25 Years of Netflix : வெற்றியின் ரகசியம் சொல்லும் நெட்ஃப்ளிக்ஸ் ஓனர் !

இந்த முயற்சியை நான் எடுத்தப்ப எல்லாருமே என்கிட்ட "இது வொர்க் அவுட் ஆகாதுன்னு" சொல்லி இருக்காங்க.. நல்ல வேலை நான் அவங்க சொன்ன எதையுமே கேட்கல !! இப்ப சொல்றேன் எல்லாமே ஒர்க் அவுட் ஆகும் !!
Netflix
Netflixtimepass
Published on

சரியா 25 வருஷத்துக்கு முன்னாடி அதாவது ஏப்ரல் 14 1998 ல காலையில ஒரு எட்டு மணிக்கு எரிக் மேயர் கம்ப்யூட்டர் முன்னாடி வர்றாரு, சில கீஸ்ஸ தட்றாரு, நெட்ஃப்லிக்ஸ்ன்னு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குறாரு !!

அந்த முதல் நாள் ரொம்பவே சிரமமான நாள். சேவைகள் எல்லாமே செயலிழந்து போச்சி. எல்லா போஸ்டையும் சரியான நேரத்துக்கு வாடிக்கையாளர்கள் கிட்ட கொண்டு போய் கொடுக்கணும்னு அவங்க ரொம்ப வேகமாக வேலை செஞ்சுட்டு இருந்தாங்க, ஆனா, போஸ்ட் பண்றதுக்கான ஸ்டாம்ப் தீர்ந்திடிச்சி. இவ்ளோ சிக்கல்கள் இருந்த நிலையிலும் முதல் நாளில் 200 வாடிக்கையாளர்களை புடிச்சாங்க..

இன்னிக்கி, நெட்ஃபிக்ஸ் 200 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி இருக்காங்க !!

அழுக்கு படிந்த பச்சை காலடியோட ஒரு சின்ன ஆபீஸ்ல ஒரு டசன் பேரோட ஆரம்பிச்ச நெட்ப்ளக்ஸ், இப்போ பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களோட மிகப் பெரிய சாம்ராஜ்யமா உருவெடுத்து இருக்கு. உலகத்தில் இருக்க எல்லா நாடுகளிலும் நெட்ஃப்லிக்ஸ் உடைய வாடிக்கையாளர்கள் இருக்காங்க. சொந்தமான படங்களை தயாரிச்சு இயக்கி நெட்ஃப்லிக்ஸ்ல வெளியிடுராங்க !

25 ஆண்டுகளுக்கு முன்பு, திரைப்படங்கள வாடகைக்கு எடுக்க "ஒரு சிறந்த வழி இருக்கணும்"னு அந்த குழு நம்புனாங்க‌. மக்கள் அந்த கதைய எப்படி எடுத்துப்பாங்கன்ற வழிய தாண்டி, அந்த கதை எப்படி உருவாக்கப்படுது இதுலயும் கவனத்த செலுத்துனாங்க.

Netflix
சினிமா கிசுகிசு : 'யோக' நடிகரின் அட்டூழியங்கள் தெரியுமா?

வேலைய அனுபவிச்சு பண்ணாங்க. தீவிர நேர்மை, சுதந்திரம், பொறுப்பு இந்த மூன்று அடிப்படையில ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குறது சாத்தியம்னு நிரூபித்து காட்டி இருக்காங்க. இவ்வளவு சரியா நடந்திருந்தாலும் அந்த செயல்கள் எல்லாம் திரும்பி பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் சரியா நடந்திருக்கலாம்னு தான் எரிக் மேயர் நினைப்பாராம்.

- டிவிடியும் லேசர் டிஸ்க் மாதிரியே போயிருந்தா என்ன பண்ணியிருப்போம்?

- எரிக்ம் ரீடும் அமேசானின் சலுகைய ஏற்றுக்கொண்டால் என்ன ஆகியிருக்கும்?

- பிளாக்பஸ்டர் அவங்களோட $50 மில்லியன் கேட்டதற்கு, ஓகே சொல்லியிருந்தா என்ன ஆகியிருக்கும்? இந்த வினாக்களுக்கு எல்லாம் விடையைத் தேடி எரிக் மேயர் நிறைய சிந்திச்சு இருக்காரு...

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருக்கக்கூடிய வித்தியாசம் ஏற்படுத்தியிருக்க நூற்றுக்கணக்கான கிளைகளை அவரால சுட்டிக்காட்ட முடியும், ஒவ்வொரு வெற்றிக்கும் விடாமுயற்சிய கடந்து அதிர்ஷ்டம் ரொம்ப முக்கியம்னு எரிக் மேயர் சொல்லுவாரு. அதிர்ஷ்டம், விடாமுயற்சி இதைத் தாண்டி அவர்களுடைய குழுவில் இருக்கக்கூடிய மக்கள பத்தியும் எரிக் பேசியிருக்கிறார்.

Netflix
Serialகளுக்கு ஏன் சினிமா பெயர்கள் வைக்கிறாங்க? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 8

சரியான ஸ்டார்ட்அப் டீம் இல்லன்னா இதுவரைக்கும் வந்திருப்பமா?? கிறிஸ்டினா கிஷ் இல்லாமல்? டெ ஸ்மித்? ஜிம் குக்? எரிக் மேயர்? மிட்ச் லோவ்?னு அவங்களுக்கு பக்கபலமா இருந்த மக்களோட பெயரையும் எரிக் மேயர் சொல்லி இருக்காரு.

PureAtria Integrity QAஐ வாங்கலனா Netflix எங்கே இருக்கும்; நாங்கள் தடுமாறாமல் இருந்திருந்தா என்ன நடந்திருக்கும் - எங்க பயணத்தில ஒன்றரை வருஷத்துக்கும் மேல - நிலுவை இல்லாத தேதிகளில், தாமதக் கட்டணச் சந்தா எங்களைக் காப்பாற்றியிருக்கு !!! இது ஒரு அற்புதமான பயணம், ஆரம்பத்தில, நான் இணையத்தில ஏதாவது விற்கும் நிறுவனத்தைத் தொடங்க விரும்பினேன்.

நெட்ஃபிலிக்ஸ் 25 வருஷம் பயணத்தை முடிச்சி இருக்கு இன்னும் நூறு ஆண்டுக்கு இந்த பயணம் தொடரணும்.. நெட்ஃபிலிக்ஸ் இப்படி உருவானதுக்கான பெருமையை நான் மட்டும் எடுத்துக்க மாட்டேன், என்கூட சேர்ந்து உழைச்ச எல்லாருக்குமே இந்த பெருமை சேரும்.. ஒரு சிக்கல தீக்கறதுக்கு சுவாரசியமான வழிகளையும் தேர்ந்தெடுத்திருக்கோம், சில சமயம் பைத்தியக்காரத்தனமான வழிகளில் தேர்ந்தெடுத்திருக்கோம் !! ஆனா உறுதியோட செயல்பட்டதால இப்படிப்பட்ட சாதனையை நாங்க படச்சிருக்கோம்..

இந்த முயற்சியை நான் எடுத்தப்ப எல்லாருமே என்கிட்ட "இது வொர்க் அவுட் ஆகாதுன்னு" சொல்லி இருக்காங்க.. நல்ல வேலை நான் அவங்க சொன்ன எதையுமே கேட்கல !! இப்ப சொல்றேன் எல்லாமே ஒர்க் அவுட் ஆகும் !!

- நெ.ராதிகா.

Netflix
'சரக்கு சாப்பிடணும் போல இருந்தனால, ATM-அ உடைச்சேன்' - கதறி அழுத திருடன் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com