பீக் டைம், காலை டைம், மதிய டைம், பிரைம் டைம்-ன்னு எல்லா டைம்லயும் நம்ம வீட்டு டி.வி-ல சீரியல் ஓடிக்கிட்டே இருக்கு. நிக்காம இப்படி ஓடிட்டே இருக்கே-ன்னு அதை பாத்த லாரி லாரிய கண்ட்ன்ட் கொட்டிக் கிடக்குது.
மோஸ்டா எல்லா சீரியல்களும் ஆடம்பர மாமியார், அப்பாவியான மருமகள்-ன்னு தான் ஆரம்பிக்குது. மாமியார் நல்லவங்களா இருந்தாலும், வில்லியா இருந்தாலும் அவங்க மருமகள் மாமியாருக்காகவே வாழ்றாங்க. 'நீங்க என்ன சொன்னாலும் சரி தான்' என்று தலையாட்டிக்குறாங்க. பல சீரியல்கள் ஹீரோயின்கள் படிக்காதவங்களா, இங்கிலீஷ் பேச தெரியாதவங்களா தான் இருப்பாங்க. ஆனா திடீர்ன்னு ஒருநாள் அவங்க மாமியாரோ, கணவரோ இல்ல அவங்க குடும்பமோ அசிங்கபடும்போது, 'Once upon a time, there lived a ghost'-ங்குற மாதிரி கடகடன்னு இங்கிலீஷ் பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஹே எப்புட்றா?
இப்போ இருக்கற காலத்துல கிராமமா இருந்தாலும் சரி, சிட்டிலயும் சரி எந்தவொரு பெண்ணும் தினமும் தாவணி கட்டறதில்ல. நீ பாத்தியா-ன்னு சண்டைக்கு வந்தராதீங்க. ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டுனவரைக்கும் சொல்றேன். சரி கண்டன்ட்க்கு வருவோம். ஆனா முக்காவாசி சீரியல்கள்ல ஹீரோயின் தாவணி போட்டுட்டு அப்பாவியா தான் இருப்பாங்க. அந்த தாவணியும் பெரும்பாலும் கி.மு காலத்து தாவணி மாதிரியே பாக்கறதுக்கு இருக்கும்.
இதையெல்லாம் விட, அண்ணியார் முதல் பெரியம்மா வரை நல்ல ஜகஜோதிய பட்டு சேலை, ரெண்டு நெக்லேஸ், மூணு அடுக்கு கம்மல்-ன்னு கலக்குவாங்க. ஏன் சோக காட்சிகள்ல கூட டிசைனர் சேலையில தான் இருப்பாங்க. இந்த சேலைய அவங்க ஹீரோயின்களுக்கு வாடகைக்கு கொடுத்தாக்கூட அவங்களும் ஆடம்பரமா தெரிவாங்கள்ல?
ஹீரோயின் சேலைய குத்துவிளக்குல காட்டி நெருப்பு பத்த வைக்கறது, பாய்சன் கொடுக்கறது, ஆள கடத்தறது, ஆள கொல்றது...இப்படி பல பல வேலைகள்ல செஞ்சு ஹீரோயின ஹீரோகிட்ட இருந்து பிரிக்கறது, வீட்ட விட்டு துரத்தறது, கம்பி என்ன விடறது-ன்னு ஏகப்பட்ட வில்லத்தனங்கள் செய்யும் வில்லிகள். இதையெல்லாம் பண்ற வில்லிகள் நம்ம அண்ணியார் மாதிரியும், பெரியம்மா மாதிரியும் நல்ல ஆடம்பரமா டிரஸ் பண்ணியிருப்பாங்க.
டிரஸ்ஸ பத்தியே பேசறியே 'உனக்கு ஏன் பொறாமை?'-ன்னு நீங்க நினைக்கலாம். நல்லா யோசிச்சு பாருங்க...சீரியல் பாத்து பழகுன நமக்கு யாராவது மாடர்னாவோ, ஆடம்பரமாவோ டிரஸ் போட்ருந்த அவங்கள வில்லி-ன்னு தான் நம்மலயே அறியாம நினைச்சுட்டு இருக்கோம்.
இருங்க கருத்து சொன்னதுல...முக்கியமான ஒரு டிரஸ்ஸ பத்தி மறந்துட்டேன். இந்த காலத்துல டிரஸ்ல ரொம்ப முக்கியமானது நைட்டி. இவ்வளவு ஏன்? இந்தியாவின் தேசிய உடையே நைட்டி தான்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா இப்படிப்பட்ட நைட்டிய இப்போ வர்ற எந்தவொரு சீரியலயும் பாக்கவே முடியறது இல்லை. அப்படியே இருந்தாலும், ஏதோ ஒண்ணு ரெண்டு சீரியல்ல தான் பாக்க முடியும்.
சரி...வேற டாபிக்-க்கு ஜம்ப் பண்ணுவோம். இப்போலாம் சீரியல்கள்ல சினிமாவுக்கு மிஞ்சுன பல சீன்கள் வருது. அதுக்கு சில உதாரணங்கள் சண்டை காட்சிகள், ஓடற ஆம்னி வேன்ல பிரேக் சரி பண்ற காட்சிகள், பிளாஸ்டிக் சர்ஜரிகள், பொசுக்கு பொசுக்கு-ன்னு கன் எடுக்கும் காட்சிகள், 5 கிலோ மீட்டர் தள்ளி இருக்க எதிரிய ஸ்நைப்பர் கன் இல்லாம சாதா பிஸ்டல்லயே அசால்டா ஷூட் பண்றது... இப்படி 'போதும் போதும் லிஸ்ட் பெரிசா போகுது'-ங்கற மாதிரி ஏகப்பட்ட காட்சிகள்.
'எவ்ளோ அடிச்சாலும் தாங்குற, நீ ரொம்ப நல்லவன்'-ங்கற மாதிரி வில்லிகள் எவ்ளோ வில்லத்தனம் செய்தாலும், ஹீரோயின்கள் அமைதியா பக்குவமா தான் ஹேண்டல் பண்ணுவாங்க. இதையெல்லாம்விட ஒவ்வொரு முறை அவங்க வில்லிகள் நாலு பக்க டயலாக் பேசி மன்னிக்குறது கொடுமையின் உச்சம்.
அப்புறம் எந்தவொரு ஹீரோ, ஹீரோயின்களுக்கும் கல்யாணம் நல்லப்படியா, சண்டை சச்சரவு இல்லாம நடக்காது. இதெல்லாம் முடிஞ்சு அவங்க சேர்றதுக்கே ஒரு யுகம் தேவைப்படும். ஒவ்வொரு சீரியல் கதையிலும் கண்டிப்பா ஒரு வில்லி இருப்பாங்க, அவங்க ஹீரோவ லவ் பண்ணுவாங்க, ஹீரோகிட்ட இருந்து ஹீரோயினை பிரிக்க ஏகப்பட்ட சதிகள் நடக்கும், இதற்கு வில்லிக்கு உதவி செய்ய ஒரு ஆன்டி, நாலு அடியாட்கள்- இது எல்லாம் சீரியல்களோட எழுதப்படாத விதிகள்.
கடைசியா...முக்கியமா...அத்தான், மாமா, பிராணநாதா... மாதிரியான வார்த்தகளுக்கு சரியான மாற்று என்ன-ன்னு தெரியுமா மக்களே? சார், சின்னையா, பெரிய அய்யா...