ரக ரகமான திங்கட்கிழமை! - இதுல உங்க version எது?

ரெண்டு நாள் லீவுல இருந்துட்டு திங்கட்கிழமை காலைல பிரெண்ட்ஸ் முகத்தை பார்க்கும்போது வரும் பாருங்க ஒரு சந்தோசம் அப்படியே மனசுக்குள்ள ஏ ஆர் ரகுமானோட முஸ்தபா முஸ்தபா பாட்டு ஓடும்.
Monday
MondayTimepass

திங்கட்கிழமை ஒவ்வொரு வாரமும்  தான் வருது. ஆனா ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே மாதிரியாவா இருக்கு. ஒவ்வொரு  திங்கட்கிழமையும் ரக ரகமால இருக்கு.

வாரத்தோட முதல் திங்கள்கிழமை பாரத்தோட தொடங்குதே. ஏன்னா நம்ம எல்லாருமே ஞாயிற்றுக்கிழமை ஃபுல் ரெஸ்ட் எடுத்துட்டு திங்கட்கிழமை காலையிலேயே எழுந்து ஆபிஸ், ஸ்கூல், காலேஜ் போகணும்னா எவ்ளோ கஷ்டமா இருக்கும்.

வெள்ளிக்கிழமை ஈவ்னிங் டீச்சர் கொடுத்த ஹோம் வொர்க்க, நமக்கு தான் ரெண்டு நாள் லீவ் இருக்கே பொறுமையா பண்ணிக்கலாம்னு சொல்லியே ஹோம் ஒர்க் பண்ணாம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு திங்கட்கிழமை காலையிலேயே எழுந்து ஹோம்வொர்க்க பண்ணுவாங்க.

அதுமட்டுமா அய்யோ திங்கட்கிழமை வந்துடுச்சே! ஸ்கூல் போகணுமா அப்படின்னு அம்மா கிட்ட பொய் சொல்லி அதையும் அம்மா கண்டுபிடிச்சு அவங்க கிட்ட செமையா அடி வாங்கிட்டு நம்ம சின்ன வயசுல ஸ்கூல் போவோம். ஏன் இப்பவும் ஸ்கூல் போற 2K கிட்ஸ் இதுமாதிரி அம்மாகிட்ட அடி வாங்கி அழுதுட்டுதான் ஸ்கூல் போயிட்டு இருக்காங்க.

Monday
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'தாய்மையைப் போற்றும் தாடிக்காரன்' யஷ்

ஸ்கூல் போற பசங்கள விட ரொம்ப டயடாவும் சோம்பேறித்தனமாகவும் போறது வேலைக்கு போற இந்த அங்கிள்தான். டெய்லியும் காலைல  அந்த பெட்ல இருந்து எந்திரிக்கவே மனசில்லாம எழுந்து அரைகொறையா பல்ல துலக்கிட்டு அயன் பண்ண டிரஸ் கசங்காம போட்டுட்டு போய் ஆபீஸ்ல உட்கார்ந்தா, காலைல பத்து மணிக்கு வரும் பாருங்க ஒரு கொட்டாவி, அடடடா....,,,, அவ்வளவு டயர்டா இருக்கும் இது எல்லாத்துக்குமே காரணம் இந்த மோசமான திங்கட்கிழமை தான்.

இதைவிட பெரிய வேலையை வீட்ல இருக்க நம்ம அம்மாவுக்கு தான் காலையில ஆபீஸ் போற ஹஸ்பண்டுக்கும் ஸ்கூல் காலேஜ் போற பசங்களுக்கும் அவ்ளோ வேக வேகமா சமைக்கணும் பொதுவாவே வீட்ல இருக்க பெண்களுக்கு  என்னதான் லீவு  நாளா இருந்தாலும் அவங்களுக்கு அது  வேலை நாள் தான்.. இதுலயும் இந்த திங்கட்கிழமை டபுள் வேலை ஏன்னா, சோம்பேறித்தனமா ஸ்கூலுக்கு போக கூடாதுன்னு நினைக்கிற பையனையும் கொட்டாய் விட்டுட்டே ஆபீஸ் போற ஹஸ்பண்டையும் அனுப்பி வைக்கணும் இல்ல.

அவங்களுக்கு சமச்சி, டிபன் பேக் பண்ணி, அவங்கள அனுப்பிவிட்டு வந்து உட்கார கூட டைம் இருக்காது. உடனே வீட்ட கூட்டிட்டு, பாத்திரம் விளக்கணும், துணி துவைக்கணும் இந்த மாதிரி நிறைய வேலை இருக்கும்.  ஆனா வீட்ல இருக்குற பெண்களுக்கு இந்த திங்கட்கிழமையிலும் ஒரு பெரிய சந்தோஷம் இருக்கு அது என்ன தெரியுமா?  ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் வீட்ல இருந்துட்டு திங்கட்கிழமை வேலைக்கு போயிடுவாங்க,  சோ வீட்ல பெண்கள் மட்டும் தான் இருப்பாங்க. 

