய டேப் ரெக்கார்டரில், இலங்கை வானொலியில் ஒலிக்கும் பழைய பாடல்களை ரெக்கார்ட் செய்து கேட்கும் வினோத பழக்கமும் அப்போது எங்களுக்கு இருந்தது.

கேசட்டில் இளையராஜா பாடல்களை ஸ்டீரியோ இசையில் அலற விட்டு கேட்டது ஒரு அலாதி இன்பம். கேசட்டில் டேப் சிக்கிக் கொள்வது, அதைப் பென்சிலால் சரி செய்வது, அறுந்து போன டேப்பைக் 'குய்க்பிக்ஸ்' வைத்து ஒட்டுவது போன்ற மெக்கானிக் வேலைகளும் தெரிந்து வைத்துக் கொண்டோம். அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பர்களே..!

-  மு.பிரேம் குமார்

ilaiyaraja
New Year Tamil Song: இளமை இதோ இதோ - நினைவே ஒரு சங்கீதம் | Epi 19

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com