Tamil Cinema : ஊர்ல மழையா?; யுவார் அண்ட் அரெஸ்ட் - டெம்ப்ளட்டான காட்சிகள், வசனங்கள் லிஸ்ட் !

உங்க ஊர்ல மழை பரவால்லையா?, எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்ல புள்ளைய காப்பாத்துங்க, யுவார் அண்ட் அரெஸ்ட்னு சில வசனங்களும் காட்சிகளும் எல்லா படத்துலயும் வந்துரும். அப்படியான சீன்ஸைப் பார்ப்போம்.
Tamil Cinema
Tamil Cinematimepass

தமிழ் சினிமா எடுக்க ஆரம்பிச்சதுலேர்ந்து தொத்து வியாதி மாதிரி இன்னைக்கு வரைக்கும் சில விஷயங்கள் மாறவே மாட்டேங்குது. ரோட்டுல ரெண்டு பிரெண்ட்ஸ் நேருக்கு நேர் பார்த்துக்கும்போது ’என்னப்பா ஆளை பாக்கவே முடியலை..?’ ங்கிறதும், ’உங்க ஊர்ல மழை பரவால்லையா..?’ ங்கிறதும், டாக்டர்கிட்ட ’எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்ல புள்ளைய காப்பாத்துங்க’ ங்கிறதும், பட கிளைமாக்ஸ்ல ’யுவார் அண்ட் அரெஸ்ட்’னு இன்ஸ்பெக்டர் சொல்றதுன்னு ’லைட்டா’ புளிப்பு வாசம் வந்தாலும் பரவாயில்லைன்னு மொத்த ரீல்ஸ்ல எங்கையாச்சும் சீனாவோ, டைலாக்காவோ திரும்பத் திரும்ப வந்துடு. அப்படி சில ரொட்டீன் சீன்ஸைப் பார்ப்போம்.

1 . ’குளிச்சிட்டு சாப்புடு’

ஊர்லேர்ந்து பையனோ, பொண்ணோ, சொந்த பந்தம் யார் வீட்டுக்கு வந்தாலும், வீட்டுல இருக்கிற ஓல்டு லேடியோ, ஓல்டு மேனோ வந்தவங்ககிட்ட சந்தோஷத்தை, பாசத்தை அள்ளி வீசின பின்னாடி, மறக்காக சொல்ற வார்த்தை ’முதல்ல போய் குளிச்சிட்டு சாப்புடு. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்’ ங்கிறதுதான் அவர் குளிக்க சொல்லாட்டி வந்தவர் குளிக்காம கப்படிச்சபடியேவா சாப்புடுவாரு.

இப்படி ’குளிச்சிட்டு சாப்புடு’ ங்கிற டயலாக் ரொம்ப மூவியில ஜல்பு வந்து ஜன்னி வர்ற வரைக்கும் குளிச்சி முடிச்சாச்சி. எப்போதான் அந்த டயலாக் வந்ததுன்னு பார்த்தா இப்ப வர்ற சில படங்கள்ல கூட இது தொடர்ந்துகிட்டேதான் இருக்கு.

Tamil Cinema
Tamil Cinema : ’வேடிக்கையான வியாதிகள்’ - சுவாரஸ்யமான ஒரு லிஸ்ட்!

2 . ’சட்டையை கழட்டு’

இதுவும் தமிழ் சினிமாவுல வியாதி மாதிரி பரவிக்கிடக்கிற சீன்தான். போலீஸ் ஸ்டேஷன்லயோ, வில்லன்கிட்டயோ, காலேஜ் பிரொபஸர்கிட்டயோ ஹீரோ இல்லன்னா காமெடியன் மாட்டிக்கிறப்போ அடிக்கிறதுக்காக ’ம்..சட்டையக் கழட்டுடா’னு கோபத்துல கத்துறப்போ.. நம்மாளு கூலா கழட்டச் சொன்னவங்க சட்டையவே கழட்டப் பொத்தான்ல கை வைப்பாங்க. அப்போ ’டேய்.. கழட்டச் சொன்னது என் சட்டைய இல்லை உன் சட்டைய’ னு சொல்றது இன்னும் எத்தனை ஜென்ம படங்கள்ல வரும்னு தெரியலை. அவர் சட்டைய கழட்ட அடுத்தவனை விட்டுக் கழட்ட சொல்லமாட்டார்னு உறுதியா தெரிஞ்சிருந்தும், காமெடிங்கிற பேர்ல இன்னும் பழைய மாவையே கரைச்சிக்கிட்டு இருக்காங்க.

