Tonsure
Tonsureடைம்பாஸ்

Tonsure Vibe: உலக மொட்டையர்களே ஒன்று கூடுங்கள்!

இவர்களையெல்லாம் கூட்டி தனிக்கட்சி தொடங்கினால் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று ஜெயிக்கமுடியும் என்கிற அளவுக்கு மக்களுக்கு முடி கொட்டி இருக்கிறது.
Published on

இப்பல்லாம் யாராவது மொட்டை தலையோடு என்னிடம் வந்து பேசினாலே அன்பும் அரவணைப்பும் இயல்பாகவே வந்துவிடுகிறது. மொட்டையர்கள் எல்லோரும் நிச்சயம் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள் என்று மனம் நம்பவும் தொடங்கிவிடுகிறது. இவங்கள்லாம் நம்ம உறவினர் நம்ம க்ளோனிங் நம்ம இனம் நம்ம Tribeன்றது காரணமாக இருக்கலாம்.

இந்த சொட்டை மொட்டைகளை பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி. இந்த பிரபஞ்சத்தில் நாம தனியா இல்ல என்கிற எண்ணத்தின் வெளிப்பாடாக அது இருக்கலாம். அல்லது நம்மைப்போலவே இவரும் பாவம்ல என்கிற பரிதாப உணர்வாக இருக்கலாம்!

Tonsure
'இம்சை டிராவல்ஸ்': வெளியூர் பஸ் பரிதாபங்கள்

சமீபத்தில் ஒருவிழாவுக்கு சென்று இருந்தேன். எங்கெங்கு காணினும் மொட்டையர்கள். திருப்பதி தேவஸ்தானம் போல அகிலமே மொட்டையர்களால் நிறைந்திருப்பதாக ஒரு தோற்றம். ஒரு எண்ணம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நான் மட்டும்தான் இந்த ஊரில் சொட்டை மொட்டையனாக திரிந்துகொண்டிருப்பேன். சொட்டையர்கள் எல்லாம் ஏதாவது ஒரு டைப்பில் கிராப்புதான் வெட்டிக்கொண்டிருந்தார்கள்.

இவங்கள்லாம் சலூன்ல போய் என்ன சொல்லி முடிவெட்டிக்குவ்வாங்க என்பது ஆச்சர்யப்படுத்தும் கேள்வியென இருக்கும். அல்லது விக் வைத்துக்கொள்வார்கள். ரஜினிகாந்த் சத்யராஜ் எஸ்ரா மாதிரி பிரபலங்கள் கூட சைடுவாக்கில் கட்டிங் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

Tonsure
Chennai: சொந்த ஊர் vs சென்னை பரிதாபங்கள்

ஆனால் இப்போதெல்லாம் எல்லா சொட்டையர்களும் மொட்டையர்களாக மாறிவிட்டார்கள். கூடவே பிரன்ச் பியர்டும் வைத்துக்கொள்கிறார்கள். மொட்டையர்களாக இருப்பது எளிது. அது ஒரு ஞானநிலை. துறவு நிலை. யாராவது மொட்டையர்களை எதிர்கொள்ளும்போது தினமும் அடிச்சிப்பீங்களா வீக்லி ட்வைஸா என்பது மாதிரி விசாரிப்புகள் வந்துவிட்டன.

இந்த மொட்டையர்களைக் காண மனிதகுலத்தின் புதிய பரிணாம வளர்ச்சிபோல இருக்கிறது. ஜானிசின்ஸ், ராக், ஜேசன் ஸ்டாதம், ப்ரூஸ்வில்லிஸ், கோவிந்த் வசந்தா, மொட்டை ராஜேந்திரன், ப்ளிப் ப்ளிப் சர்வ், வடிவேலு படத்தில் தெலுங்குபோல பேசுகிற காமெடியன் என உலகெங்கிலும் மொட்டையர்களிலும் முக்கியமானவர்கள் பெருகிவிட்டார்கள்.

இவர்களெல்லாம் ஒரே அச்சில் வார்த்த மனிதர்களோ என்று குழப்பம் வருகிறது. குரங்குகளில் பல்வேறு வகை குரங்குகள் இருப்பதுபோல இந்த சொட்டைமொட்டை பிரஞ்சு தாடியர்கள் மனித இனத்தில் தனி இனமாக வருங்காலத்தில் திரளக்கூடிய சாத்தியங்கள் தெரிகிறது. அந்த அளவுக்கு மொட்டைகளின் வளர்ச்சி அதிகரித்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் சாட்டிலைட் பார்த்து கண்டுபிடித்திருக்கிறார்கள். சாட்டிலைட் கேமராவில் க்ளார் அடிக்கும்போல!

இவர்களையெல்லாம் கூட்டி தனிக்கட்சி தொடங்கினால் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று ஜெயிக்கமுடியும் என்கிற அளவுக்கு மக்களுக்கு முடி கொட்டி இருக்கிறது. அதிகமான ஓட்டுகளை மொட்டையர் முன்னேற்ற கழகம் பெரும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. வருங்காலத்தில் ஆட்சி அமைக்கிற அளவுக்கு கூட தேர்தல் வெற்றி கிடைக்கலாம். ஈகூகளுக்கும் (2K Kids) தாறுமாறாக முடி கொட்டிக்கொண்டிருக்கிறது!

உலக மொட்டையர்களே ஒன்று கூடுங்கள் என அறைகூவல் விடுத்து மாநாடு நடத்தினால் வெற்றி நிச்சயம். நீங்கள் தயாரா?

- அதிஷா வினோத், ஊடகவியலாளர்.

Tonsure
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'தாய்மையைப் போற்றும் தாடிக்காரன்' யஷ்
Timepass Online
timepassonline.vikatan.com