அந்த நடிகையிடமிருந்து நான் தப்பித்த கதை! - நான் நிருபன் | Epi 6

"ஒரு சி.எம் முன்னாடி க்ளாமரா கால்மேல கால் போட்டு உட்கார்ந்ததா சொல்லி உங்களை செமையா மேடையிலேயே கலாய்ச்சு விட்டாங்க...'' - நான் கேள்வியை முடிக்கும் முன்பே என் மீது கோபமாய் வார்த்தைகளை வீசினார்.
நான் நிருபன்
நான் நிருபன்டைம்பாஸ்
Published on

சுண்டிவிட்டால் ரத்தம் வரும் அளவுக்கு வெள்ளை நிறத்தழகி அந்த நடிகை! மில்க் பியூட்டி தமன்னாவுக்கு முன்பே நிறத்துக்காக கொண்டாடப்பட்டவர். உச்ச நடிகரே, 'இவங்களை நம்ம படத்துக்கு ஃபிக்ஸ் பண்ணிக்கலாமா சார்?' என அவர் படத்தின் இயக்குநரிடம் கேட்டு ஃபிக்ஸ் செய்த வரலாறு வாய்ந்தவர்.

அடுத்த சூப்பர் ஸ்டார் என அவர் ரசிகர்களால் சொல்லப்படும் நடிகரோடும் ஜோடி போட்டவர்.  கிறுகிறுவென மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தபோதே கல்யாணம் பண்ணி செட்டில் ஆனவர். 

நான் நிருபன்
தொடர்: நான் நிருபன்... சொல்ல மறந்த சம்பவங்கள்! - 1

அவர் உச்சத்தில் இருந்தபோது அவரை பேட்டி எடுக்க குதூகலத்துடன் கிளம்பிப் போனேன். 'பார்க் ஹோட்டல் லௌன்ச்சில் காலை 10 மணி ஷார்ப்!' என பேட்டியை பி.ஆர்.ஓ ஃபிக்ஸ் பண்ணியிருந்ததால் சரியான நேரத்துக்குப் போனேன். காலையில் செம ஃப்ரெஷ் லுக்கில் என் முன் வந்து அமர்ந்தார் அவர். நிஜமாகவே அப்போதுதான் மழையில் நனைந்த ரோஜாவைப்போல ஜொலித்தார். 

சம்பிரதாய வணக்கத்துக்கு பிறகு பேட்டியை ஆரம்பித்தேன். தமிழை புரிந்து கொள்ள சிரமப்படுவார் என நினைத்து நான் நோட்பேடில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டு போயிருந்த கேள்விகளை வரிசையாகக் கேட்கக் கேட்க தயக்கமில்லாமல் ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். 

எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தபோது அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டேன். 

'நீங்க ஏன் எப்பவும் ஆடியோ லாஞ்ச், நூறாவது நாள் கொண்டாட்டங்கள்ல கிளாமரா டிரெஸ் போட்டுட்டு வர்றீங்க? இப்படித்தான் ஒரு சி.எம் முன்னாடி க்ளாமரா கால்மேல கால் போட்டு உட்கார்ந்ததா சொல்லி உங்களை செமையா மேடையிலேயே கலாய்ச்சு விட்டாங்க...'' -நான் கேள்வியை முடிக்கும் முன்பே என் மீது கோபமாய் வார்த்தைகளை வீசினார்.

நான் நிருபன்
தொடர்: நான் நிருபன் - 'Charming இசையமைப்பாளர்!'

''ஸ்டாப் தட் நான்சென்ஸ் கொஸ்ட்டீன்ஸ். க்ளாமர்னு உங்களுக்கு யார் சொன்னது? க்ளாமர்னா டூ பீஸ் போட்டுட்டு சுத்துறதுதான். ஐ ஆம் நாட் க்ளாமர் டால்... யூ நோ? நான் சி.எம் இருந்த மேடையில கால் போட்டு உட்கார்ந்தது அது சினிமா ஃபங்ஷன்னு தான். அந்த ஃபங்ஷனுக்கு சி.எம் வந்தா நான் என்ன பண்றது? இதே கேள்வியை அந்தப் படத்துல நடிச்ச அந்த பெரிய ஹீரோகிட்ட கேட்பீங்களா? மாட்டீங்க... ஏன்னா அவரு ஹீரோ...நான் ஆஃப்டர் ஆல்... ஹீரோயின்... அப்படித்தானே?''  