3 . ’ப்ளீஸ் மேடம் ரோட்டை கிராஸ் பண்ணிவிட முடியுமா..?’

நம்ம சினிமாவுல இன்னைக்கும் தொடர்ந்து பார்க்கிற ஒரு சீன் இருக்குன்னா அது இதுவும்தான். ஹீரோயினோ, வேற ஒரு அழகான பொண்ணோ ரோட்டுல நடந்து போயிட்டு இருக்கும். அதைப்பார்த்ததும் நம்ம ஹீரோக்களுக்கோ, காமெடியன்களுக்கோ கரெண்ட்டு வயரை கால்ல சுத்திவிட்ட மாதிரி சும்மா ஜிவ்வுன்னு ஏறும்.

Tamil Cinema
Tamil Heroகளை காப்பாற்றும் மிருகங்கள் - ஒரு லிஸ்ட் !

உடனே அந்தப்பொண்ணு கையத்தொட்டுப் பார்த்துடணும்னு வாலிப வயசு வயலின் வாசிக்க, பொண்ணு பக்கத்துல வந்ததும் சட்டுனு ரெண்டு கையையும் மேல தூக்கித் தடவுற மாதிரி… ’ஹலோ…மேடம் நான் ’பிளைண்ட்’ ரெண்டு கண்ணும் தெரியாது ரோட்டை கிராஸ் பண்ணிவிடறிங்களா..?’ கேட்க, அந்தப் பொண்ணும் ஐயோ பாவம்னு கையைப் பிடிச்சி ரோட்டை கிராஸ் பண்ணிவிடும். கையை பிடிக்கிறவன் காமெடியனா இருந்தா கைப்பிடி சுகத்தை மட்டும் அனுபவிக்கலாம். ஹீரோவா இருந்தா காதல் அங்கேர்ந்து புள்ளி வெச்சி கோலம் போட ஆரம்பிச்சுடும்.

4 . ’என் பொணத்து மேல உட்கார்ந்துதான் தலி கட்டணும்?’

தன் குடும்ப அந்தஸ்துக்கு ஒத்து வராத அல்லது சாதி மாறி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு காதலிக்கிற பையனோ, பொண்ணோ அவங்க அப்பா – அம்மாகிட்ட வந்து சம்பதம் கேட்கறப்போ, அவங்க சொல்றதுதான் ’என் பொணத்து மேல உட்கார்ந்துதான் தலி கட்டணும்’ னுங்கிற டயலாக். அப்படி அப்பா – அம்மா பொணத்த போர்வைப் போட்டு மூடிவெச்சிட்டு எந்த பையன், பொண்ணாவது தாலி கட்ட முடியுமா..? ரெண்டு பேரையும் பிரிக்கிறதுக்கு வேற வார்த்தையோ பெரும்பாலும் யூஸ் பண்ண மாட்டேங்கிறாங்க.

Tamil Cinema
Tamil Cinema : காணாமல் போன கதாநாயகிகள் - ஒரு லிஸ்ட்

அந்த நேரத்துல பொண்ணோட் அண்ணனோ, தாய் மாமனோ இருந்தான்னு கூடுதலா ஒரு டயலாக் கூட வந்து விழும். அதாவது. ’இவ காலை முறிச்சி வீட்டோட முடக்கிப்போடுங்க. இனிமே வெளிய எங்கையும் போகக்கூடாது.’னு ஆக்ரோசமா கூவிட்டு, அங்கேர்ந்து விருட்டுன்னு கிளம்பி.. கட்டை, கடப்பாரை, மம்பட்டியோட ஆளுங்களைக் கூட்டிக்கிட்டு நூறு நாள் வேலைக்குப்போற மாதிரி காதலனைத் தேடிப்போவாங்க.

