Rock Star : யார் அந்த பாறை நட்சத்திரம்? - நான் நிருபன் | Epi 16

''நல்லா வருவீங்க. நீங்க போட்ட ஒத்தைப்பாட்டு செம'' என ஹம் செய்து காட்டினேன். அவரின் முதல் பத்திரிகை பேட்டி அது. அந்தச் சுட்டி, தற்போதைய விஐபி யார்னு சொல்லுங்க. ஒய் திஸ் கொலவெறி என்கிறீர்களா..?
பாறை நட்சத்திரம்
பாறை நட்சத்திரம்டைம்பாஸ்

சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அது. நியூ இயர் ஸ்பெஷலுக்காக நான்கைந்து சினிமா இளம் ஆட்களை, அவர்கள் சார்ந்த சினிமா டிப்பார்ட்மெண்ட் ரீதியாக ஒரு மீட்-அப்புக்கு ஏற்பாடு செஞ்சு கவரேஜ் பண்ணும் பொறுப்பு எனக்கு வந்தது. பக்காவா 6 பேரை ஆர்கனைஸ் பண்ணி ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு இடத்துக்கு வர வைக்க ஏற்பாடு பண்ணிட்டேன். எல்லோரும் வயசுல சின்ன ஆட்கள் தான். அதனால் நானே போன் பண்ணி பேசினேன். அந்த 6 பேர்ல சின்னவரா இருந்த அந்த நபர் ரொம்பவே பணிவா பேசினார். 'வாழ்த்துகள் தம்பி.... சன் டே மீட் பண்ணலாம்!' எனச் சொல்லி போனை வைத்தேன். 

அந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. நான் அலுவலக பட்ஜெட் காரணமாக ஃப்ளாஸ்க்கில் காபி , பேப்பர் கப்ஸ் என அவர்களை வெல்கம் பண்ண ஏற்பாடு பண்ணியிருந்தேன். செம யூத்துகளான அவர்களை மீட் பண்ண வைக்க நான் காபி ஷாப்பை அல்லவா ஏற்பாடு பண்ணியிருக்கணும்? ஆனால், நான் எங்கே வரச் சொல்லி இருந்தேன் எனச் சொன்னால் நீங்களே இப்போது அடிக்க வந்து விடுவீர்கள். ஆமாம்... நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம்!

பாறை நட்சத்திரம்
'ஜெயலலிதா பெயரைக் கேட்டு நடுங்கிய காமெடி நடிகர்' | நான் நிருபன் | Epi 8

போட்டோகிராபரே அப்போது, 'ஏன் பாஸ் உங்களுக்கு மீட்-அப்புக்கு வேற இடமே கிடைக்கலையா..? போயும் போயும் வள்ளுவர் கோட்டத்துலயா மீட் பண்ண வைக்கணும்?' என்று ஏகத்துக்கு என்னை கடிந்து கொண்டார்.  சரி விஷயத்துக்கு வருவோம். 10 மணிக்கு ஷார்ப்பாக 5 பேர் வந்தார்கள். 6-வது ஆள் மட்டும் மிஸ்ஸிங். போன் போட்டால் போனை எடுக்கவில்லை. 11 மணிவரை காபி, சமோசா சாப்பிட்டு வாட்டர் பாட்டிலில் கைகளைக் கழுவிவிட்டு வெய்ட் பண்ணிக் கொண்டிருந்தோம்.  போன் பண்ணினால் போனை அட்டெண்ட் பண்ணவில்லை அந்த சுட்டிப்பையன். 

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து விட்டேன். உச்சி வெயில்வேறு மண்டையில் உளிவைத்து அடிக்க ஆரம்பித்தது. நேரம் 12 மணியை நெருங்க ஆரம்பிக்க, 5 பேரையும் ஆர்கனைஸ் பண்ணி அங்கிருக்கும் புல்தரையில்  அமரவைத்து நடுநாயகமாக உட்கார்ந்து பேட்டியை ஆரம்பித்தேன். கலகலவென பேச ஆரம்பித்தனர். சினிமாவில் அந்த பிரத்யேக துறைக்கு தாங்கள் வந்த கதையில் ஆரம்பித்து திருமணம், காதல் வரை பேசிவிட்டார்கள். ஆனால், நம் 6-வது நபர் வரவே இல்லை. பேட்டியும் முடிந்தது.

அடுத்து போட்டோ செஷன். விறுவிறுவென அங்கிருக்கும் சிலைகள், புல்தரை, மண்டபம் என வெவேறு இடங்களில் விதம்விதமாக போஸ்களைக் கொடுக்க வைத்து புகைப்படக்காரர் போட்டோக்களை சுட்டுத் தள்ளினார். அப்போதுதான் எனக்கு போன் வந்தது.

