
முன்னெலா சீரியல்ல ஆள மாத்தணும்னா "இவருக்கு பதில் இவர்" அப்படின்னு போட்டுட்டு இருந்தாங்க. ஆனாl, இப்போ நிறைய சீரியல்ல ஹீரோயினயோ இல்ல முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சவங்கள மாத்தும்போதோ Facial Transplantation பண்ணிட்டாங்கனு உருட்டுவாங்க. இந்த Facial Transplantation பத்தி பாக்கலாம்.
Face Transplantationனு சொல்லப்பட்ற 'முகம் மாற்று அறுவை சிகிச்சை' மனிதர்கள் கிட்ட பண்ணக்கூடிய கஷ்டமான அறுவை சிகிச்சைகள்ல ஒன்னு. இந்த முகம் மாற்று அறுவை சிகிச்சை எல்லாருக்குமே சுலபமா பண்ணிடமாட்டாங்க. ஒருத்தருக்கு முகம் ரொம்ப சிதைந்து இருக்கு, ரொம்ப பாதிப்படைந்து இருக்கு, தீ விபத்து இல்ல வேற கொடூரமான சாலை விபத்து போன்ற விபத்துகள்ல முகத்துடைய தன்மைய இழந்தவங்க, இல்ல, சில மரபியல் ரீதியான குறைபாடுகள்னால முகத்துல ஏற்படுற கட்டிகள்னால முகத்துடைய தன்மைய இழந்தவங்க, சுவாசிக்கிறது, சாப்பிடுவது, மாதிரியான அத்தியாவசிய தேவைகளையே பண்ண முடியாத அளவுல முகம் பாதிச்சி இருக்குற பட்சத்துல தான் பாதிப்படைந்த அந்த நபருக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சைய பண்ணுவாங்க.
இந்த அறுவை சிகிச்சை, களிமண் பொம்மைக்கு தலைய வைக்கிற மாதிரி சீக்கிரமாவோ ஒன்னு ரெண்டு பேர வச்சோ பண்ணிட முடியாது. இந்த முகம் மாற்று அறுவை சிகிச்சை பண்றதுக்கு 10-30 மணி நேரம் ஆகும். Facial Transplantationன மருத்துவ வல்லுனர்கள் குழுவா சேர்ந்துதான் பண்ணுவாங்க. டீ குடிக்கிற Gapல எல்லாம் Facial Transplantation பண்ணிட முடியாது. இந்த அறுவை சிகிச்சை பண்றதுக்கு படிப்படியா என்னென்ன பண்ணுவாங்கன்றத பாக்கலாம்.
கொடையாளர் தேர்வு : ஒரு நபர் இறக்கறதுக்கு முன்னாடியே உடல் உறுப்புகள் தானம் செய்றதுக்கு சம்மதிச்சு, அதுக்கான வேலைப்பாடுகள்ல செஞ்சியிருப்பாங்க. அப்படிப்பட்ட அந்த இறந்த நபருடைய முக அமைப்பு, திசுக்கள், தசைகள், இரத்தம்லாம் Face Transplantation பண்ணபோற அந்த நபருக்கு Set ஆகுதாங்கறத பார்த்து கொடையாளர முதல்ல தேர்ந்தெடுப்பாங்க.
முன் வேலைப்பாடு : முகமாற்று அறுவை சிகிச்சைய எளிதாக்குற விதமா, CT ஸ்கேன் மற்றும் 3D கணினி மாடலிங் மாதிரியான விரிவான இமேஜிங்க கொடையாளர் மற்றும் Face Transplantation பண்ணிக்கப்போற அந்த நபருடைய முகத்துல பண்ணுவாங்க. அந்த Patient உடைய முக அமைப்பையும், கொடையாளருடைய முக அமைப்பையும் மேப் மாதிரி வரைஞ்சு (graph) வச்சிப்பாங்க.
பிரித்தெடுத்தல் : அடுத்ததா கொடையாளருடைய முகத்த Patientக்கு தேவையான மாதிரி பிரிப்பாங்க. கொடையாளருடைய முகத்தோல், கொழுப்பு, தசைகள், இரத்த நாளங்கள், நரம்புகள்ல அறுவை சிகிச்சை மூலமா அகற்றுவாங்க.
