Tejasvi Surya: Emergency Door இல் இவ்ளோ விஷயம் இருக்கா?

விமானங்களில் உள்ள அவசரகால வழியில் குறிப்பிட்ட பயணிகள் மட்டுமே அமர முடியும். தாய்மார்கள், பெரியோர்கள் இருந்தாலும் அவர்களுடைய பாதுகாவலர்கள் தான் அவசரகால வழி அருகே அமர முடியும்.
Tejasvi Surya
Tejasvi Suryatimepass
Published on

அவசரகால வழி(Emergency exit) என்பது விபத்து மற்றும் அவசர நேரங்களில் தப்பிச் செல்வதற்காக பயன்படுத்தப்படுவது. பெரிய கட்டிடங்கள்,அலுவலகங்கள்,விமானங்கள்,பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் இந்த அவசரகால வழி இருக்கும்.

விமானங்களில் உள்ள அவசரகால வழி விமானத்தின் இருபுறங்களிலும் 19-20 அங்குலத்தில் செவ்வக வடிவில் இருக்கும். அதனால் ஏதேனும் அவசர காலங்களில் கூட அதிகப்படியான நபர்கள் அவசரகால வழியில் தப்பிச் செல்ல முடியும்.

Tejasvi Surya
தொடர்: பழைய பேப்பர் கடை - 'பாகிஸ்தான் பிரிவினையும் அப்பளத்தின் வரலாறும்'

விமானங்களில் உள்ள அவசரகால வழியில் குறிப்பிட்ட பயணிகள் மட்டுமே அமர முடியும். தாய்மார்கள், பெரியோர்கள் இருந்தாலும் அவர்களுடைய பாதுகாவலர்கள் தான் அவசரகால வழி அருகே அமர முடியும். 

அவசர கால வழி அருகே உட்கார்ந்து இருப்பவர்களுக்கு அவசரகால வழிக்கதவை இயக்குவதற்கான பயிற்சி விமானத்தை இயக்குவதற்கு முன்பே வழங்கப்படும். மேலும் அவசரகால வழி அருகே அமர்ந்திருப்பவர்களின் சீட்கள் மற்ற சீட்களை விட மிகவும் வசதியாக கால்களை நீட்டிக்கொள்வதற்கேற்ப அமைந்திருக்கும்.

அவசரகால வழியில் உள்ள கதவு திறப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். இந்த கதவை உள் பக்கமாக மட்டுமே திறக்க முடியும். உள் பக்கமாக திறக்கும் போது அதிகப்படியான காற்றினால் விமானத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் வேகமாக இழுத்துச் செல்லப்படும். அப்போது சீட்டில் முறையாக சீட் பெல்ட் அணிந்து உட்காராத பயணிகள் கூட காற்றில் இழுத்துச் செல்லப்படுவார்கள்.

இத்தனை பயன்களைத் தரும் எமெர்ஜென்ஸி கதவைத் தான், கடந்த டிசம்பர் 10-ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி சென்ற இன்டிகோ விமானத்தில், கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்து விளையாடி விட்டு, மன்னிப்பு கேட்டு தப்பித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tejasvi Surya
'நான் யார் தெரியுமா?, எங்க ஏரியா, ஏஏஏய்' - தமிழ் சினிமா டெம்ப்ளட் வசனங்கள்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com