Monday
தமிழ் சினிமாவை உலுக்கிய லெட்சுமி காந்தன் கொலை வழக்கு - பழைய பேப்பர் கடை | Epi 9

என்னதான் வீட்டு வேலை இருந்தாலும், திங்கட்கிழமை ஆனால் சீரியல் போட்டுடுவாங்க காலைல 10 மணிக்கு தொடங்கின சீரியல் சாயந்தரம் அஞ்சு மணி வரைக்குமே போகும். இந்த சீரியல் பார்க்கிறதிலேயே அவங்களுக்கு இருக்க வேலை அலுப்பு எல்லாம் தொலைஞ்சு போயிடும்.

சரி இதெல்லாம் கூட இருக்கட்டும். இதெல்லாம் விட திங்கட்கிழமை அப்படினா ஒரு முக்கியமான விஷயம் இருக்கு என்ன தெரியுமா??  பப்ளிக் பஸ்ஸில ஸ்கூல் ,காலேஜ் ,வேலைக்கு போறவங்க எவ்ளோ கஷ்டத்த அனுபவிக்கிறோம். திங்கட்கிழமை காலைல புடிக்காம எழுந்து ஸ்கூல் காலேஜ் வேலைக்கு ரெடி ஆகணும். அந்த டயர்ட்லேயே சாப்பிட்டு சாப்பிடாம வந்து பஸ் ஸ்டாப்ல நின்னா பஸ் ஸ்டாப்ல நிறுத்தாம அஞ்சடி தள்ளி நிறுத்துவான். என்னடான்னு பார்த்தா பஸ்ஸ சாயக்கற அளவுக்கு அவ்வளவு கூட்டமா இருக்கும்.

அந்த பஸ்லயும் அக்கா அண்ணானு  அடிச்சு புடிச்சு மேல ஏறி போனா உள்ள இருக்குறவங்க எல்லா இடிப்பாங்க பாருங்க ஒரு இடி ஐயோ,, தாங்க முடியாது இவங்க கிட்ட ஒரு இடி மிதியை வாங்கிட்டு போய் கிளாஸ் ரூம்ல உட்கார்ந்த அங்க காலையிலேயே ப்ரொபசர் கிளாஸ் எடுக்குற பேர்ல எடுப்பாரு பாருங்க ஒரு பாடம் அப்போ என்ன தெரியுமா தோணும் அய்யா சாமி என்ன விட்டுடுங்க நா எங்க அம்மாகிட்டயே  போறேன் அப்படின்னுதரையில படுத்து அழ தா தோனும். 

Monday
பாண்டிச்சேரி போலீஸ் தொப்பியின் வரலாறு - பழைய பேப்பர் கடை | Epi-8

என்னதான் ப்ரொபஸர் கிளாஸ் எடுக்கறது நமக்கு புடிக்கலனாலும் நம்ம பிரண்ட்ஸோட ஜாலியா இருக்கிறது எவ்வளவு சந்தோஷமான ஒரு விஷயம். இந்த ரெண்டு நாள் லீவுல இருந்துட்டு திங்கட்கிழமை காலைல பிரெண்ட்ஸ் முகத்தை பார்க்கும்போது வரும் பாருங்க ஒரு சந்தோசம் அப்படியே மனசுக்குள்ள ஏ ஆர் ரகுமானோட முஸ்தபா முஸ்தபா பாட்டு ஓடும்.

ஆஹா என்னதான் நம்ம வீட்ல இருந்தாலும் நம்ம பிரண்ட்ஸோட இருக்கும்போது நமக்கு கிடைக்கின்ற சந்தோஷத்துக்கு அளவே  இல்ல. ஒரு ரெண்டுநாள் லீவுல இருந்துட்டு திங்கட்கிழமை காலைல வந்து பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு பசங்களா  பொண்ணுங்கள சைட் அடிக்கிறதும் எல்லாம் தெரிஞ்சும்  பார்த்தும் பார்க்காத மாதிரி பொண்ணுங்க பசங்கள சைட் அடிக்கிறதுன்னு ஒரே ரகளையா இருக்கும்.

இந்த மாதிரி ஒவ்வொருத்தருக்கும் திங்கட்கிழமை ரக ரகமா இருக்குறதுக்கு காரணம் யார் தெரியுமா?  இது எல்லாத்துக்கும் ஒரே ஒருத்தன் தான் காரணம். அதுதாங்க இந்த ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை லீவுனு ஒன்னு விட்டதுனால திங்கட்கிழமை எல்லாருமே சோம்பேறியா மன வருத்தத்தோடையே ஆரம்பிக்கிறோம். 

பொதுவாவே வேலை நாட்களில் முதல் நாள் திங்கட்கிழமை அப்படின்னு தான் சொல்வாங்க. ஆனா, நம்ம எல்லாரையும் பொருத்தவரை டயர்டா இருக்கிறதுல முதல் நாள் இந்த திங்கட்கிழமை தான். ஒரு வழியா எல்லாருக்குமே இந்த திங்கட்கிழமை ஒரு ரகலையான கிழமையா தான் அமைகிறது.

- கலையரசி.சு

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com