'தெரு சண்டைக்கு போன இளம் நடிகர்' - நான் நிருபன் | Epi 13

''யார் கண்ணு பட்டுச்சோ கேரியர்ல நல்லா வந்திருக்க வேண்டிய ஆளு... !'' என்று சமீபத்தில் பி.ஆர்.ஓ ஒருவர் அவரைப் பற்றிச் சொன்னபோது என் மனதில் அனிச்சையாய் அன்று நடந்த சண்டை ஞாபகத்தில் வந்து போனது.
இளம் நடிகர்
இளம் நடிகர்டைம்பாஸ்

பிரபலங்கள் சமயங்களில் நம் கண் எதிரே தர்மசங்கடமான சூழலில் மாட்டும்போது அவர்களைவிட நாம் ரொம்பவே அவஸ்தையில் நெளிய வேண்டியிருக்கும். அப்படி நான் பேட்டி காணப் போகும்போது நிகழ்ந்த சம்பவம் பற்றி சொல்கிறேன்... 

யூத்ஃபுல்லான படத்தில் அவரும் ஒரு ஹீரோ... அடுத்தடுத்து மண்மணக்கும் படங்கள் வேறு அவரைத் தேடி வந்தன.. அதனால் அவர் கேரியர் கிராஃப் ஆரம்பமே அமர்க்களமாய் போய்க் கொண்டிருந்தது. ஒரு பேட்டிக்காக அவர் வீட்டுக்கு நேரம் காலமெல்லாம் ஃபிக்ஸ் செய்து போயிருந்தேன். அப்போது அவர்தங்கியிருந்தது ஒரு அப்பார்ட்மெண்ட்டின் கீழ் தளம்.  அது நெருக்கமான ஒரு அப்பார்ட்மெண்ட். 

இளம் நடிகர்
'என்னால் நின்றுபோன நடிகரின் கல்யாணம்!' - நான் நிருபன் | Epi 11

கீழ் போர்ஷனில் அவருக்கு எதிரே ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் தங்கியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வீட்டினரும் செருப்பு போடுமிடத்தை ஷேர் செய்திருந்தனர். பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போது எதிர்வீட்டிலிருந்து ஏதோ சத்தம். ஒரு பெண்மணி அசிங்கமாய் ஏதோ சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார். நம் ஹீரோவின் அம்மா இங்கிருந்து திட்ட...கிட்டத்தட்ட குழாயடிச் சண்டை போல ஆரம்பித்து விட்டது. 

நம் ஹீரோ நெளிய ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த நம் ஹீரோ நேரே அந்தச் சண்டையில் தானும் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தப்பக்கம் அந்தப் பெண்மணிக்கு சப்போர்ட்டாக அவரது மகன் வர அடிதடி ரேஞ்சுக்குப் போகப் பார்த்தது. 

நல்லவேளையாக அப்பார்ட்மெண்ட்டின் செக்ரட்டரி என்று ஒருவர் ஓடி வந்து சமாதனப்படுத்தினார். சண்டைக்குக் காரணம் ஹீரோவைத்தேடி ஆட்கள் வருவதும் போவதுமாய் இருப்பதுதான். அவரது அப்பா ஆசை ஆசையாய் வாங்கிய வீடு அது. ஆனால், சினிமாவில் நடித்து முதல் படம் ரிலீஸானதிலிருந்து பக்கத்து வீட்டோடு சண்டையாம்!

இளம் நடிகர்
'ஜெயலலிதா பெயரைக் கேட்டு நடுங்கிய காமெடி நடிகர்' | நான் நிருபன் | Epi 8

''பாருங்க சார்...பெரிய பத்திரிகைல இருந்து என் மகனைப் பேட்டி எடுக்க வந்திருக்காங்க. இப்பப் பார்த்து வேணும்னே இந்தப் பொம்பளை வம்பிழுக்குது. நாங்க திடீர்னு வசதியா மாறுனது அந்தக் குடும்பத்துக்குப் பொறுக்கல. சும்மாச் சும்மா சண்டை வளர்க்குதுங்க. அந்தப் பொம்பளைக்கு எங்களை அசிங்கப்படுத்தணும். அதான் நோக்கம்!'' என நம் ஹீரோவின் அம்மா செக்ரட்டரியிடம் புலம்பியதைப் பார்த்து பாவமாக இருந்தது. சண்டை முடிந்து அமைதி மோடுக்கு இரண்டு குடும்பமும் வந்திருந்தார்கள். பாதியில் விட்ட பேட்டியை நம் ஹீரோ தொடர்ந்தார். ஆனால், கொஞ்சம் நெர்வஸாகவே அதன்பிறகு மாறிப்போனார்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி சண்டையின்போது, ''நீலாம் நடிச்சு கிழிச்சிரப்போறே!'' என்றெல்லாம் சாபம் விட்டிருந்தது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மீடியா முன்னாடி இப்படி ஆகிப்போச்சே என ஹீரோவின் குடும்பமே டல் மூடுக்குப் போய்விட்டது. நமக்கோ தர்மசங்கடத்தின் உச்சநிலை. மீதிப்பேட்டியை முடித்துவிட்டால் எஸ் ஆகிவிடலாம் என நினைத்துக் கொண்டேன்.

''ஸாரி சார்... உங்க முன்னாடி இப்படி நடந்து போச்சு! மன்னிச்சுக்கங்க!'' என்று மன்னிப்பு கேட்டபடி இருந்தார் ஹீரோ. 'பரவாயில்லை சார்' என்று நானும் புகைப்படக்காரரும் அவரை சமாதானம் செய்தோம்.  

அதன்பிறகு ஒரு சில மாதத்தில் அந்த அப்பாரட்மெண்ட் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறொரு புது வீட்டுக்கு ஜாகை மாறினார் நம் ஹீரோ.  அடுத்தடுத்து ஹிட் கொடுத்து சொந்தமாய் பெரிய வீடு வாங்கிக் குடியேறியிருந்தார். 

இளம் நடிகர்
அந்த நடிகையிடமிருந்து நான் தப்பித்த கதை! - நான் நிருபன் | Epi 6

அதன்பிறகு நிறைய ஃப்ளாப் படங்கள் கொடுத்து கேரியரில் கொஞ்சம் தொய்வைச் சந்தித்து இப்போது அடுத்த ஹிட் வருமா வராதா என ஏங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது ஒரு வில்லாவில் வசிப்பதாக பி.ஆர்.ஓ சொன்னார். ஆனால், மார்க்கெட் அந்த அளவுக்கு இல்லை என்பதால் தான் ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டை விற்றுவிட்டு கொஞ்சம் மீடியமான வில்லாவை தன் திருமணத்துக்குப் பிறகு வாங்கிக் குடியேறி இருக்கிறார் அந்த ஹீரோ. 

''யார் கண்ணு பட்டுச்சோ கேரியர்ல நல்லா வந்திருக்க வேண்டிய ஆளு... இப்படி பத்தோட ஒண்ணு பதினொண்ணா ஆகிட்டார்!'' என்று சமீபத்தில் பி.ஆர்.ஓ ஒருவர் அவரைப் பற்றிச் சொன்னபோது என் மனதில் அனிச்சையாய் அன்று நடந்த சண்டை ஞாபகத்தில் வந்து போனது. வில்லா வீடு ஏன் என்பதை யோசித்தபோது ரொம்பவே அந்த எதிர்வீட்டின் சாபத்தால் பாதிக்கப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன். 

இன்னொரு தர்மசங்கட வி.ஐ.பி பற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்..!

(சம்பவங்கள் Loading...)

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com