நான் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன். உண்மையில் அந்தக் கேள்வியைக் கேட்கச் சொல்லி அனுப்பி வைத்ததே எனக்கு மேல் உள்ள சீனியர்தான். அதை அப்படியே கேட்டு வைத்தது மட்டும் தான் என் தப்பு. சொல்லப்போனால், அப்படியே போய் கேட்டது ஒரு குத்தமா சாமி என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். சிம்பிளாய், 'ஸாரி மேம்' என்று சொல்லி அடுத்த கேள்விக்கு ரெடியானேன்.

போதும் என்பது போல தன் மேனேஜருக்கு சிக்னல் கொடுத்தார். எனக்கோ அவமானம் பிடுங்கித் தின்றது. அசடு வழிந்தபடி உட்கார்ந்திருந்தேன். எழுந்து நடையைக் கட்டலாம் போலத் தோன்றியது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. என்னை நோக்கி பி.ஆர்.ஓ சத்தமாய் என் பேரைச் சொல்லியபடி ஓடி வந்தார். 

நான் நிருபன்
'ரெண்டு பேருக்கும் பிடிச்சா எதுவும் தப்பில்ல' - நான் நிருபன் தொடர்-3

''வாங்க...போகலாம். பேட்டி முடிஞ்சது!'' என அவர் சொல்ல... நான் அப்பாவியாய் எழுந்தேன். அந்த நடிகைக்கு என்னமோ தோன்றியிருக்க வேண்டும். என்னைப் பார்த்து சினேகத்தோடு சிரித்தார். 

''ப்ளீஸ் பீ சீட்டட்!'' என்று என்னை உட்காரச் சொன்னார். தான் அந்த கேள்விக்கு எமோஷனல் ஆனதற்காக 'ஸாரி' கேட்டார். மீண்டும் பேட்டி தொடர்ந்தது. இம்முறை கவனமாக ஆன்மீகம், லட்சியம், திருமணம் என மையமாக கேள்விகள் கேட்டு பேட்டியை முடித்துக் கொண்டு கிளம்பினேன். 

கைகொடுத்து பிறகு வணக்கம் வைத்து மீண்டும் இரண்டுமுறை ஸாரி கேட்டு என்னை வெளியே வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். குழப்பத்தோடு அலுவலகம் வந்தேன். 

பி.ஆர்.ஓ- விடமிருந்து கால் வந்தது. அப்போதுதான் அந்த நடிகையின் திடீர் மனமாற்றத்துக்கான காரணமும் புரிந்தது..

நான் நிருபன்
'முன்னாள் கனவுக்கன்னியின் கோபம்' - நான் நிருபன் தொடர் | Epi 4

''அவங்களை க்ளாமர் டால்னு சொன்னா கோபம் வரும். நான் ஆரம்பத்துலேயே சொல்லியிருக்கணும் உங்ககிட்ட...அப்புறம் அவங்க அப்பா பேரும் உங்க பேரு தான். அப்பான்னா அவ்ளோ பாசமா இருப்பாங்க. உங்க பேரைக் கேட்டதும் உங்க மேல கோபப்பட்டதுக்காக அவங்க அப்பாவுக்கு போன் பண்ணி இப்ப ஸாரி கேட்டாங்க... அவ்ளோ குழந்தை சார் அந்த லேடி.உங்க பேர் மட்டும் வேறையா இருந்துச்சு இன்னிக்கு நீங்க பாதியிலே எழுந்து ஓடியிருப்பீங்க!'' என்று சிரித்தார். 

நல்லவேளைடா சாமி என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். 

(சம்பவங்கள் Loading..!)  

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com