மதுசூதனராவோட மக ஒரு பொண்ணு( மக- என்றாலே பொண்ணு தான் இல்ல?!) அந்தப் பொண்ணுக்கு மூனு பொண்ணுங்க. அந்த மூனு பொண்ணுங்களை தனியொரு பெண்ணா இருந்து வளக்குறாங்க ஹீரோயின் சித்தி இத்னானி. அதுக்கான ரீசன் இந்தப் பிள்ளைங்களோட அப்பாவை போட்டுத்தள்ளிய குடும்பம் அந்த மூனு பெண்ணுங்களோட பெத்தவ குடும்பம். அந்தக் குடும்பத்திற்கும் நம்ம சித்தி இத்னானிக்கும் என்ன சம்பந்தம்?
யெஸ்..அந்த மூனு பெண்ணுங்களோட அப்பா தான் இத்னானியோட அண்ணன். So அண்ணன் பொண்ணுங்களை தன் பொண்ணா வளர்க்குற இத்னானியை யார்னா பொண்ணுப் பார்க்க வந்தாலே போட்டுத்தள்ளுது மதுசூதனராவ் குடும்பம். காரணம்? மதுசூதனராவ் மகன்களில் ஒருவன் தான் இத்னானியை கட்டணும் என்ற முடிவு..ஏன் கட்டணும்?
காரணம் இத்னானியோட கட்டழகா...? No பலகோடி சொத்துக்குச் சொந்தக்காரர் இத்னானி.. இப்படியான இத்னானியை ஆர்யா எப்படி மீட் பண்றார்? ஜெயில்ல இருந்து வந்த ஆர்யாவை இத்னானி எப்படி ட்ரீட் பண்றார்? இத்னானிக்காக ஆர்யா எப்படியெல்லாம் பைட் பண்றார்? இதைவிட முதல்ல இந்த ஆர்யா யார்? இருக்கு..அதுக்கும் பதில் இருக்கு.
ஆர்யாவோட அப்பா பாக்கியராஜ். ஆனா அது ஆர்யாவுக்கும் தெரியாது பாக்கியராஜுக்கும் தெரியாது. பிரவுக்கு தெரியும். சரி பிரபு யார்? ஆர்யாவை ஆயா போல் காத்து வளர்த்தெடுத்த முஸ்லீம் முதியவர். அவர் ஏன் ஆர்யாவை வளர்க்கணும்? காரணம் இருக்கு? பாக்கியராஜ் இளந்தாரிப் பயலா இருக்கும் போது வைக்கப்போரில் வைத்து ஒரு பெண்ணை அக்கப்போர் பண்ணிடுறார்..பண்றதை பண்ணிட்டு ஒரு சாமியாட்டத்தைப் போட அவரை ஊர் சாமி எனச்சொல்லுது.
அக்கப்போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த வைக்கப்போர் பெண் பெரியாரின் வைக்கம் போர் மாதிரி புரட்சி எதுவும் பண்ணாம அவரை டிஸ்டர்ப் பண்ணா அவர் புகழுக்கு கலங்கம் வந்திடும்னு தன் அப்பாவோட நண்பரான பிரபு வீட்ல அடைக்கலம் ஆகுது. அந்தப் பெண் வயிற்றில் நெளியும் புழு தான் ஆர்யா. புழு எப்படி புலியானது என்றால்...புலிக்குப் பிறந்தது.....Sorry வேண்டாம்.. சரி இப்ப ஆர்யாவுக்கும் இத்னானிக்கும் என்ன உறவுன்னா அங்கதான் செம்ம ட்விஸ்ட்! இத்னானி வேறயாருமில்ல..பாக்கியராஜோட சொந்த தங்கச்சிப்.பொண்ணு. அதாவது ஆர்யாவுக்கு கொழுந்தியா முறை.
ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட பிரபுக்கும் சிலபல அடிஷ்னல் பிரச்சனைகள் இருக்க..அங்கும் ஆர்யா நின்னு சமாளிக்கிறார்... ஏன் இப்படி ஆர்யா எல்லா இடத்திலும் நிற்கிறார்னா..அதுக்கும் காரணம் இருக்கு....? (சாரி அதை அப்புறம் எப்பவாது சொல்றோம்)
படம் பெயருங்க?
"காதர் பாட்ஷாட்ட போய் செத்துராதலிங்கம்"
- ஜெகன் கவிராஜ்.