Twitter : வர்ட்டாஆஆ மாமே டுர்ர்ர் - TATA வுக்கும் டாடா காட்டிய Bluetick !

எவ்வளவோ பேருக்கு டாட்டா காட்டியிருக்க இந்த ட்விட்டர் ப்ளூடிக் கடைசில ரத்தன் டாடாவுக்கும் டாட்டா காட்டி இருக்கு..
Twitter
TwitterTwitter

தொழில்நுட்பங்கள் மாறிட்டு வர்ற இந்த காலக்கட்டத்துல மக்கள் உலகம் முழுக்க நடக்குற தகவல்கள சேகரிக்கவும், மக்கள்கிட்ட உரையாடுறதுக்கும் சமூக வலைத்தளங்கள பயன்படுத்துறாங்க. அதுலயும் ட்விட்டருடைய பங்கு ரொம்பவே அதிகம்..

ட்விட்டர்ல பிரபலங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான கணக்குகளுக்கு இலவசமா ப்ளூ டிக் குடுத்துட்டு இருந்தாங்க. ஆனா இந்த ட்விட்டர் நிறுவனத்தை உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரரான எலன் மாஸ்க் வாங்குன அப்ரம் ப்ளூ டிக்-க்கு கட்டணம் வசூலிக்கப்படும்னு சொன்னாரு..

Twitter
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

இப்படி கட்டணம் செலுத்தாத கணக்குகளுக்கு இருக்க ப்ளூ டிக்க ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நீக்குறதா அறிவிச்சாங்க. அப்ரம் ஏப்ரல் 20ல இருந்து நீக்கிறதா அறிவிச்சாங்க.. இந்த நிலையில முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரைப்படக் கலைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள்னு நிறைய பேருடைய ப்ளூ டிக்க நீக்கியிருக்கு ட்விட்டர் நிறுவனம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடைய ப்ளூடிக்க நீக்கி இருக்காங்க. நம்ம முதலமைச்சரால மாசத்துக்கு ஆயிரம் ரூபா கட்டி ப்ளூ டிக்க தக்க வச்சிக்க முடியலையேன்னு நெட்டிசன்கள் வறுத்தெடுக்குறாங்க.

பதவி தான் போச்சு, எட்டு வருஷத்துக்கு எலக்சன்ல நிக்க முடியாம போச்சுன்னு பார்த்தா, ட்விட்டர்ல ப்ளூ டிக்கும் போச்சு நம்ம ராகுல் காந்திக்கு.. அவருக்கு நேரம் சரியில்ல போல !!

Twitter
TN Police : '6 மாசமா இதான் பண்றேன்' - போலீஸ்போல நடித்து வசூல் வேட்டை நடத்திய இளைஞர் !

எவ்வளவோ பேருக்கு டாட்டா காட்டியிருக்க இந்த ட்விட்டர் ப்ளூடிக் கடைசில ரத்தன் டாடாவுக்கும் டாட்டா காட்டி இருக்கு.. டாடாவுக்கு டாட்டா காட்டிய ட்விட்டர் .. அடடே ஆச்சரிய குறி !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ல இருந்து லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வரைக்கும், சூப்பர் ஸ்டாருடய மருமகன் தனுஷ்ல இருந்து திரைப்பட பிரபலங்கள் நிறைய பேருடைய ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டிருக்கு.

ஃபாரின் கார்ர காசு கொடுத்து வாங்க தெரிஞ்ச விஜய்க்கு ட்விட்டர் ப்ளூ டிக்க வாங்க தெரியலயேனு விஜய நெட்டுசன்ஸ்கள் மீம்ஸ் போட்டு கலாய்ச்சிட்டு இருக்காங்க..

இவங்கள கடந்து, விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், கார்த்தி, ஸ்ருதிஹாசன் உடைய ட்விட்டர் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டிருக்கு.. விக்ரம் படத்தை இயக்கி, லியோ படத்த இயக்கிட்டிருக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு படத்த இயக்க டைம் இருந்திருக்கு, ஆனா ட்விட்டர் ப்ளூ டிக்க வாங்க டைம் இல்ல போல.. அவருடைய ப்ளூ டிக்கமும் இருக்காங்க.

திரைப்பட நடிகர்கள தாண்டி, இசையமைப்பாளர்களான, ஏ.ஆர்.ரகுமான், ஜிவி பிரகாஷ், சந்தோஷ் நாராயணனுடைய ட்விட்டர் ப்ளூ டிக்கும் போச்சு!!

பிரபல கிரிக்கெட் வீரர்களான தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா உடைய ட்விட்டர் ப்ளூ டிக்கும் இவங்க அடிக்கிற சிக்ஸ் மாதிரி பிச்சிட்டு போயிடுச்சு !!

கட்டணத்தை செலுத்த தவறுன இந்த பிரபலங்களுக்கு வர்ட்டாஆஆஆ மாமே டுர்ர்ர் ப்ளூடிக் போயிடுச்சு !!

Twitter
IPL சுவாரஸ்யங்கள் : வாயில் ப்ளாஸ்த்ரி ஒட்டிய MI Pollard !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com