பெறுநரை தயார்படுத்துதல் : Facial Transplantation பண்ணிக்கபோற Patient முகத்துல பாதிப்படைஞ்ச திசுக்கள், இரத்த நாளங்கள், தேவையற்ற தசைகள் ஏதாவது இருந்தா அதை நீக்குவாங்க. கூடவே கொடையாளர்கிட்ட இருந்து வைக்கப்படுற முகத்த வைக்கிறதுக்காக Patientவுடைய முகத்துல இருக்க ரத்த நாளங்களையும் திசுக்களையும் தயார் படுத்துவாங்க.
வாஸ்குலர் மற்றும் நரம்பு அனஸ்டோமோசிஸ்: நுட்பமான அறுவை சிகிச்சை முறைகள பயன்படுத்தி கொடையாளர் முகத்துல இருக்க இரத்த நாளங்களையும் Patient முகத்துல இருக்க இரத்த நாளங்களையும் இணைப்பாங்க. முகத்துல இருக்க திசுக்கள மாத்துவாங்க. இதனால ரத்த ஓட்டத்துல பாதிப்பு ஏற்படும்.
இரத்த ஓட்டம் சீரா இருக்கணும்னு தான் இரத்த நாளங்களை இணைப்பாங்க. அது மட்டும் இல்லாம Patientவுடைய முகத்துல உணர்ச்சிகள் தெரியணும்னு தான் இரத்த நாளங்களை இணைப்பாங்க. இதுக்கு பேரு தான் வாஸ்குலர் மற்றும் நரம்பு அனஸ்டோமோசிஸ்.
கிராஃப்ட் பிளேஸ்மென்ட்:
கொடையாளர் முகத்துல இருந்து எடுக்கப்படுற சின்ன பகுதியோ, இல்ல முழு முகத்தையோ Patientவுடைய முகத்துல வைப்பாங்க. இதுதான் ரொம்ப முக்கியமான பகுதி. Patientவுடைய முக சமச்சீர்மை, தோல் நிறம், மத்த அழகியல் பரிசீலனைகள்ல கணக்குல வெச்சிதான் இந்த சர்ஜரி நடக்கும்.
நோய் எதிர்ப்பு மருந்துகள் : அறுவை சிகிச்சை முடிந்த அப்புறம் தோல்ல ஏற்பட்டிருக்க கீறல்கள்ல சரி செய்வாங்க. கூடவே, தையல் போட்டு இருக்க இடங்களுக்கு மருந்து போட்றது, நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கிறது மாதிரியான தடுப்பு விஷயங்கள்ல பண்ணுவாங்க. கிராப்ட்டிங் பிரியாம இருக்கணும்னு சில முக்கியமான மருந்துகளையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பாங்க.
அறுவை சிகிச்சைக்கு பின் : அறுவை சிகிச்சை பண்ணி கொஞ்ச நாட்களுக்கு Patientஅ தீவிர சிகிச்சை பிரிவுல வச்சி கண்காணிப்பாங்க. சரியான நேரத்துல சரியான மருந்து கொடுக்குறதுக்காக தான் இப்படி வச்சிருக்காங்க.
மத்த அறுவை சிகிச்சை மாதிரி இல்ல, முகமாற்று அறுவை சிகிச்சை ரொம்ப அரிதான அறுவை சிகிச்சை. உலகத்துலயே ரொம்ப குறைவான எண்ணிக்கையில தான் முகம் மாற்று அறுவை சிகிச்சை பண்ணியிருக்காங்க.
ஆனா நம்ம ஆளுங்க நடுரோட்டிலேயே இதை பண்ணிருவாங்க. சன் டிவில ரோஜா சீரியல்ல ரோஜாவோட முகத்த இன்னொரு பெண்ணுக்கு Facial Transplantation பண்ற மாதிரி ஒரு எபிசோட்ல இருக்கும். ஒரு Face maskஅ இன்னோரு பெண்ணோட கழுத்துல வச்சு களிமன் பொம்மையை செதுக்குற மாதிரி காட்டியிருப்பாங்க. "பத்து இருபது மணி நேரம் பண்ண வேண்டிய ஆப்ரேஷன்ன பத்தே நிமிஷத்துல ரோட்ல பண்ணியிருக்கியே !!இதெல்லாம் உனக்கே நியாயமா ??" அப்டினுதா இந்த எபிசோட் பாத்த மருத்துவர்கள் நினைச்சிருப்பாங்க.