Rage Room
Rage Room டைம்பாஸ்
Lifestyle

Rage Room : பிரேக்கப்பா? கடுப்பா... கோபத்த குறைக்க இருக்கு ரேஜ் ரூம் ! | Bengaluru

டைம்பாஸ் அட்மின்

பலரோட வீட்டுக்குள்ள நுழைஞ்சதும், வீட்டுக்குள்ள திரும்பன திசையெல்லாம், ரிமோட், டிவி, செல்போன் துவங்கி வீட்டுல பலதும் உடைஞ்சு, பாதியா இருக்கறத பார்க்க முடியும். டென்ஷன் வந்ததும் நம்மாளுக பலரும் பொருட்களை உடைச்சு, டென்ஷன கொறச்சுக்கறது வழக்கம். கோபத்துல பொருட்கள போட்டுடைச்சதும், ‘அய்யய்யோ பொருள் ஒடைஞ்சுருச்சே’னு மனுசுக்குள்ள நம்மள நாமளே திட்டியும் தீர்ப்போம்.

இப்படி டென்ஷன் பார்ட்டிகளுக்காகவே, பெங்களூர்ல துவங்கியிருக்காங்க ‘ரேஜ் ரூம்’. அதென்னப்பா ‘ரேஜ் ரூம்’னு எல்லாருக்கும் சந்தேகம் வருதா? வாங்க இதப்பத்தி பார்ப்போம்...

பல நாடுகள்ல கோபத்துல இருக்கறவங்க, பீர் பாட்டில், மரக்கட்டை, பூத்தொட்டி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை போட்டு உடைச்சு கோபத்த தனிச்சுக்கரதுக்காகவே, பிரத்தியேகமா உருவாக்கப்பட்ட அறைதான் ‘ரேஜ் ரூம்’. இதுல, பாதுகாப்பான உடை அணிஞ்சு உள்ள போய், இஷ்டத்துக்கு பொருட்களை உடைச்சு மனச தேத்திக்கலாம்.

சென்னை ஐ.ஐ.டில படிச்சு முடிச்ச, 23 வயதான பெங்களூரைச் சேர்ந்த அனன்யா ஷெட்டி, பெங்களூர் பசவனகுடி பகுதியில், பெங்களூரின் முதல் ‘ரேஜ் ரூம்’ உருவாக்கியிருக்காங்க.

இதப்பத்தி அனன்யா ஷெட்டி நம்மகிட்ட, ‘‘ஒரு நாள் இரவு, நெருக்கமான சிலரோட ஏற்பட்ட மனகசப்பால, ரொம்ப எரிச்சலாய்டேன்; எதையாது உடைக்கணும்போலவே இருந்துச்சு. அப்ப என்னோட பிரண்டு ‘ரேஜ் ரூம்’ பத்தி சொன்னாங்க. ஆனா, நான் தேடும் போது பெங்களூர்ல ஒன்னுகூட இல்ல. சரி நம்மள மாதிரியே கடுப்பா, எரிச்சலா, மனவிரக்தியில இருக்கறவங்களுக்கு உதவும்னு ‘ரேஜ் ரூம்’ ஆரம்பிச்சுட்டேன்" என்று சொன்னார்.

மேலும், "பொருட்களுக்கு ஏத்த மாதிரி, 99 முதல் 2,999 வரைக்கும் செலுத்தி, ஒரு மணி நேரம் வரைக்கும் பொருட்களை உடைக்காலம்’’னு சொன்னாங்க அன்னயா ஷெட்டி.

- ச.பிரசாந்த்.