5 . ’என் நீ கட்டிக்கப்போற பொண்ண நல்லா பாத்துக்கடா?’

வில்லேஜ், சிட்டின்னு எந்த படமா இருந்தாலும் பெண் குழந்தைய தொட்டில்ல போடுறது, பெயர் வைக்கிறது, காது குத்துறதுன்னு வீட்டுல எதாச்சும் ஒரு பங்ஷன் நடக்கும். ஊர்ல இருக்கிறவங்க ஒண்ணு கூடுவாங்க. விழாவுக்கு வந்த பெரிசுங்க சாப்ட்டமா, வெத்தலைய மெண்ணு புளிச்சுன்னு துப்பினமா, மொய் வெச்சமான்னு போறத விட்டுட்டு, சைடுல ஒரு பிட்டைப்போட்டுட்டு போறது.

Tamil Cinema
Tamil Cinema : அக்குள்ல வெங்காயம், சின்ன வயசு ஜட்டி, கிழிஞ்ச நோட்டு-Cringe காதல் காட்சிகள் லிஸ்ட் !

குழந்தையோட தாய்மாமன் பையன்கிட்ட அவனுக்கு ரெண்டு, மூணு வயசுல இருந்தாலும் சரி ’நல்லா பாத்துக்கடா’ நீ கட்டிக்கப்போற பொண்ணு இவதான்’ னு எங்கிருந்தோ ஒரு கிழவி கூவிட்டு காவி பல்லைக் காட்டி கெக்கே பிக்கேன்னு சிரிக்கும். கூடவே சில பெருசுங்களும் ’ஆமாமா.. ஆமாம்’னு ஒத்து ஊதுவாங்க. அந்த பெண் குழந்தைக்கு ஆறு மாசமோ, ஒரு வயசோதான் இருக்கும் அது பாட்டுக்கு செவனேன்னு என்ன சொல்றாங்கன்னு புரியாம சாக்லேட் திண்ணுகிட்டு இருக்கும். இந்த மாதிரி நையாண்டி, நக்கல் சீன் சமீபத்துல வந்து படங்கள்லயும் இருக்கு.

6 . ’உன் ஊதாரி பிரெண்டுங்க கூட சேராதன்னா கேக்குறியா?’

சினிமா வந்த காலம் தொட்டு ஹீரோ அப்பா, அம்மாவுக்கு பிடிக்காத ஜென்மம்னா அது ஹீரோ கூட சுத்துற பிரெண்ட்ஸ்ங்கதான். வீட்டுல குளிக்கும்போது ஹீரோ காதுல தண்ணி பூந்து, பட்ஸ்ல குடைஞ்சா கூட போதும். ’காதுல தண்ணி போயிடுச்சா ’இதுக்குதான் உன் பிரெண்ட்ஸுங்க கூட சேரக்கூடாதுங்கிறது’ ன்னு அட்வைஸ் கத்தியைத் தீட்டி கழுத்துல வைக்கிறது. இவன் காதுல தண்ணி போனதுக்கும் பிரெண்ட்ஸுங்களுக்கு என்ன சம்பந்தம்..? சம்பந்தம் இருக்கோ இல்லையோ அதைப்பத்தி யோசிக்காம அவன் பிரெண்ட்ஸ்களைத் திட்டணும். அதுமாதிரியான பேரண்ட்ஸைத்தான் இத்தனை கால சினிமாவும் காட்டிட்டு வருது.

- எம்.ஜி.கன்னியப்பன்.

Tamil Cinema
Tamil Cinema வின் சேடிஸ்ட் வில்லன்கள் - மிரள வைக்கும் ஒரு லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com