''ஸாரி அண்ணா.... நைட் ஹெவி ஒர்க். தூங்கி இப்போதான் எழுந்தேன். அரைமணிநேரத்துல அங்கே இருப்பேன். என் வீடு பக்கத்துலதான் இருக்கு!'' என்று ஸாரி கேட்டார் அந்த 6-ம் நபர். ''பரவாயில்லை ப்ரோ...பார்த்து வாங்க!'' என்றபடி போனை வைத்தேன். 

பாறை நட்சத்திரம்
'தெரு சண்டைக்கு போன இளம் நடிகர்' - நான் நிருபன் | Epi 13

மிச்சமிருந்த 5 பேரும் வெவ்வேறு வேலைகள் இருப்பதால் கிளம்பத் தயாரானார்கள். புகைப்படக்காரர் ஒரு அருமையான யோசனை பண்ணினார். அங்கிருக்கும் புல்தரையில் வரிசையாக 5 பேரை நிறுத்திவிட்டு ஓரமாக கொஞ்சம் இடம்விட்டு போட்டோவை எடுத்தார். போட்டோஷாப்பில் 6-வது ஆளை லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் பக்காவாக சேர்த்து விடுவார் என்ற யோசனை அது. அவ்வாறு எடுக்க அவர்களும் கோ-ஆபரேட் பண்ணினார்கள். விடைபெற்று கிளம்பியும் போனார்கள். அவர்கள் போன பத்தாவது நிமிடம் வியர்க்க விறுவிறுக்க காரிலிருந்து இறங்கி ஓடிவந்தார் அந்த சுட்டிப்பையன். 

''சார் ரொம்ப ரொம்ப ஸாரி சார்.... தூங்கிட்டேன். சுத்தமா கண்ணு முழிக்க முடியலை. ப்ளீஸ்! மன்னிச்சிடுங்க'' என்றார். 

தோளில் கைபோட்டு, ''பரவாயில்லை ப்ரோ...வேணும்னா பண்ணீங்க.... விடுங்க... வாங்க இந்த இடத்துல வந்து நில்லுங்க...!'' என்று போட்டோகிராபர் காட்டிய இடத்தில் அவரை நிறுத்தி போட்டோ எடுத்தோம். பிறகு ஒருமணிநேரம் தான் பிறந்து வளர்ந்த கதை, அப்பா பேங்கிலிருந்து கொண்டே நடிக்க வந்த கதை என எல்லாவற்றையும் பவ்யமாக சொன்னார். கிளம்பும்வரை ஸாரியும் கேட்டபடி இருந்தார். நான் அவர் ஒல்லியாக இருப்பது வரை சுட்டிக்காட்டி கூல் பண்ண ஏதேதோ பேசி, நல்லா சாப்பிடுங்க ப்ரோ என்றபடி பேசிக் கொண்டிருந்தேன். 

கிளம்பும்போது தோளில் தட்டி, தோள்மீது கைபோட்டு, ''நல்லா வருவீங்க பிரதர். நீங்க போட்ட அந்த ஒத்தைப்பாட்டு செமையா இருந்துச்சு!'' என்று ஹம் செய்து காட்டினேன். 

''தேங்ஸ் அண்ணா...!'' என்று நெஞ்சில் கைவைத்து பணிவாய் நன்றி சொல்லியபடி விடைபெற்று காரில் கிளம்பிப் போனார். அதுதான் அந்த சுட்டிப்பையனை நான் முதலும் கடைசியுமாய் பேட்டி எடுத்தது. 

யார் எந்த நேரத்துல பெரிய ஆளா மாறுவாங்கனு கணிக்கவே முடியாது. அதிலும் சினிமா ஆட்களை கொஞ்சம்கூட கணிக்கவே முடியாது. அதனால எப்போதும் சினிமா ஆட்களை ஆரம்ப காலத்துல நல்லா பழகி வெச்சுக்கணும்... நான் அவர் நம்பரைக்கூட ஷேவ் பண்ணி வைக்கவில்லை. அதனால் பழகவும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால், என்னிக்காச்சும் நேர்ல பார்க்குறப்போ என்னை அவர் மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்.  ஏனென்றால் அவரின் முதல் பத்திரிகை பேட்டி அது..! சரி அந்தச் சுட்டி... தற்போதைய வி.ஐ.பி யார்னு சொல்லுங்க பொங்கல் பரிசு தர்றேன். 

ஒய் திஸ் கொலவெறி  என்கிறீர்களா..?

(சம்பவங்கள் Loading..!)

பாறை நட்சத்திரம்
'பாடகர் சித்தரான பின்னணி இதுதானா!' - நான் நிருபன் | Epi 15

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com